IND vs AUS : என் திறமையை உணர்த்தி பேட்டிங்கில் முன்னேற அவர் தான் ஹெல்ப் பண்ணாரு – ஆஸி ஜாம்பவானை பாராட்டிய அக்சர் படேல்

axar
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா டெல்லியில் நடைபெற்ற 2வது போட்டியிலும் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா கடுமையாக போராடியும் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் 263 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 81 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா கடுமையாக போராடி தங்களது முதல் இன்னிங்ஸில் 262 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அக்சர் பட்டேல் 74, விராட் கோலி 44, அஷ்வின் 37 என முக்கிய வீரர்கள் தேவையான ரன்களை எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக நேதன் லயன் 5 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து 1 ரன் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா முன்பை விட மோசமாக செயல்பட்டு வெறும் 113 ரன்களுக்குச் சுருண்டது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 43 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜடேஜா 7 விக்கெட்டுகள் சாய்த்தார்.

பாண்டிங்கின் உதவி:
இறுதியில் 115 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ரோகித் சர்மா 31, புஜாரா 31* என முக்கிய வீரர்கள் தேவையான ரன்களை எடுத்து வெற்றி பெற வைத்தனர். அதனால் 2 – 0* (4) என்ற கணக்கில் இத்தொடரில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று பார்டர் – கவாஸ்கர் கோப்பையை தக்க வைத்துள்ள இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு செல்லும் வாய்ப்பையும் 99% உறுதி செய்துள்ளது. முன்னதாக இத்தொடரில் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளிலும் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் பேட்டிங், பவுலிங் ஆகிய 2 துறைகளிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டனர்.

Axar Patel Ashwin

அதே போல் 3வது ஸ்பின்னராக தேர்ந்தெடுக்கப்பட்ட அக்சர் பட்டேல் பந்து வீச்சில் பெரிய அளவில் விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்றாலும் பேட்டிங்கில் அஷ்வின் – ஜடேஜா ஆகியோரை விட அதிகமாக வெற்றியில் பங்காற்றி வருகிறார் என்றே சொல்லலாம். குறிப்பாக நாக்பூர் டெஸ்ட் போட்டியில் கடைசி நேரத்தில் களமிறங்கி முக்கியமான 84 ரன்கள் எடுத்த அவர் டெல்லி போட்டியில் அதே போன்ற தருணத்தில் மீண்டும் 74 ரன்கள் எடுத்து கேஎல் ராகுல் போன்ற சில டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் தவறுகளை சரி செய்து அவர்களை விட அபாரமாக பேட்டிங் செய்தார்.

- Advertisement -

அப்படி அடுத்தடுத்த போட்டிகளில் அரை சதமடித்து பேட்டிங்கில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் ஆரம்ப காலங்களில் கணிசமான ரன்களை அடிப்பவராக மட்டுமே இருந்து வந்தார். இருப்பினும் நாளடைவில் முன்னேற்றத்தைக் காணும் அளவுக்கு பயிற்சிகளை செய்து கடினமாக உழைத்து முன்னேறியுள்ள அவர் தன்னுடைய பேட்டிங்கில் முன்னேற்றத்தை காண்பதற்கு ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் கேப்டன் ரிக்கி பாண்டிங் உதவியதாக பாராட்டியுள்ளார். குறிப்பாக நல்ல தொடக்கத்தை பெற்று அடிக்கும் 30 – 40 போன்ற ரன்களை எவ்வாறு பெரிய ரன்களாக மாற்றி வெற்றிகரமாக பினிஷிங் செய்வது என்பதை பற்றி ஐபிஎல் தொடரின் போது அவரிடம் கற்றுக்கொண்டதாக தெரிவிக்கும் அக்சர் படேல் இது பற்றி பேசியது பின்வருமாறு.

Ponting

“டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் விளையாடும் போது நான் ரிக்கி பாண்டிங் அவர்களிடம் நிறைய பேசியுள்ளேன். குறிப்பாக என்னுடைய பேட்டிங்கில் எவ்வாறு முன்னேற்றத்தை காண வேண்டும் என்பதை பற்றி அவரிடம் கேட்டு கற்றுக்கொண்டு வருகிறேன். இந்திய அணியில் இருக்கும் போது கூட நான் பேட்ஸ்மேன்களிடம் நிறைய பேசுவேன். ஏனெனில் ஆரம்பத்தில் 30 – 40 ரன்களை எடுத்த நான் எனது திறமையை உணராமல் இருந்ததாக நினைக்கிறேன். அதனால் என்னால் நிறைய போட்டிகளை வெற்றிகரமாக பினிஷிங் செய்ய முடியவில்லை”

இதையும் படிங்க:வீடியோ : சீரியஸா பேசிகிட்டு இருக்கும்போது டெலிவரியான உணவு. கோலி கொடுத்த ரியாக்சன் – சுவாரசிய சம்பவம்

“எனவே இவை அனைத்தும் மன நிலைமையை பொறுத்ததாகும். சில நேரங்களில் ஆல்ரவுண்டராக நீங்கள் விக்கெட்டுகளை எடுத்தால் நிம்மதியாக இருக்கலாம். ஒருவேளை அது நடைபெறவில்லை என்றால் என்னுடைய 30 – 40 போன்ற ரன்களை போட்டியில் வெற்றியை பெற்றுக் கொடுக்கும் ரன்களாக மாற்ற வேண்டும் என்று நினைத்தேன். அவ்வாறு நான் நினைத்தது தற்போது எனது பேட்டிங்கில் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியுள்ளது என்று” கூறினார்.

Advertisement