IND vs AUS : இதுக்கு மேலயும் அவருக்கு சேன்ஸ் குடுத்தீங்க. கடுப்பாயிடுவோம் பாத்துக்கோங்க – ரசிகர்கள் கொந்தளிப்பு

KL-Rahul
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி துவங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியானது இன்று போட்டியின் மூன்றாம் நாளில் முடிவுக்கு வந்தது. அதன்படி இந்த போட்டியில் போட்டியிலும் வெற்றிபெற்ற இந்திய அணியானது இந்த தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

Khawaja

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா தங்களது முதல் இன்னிங்சில் 263 ரன்களை குவித்தது. அதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 262 ரன்கள் குவித்தது. பின்னர் ஒரு ரன் முன்னிலையுடன் தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது 113 ரன்களை மட்டுமே குவித்ததால் 114 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கு இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அதன்படி தொடர்ந்து விளையாடிய இந்திய அணியானது 26.4 ஓவரிலேயே 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 118 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடிய இந்திய அணியின் துவக்க வீரரான கே.எல் ராகுல் மீது ரசிகர்கள் பெருமளவு கண்டனங்களை முன்வைத்து வருவது சமூக வலைதளத்தில் பெரிய அளவில் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது

KL Rahul 1

ஏனெனில் இந்த தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியில் 20 ரன்கள் மட்டுமே குவித்திருந்த கே.எல் ராகுல் இந்த இரண்டாவது போட்டியிலாவது சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்த இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் 17 ரன்களை குவித்த அவர் இரண்டாவது இன்னிங்ஸில் 114 ரன்கள் தான் இலக்கு என்று தெரிந்தும் ஒரு ரன்னில் நடையை கட்டினார்.

- Advertisement -

இப்படி இவர் தொடர்ச்சியாக சொதப்பி வருவது ரசிகர்கள் மத்தியில் பெருமளவு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் சுப்மன் கில், இஷான் கிஷன் போன்றோர் மிகச் சிறப்பான ஃபார்மில் இருந்தும் வாய்ப்புக்காக காத்திருக்கும் போது துணைக்கேப்டன் என்ற பதவியினால் நேரடியாக இவர் தொடர்ச்சியாக வாய்ப்புகளை பெற்று வருகிறார். அதோடு டெஸ்ட் கிரிக்கெட்டில் இவ்வளவு போட்டிகள் விளையாடியும் இவர் குறைவான அளவில் தான் ரன்களை அடித்துள்ளார்.

இதையும் படிங்க : அவங்கள டெயில் எண்டர்கள்னு மட்டும் சொல்லாதீங்க – ஆஸியின் வெற்றியை பறித்த இந்திய வீரர்களை பாராட்டிய நேதன் லயன்

இப்படி மோசமான பார்மில் இருக்கும் இவருக்கு ஏன் வாய்ப்புகள் தருகிறார்கள் என்ற விமர்சனங்கள் இருந்தாலும் அவர் அணியின் நிர்வாகம் மூலம் தொடர்ச்சியான ஆதரவினை பெற்று தொடர்ந்து விளையாடியும் வருகிறார். ஆனால் இனியும் அவரை அணியில் சேர்க்கக்கூடாது என்றும் அவரை வெளியேற்றிவிட்டு சுப்மன் கில்லை துவக்க வீரராக மாற்றங்கள் என்று ரசிகர்கள் சமூக வலைதளத்தின் மூலம் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement