சீரியஸா பேசிகிட்டு இருக்கும்போது டெலிவரியான உணவு. கோலி கொடுத்த ரியாக்சன் – சுவாரசிய சம்பவம்

Kohli
- Advertisement -

டெல்லி அருண் ஜேட்லி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்று முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நடைபெற்ற ஒரு சம்பவமானது தற்போது இணையத்தில் வீடியோவாக வைரலாகியுள்ளது. அந்த வகையில் பெவிலியனில் இருந்த விராட் கோலி மற்றும் டிராவிட் ஆகியோர் தீவிரமாக பேசிக் கொண்டிருந்தபோது விராட் கோலிக்கு உணவு வந்து விட்டதாக கூறி ஒருவர் வந்து தகவலை கொடுக்கிறார்.

அப்போது விராட் கோலி அந்த உணவு வந்ததை கேட்டதுமே குதூகலம் அடைந்து கை தட்டி இதோ சாப்பிட வருகிறேன் என்று கூறும் இந்த வீடியோவாக தற்போது அதிகளவு வைரலாகி வருகிறது. அந்த வகையில் இன்று டெல்லி மைதானத்தில் நடைபெற்று முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 114 ரன்கள் என்கிற எளிய இலக்கினை துரத்தி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

அதுமட்டுமின்றி இந்த நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் முன்னிலையும் வகிக்கிறது. இந்நிலையில் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது தான் இந்த சம்பவம் நடைபெற்றது.

அதன்படி இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி தனது இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாக 20 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்து வெளியேறினார். அதன் பின்னர் பெவிலியனில் அமர்ந்து போட்டியை தீவிரமாக பார்த்துக்கொண்டிருந்த விராட் கோலி அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிடிடம் போட்டி குறித்து ஏதோ தீவிரமாக பேசிக் கொண்டிருந்தார்.

- Advertisement -

அப்போதுதான் டெல்லியின் மிகவும் பிரபலமான உணவு வகைகளில் ஒன்றான குல்ச்சா சோலா என்கிற ஒரு உணவு அவருக்கு சாப்பிட வந்துள்ளதாக நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். அந்த உணவு வந்தது தெரிந்த அடுத்த நொடியே ராகுல் டிராவிட்-உடனான பேச்சை நிறுத்திய விராட் கோலி கையைத் தட்டி இதோ வந்து விடுகிறேன் என்று அந்த உணவை கொண்டு போய் வைக்க சொல்கிறார்.

இதையும் படிங்க : IND vs AUS : இதுக்கு மேலயும் அவருக்கு சேன்ஸ் குடுத்தீங்க. கடுப்பாயிடுவோம் பாத்துக்கோங்க – ரசிகர்கள் கொந்தளிப்பு

இதனை பார்த்த டிராவிடும் விராட் கோலியின் இந்த செயலைக் கண்டு சிரிப்பது போன்று இந்த வீடியோ அமைந்துள்ளது. டெல்லியை சேர்ந்த விராட் கோலி அங்கு மிகவும் பிரபலமான இந்த குல்ச்சா சோலாவை விரும்பி சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement