அவங்கள டெயில் எண்டர்கள்னு மட்டும் சொல்லாதீங்க – ஆஸியின் வெற்றியை பறித்த இந்திய வீரர்களை பாராட்டிய நேதன் லயன்

Lyon
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் சொந்த மண்ணில் நடைபெறும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா டெல்லியில் நடைபெற்ற 2வது போட்டியிலும் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தாலும் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் 263 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 81 ரன்களும் பீட்டர் ஹேண்ட்ஸ்கோப் 72* ரன்களும் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா தங்களது முதல் இன்னிங்ஸில் கடுமையாகப் போராடி 262 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக அக்சர் பட்டேல் 74 ரன்களும் விராட் கோலி 44 ரன்களும் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக நேதன் லயன் விக்கெட்டுகள் சாய்த்தார். அதை தொடர்ந்து 1 ரன் முன்னிலையுடன் களமிறங்கி ஆஸ்திரேலியா முன்பை விட மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வெறும் 113 ரன்களுக்குச் சுருண்டது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 43 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 7 விக்கெட்டுகள் எடுத்தார்.

டெயில் எண்டர்கள் கிடையாது:
இறுதியில் 115 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ரோகித் சர்மா 31, புஜாரா 31*, விராட் கோலி 20, கேஎஸ் பரத் 23* என முக்கிய வீரர்கள் தேவையான ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்று 2 – 0* (4) என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த வெற்றியால் ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்பையும் இந்தியா 99% உறுதி செய்துள்ளது. முன்னதாக இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் ரோகித் சர்மா 32, ராகுல் 17, புஜாரா 0, ஸ்ரேயாஸ் ஐயர் 4, கேஎஸ் பரத் 6 என முக்கிய பேட்ஸ்மேன்கள் நேதன் லயனின் தரமான சுழல் பந்து வீச்சில் சிக்கியதால் 139/7 என இந்தியா தடுமாறியது.

Axar Patel Ashwin

அப்போது சுழலுக்கு சாதகமான டெல்லி மைதானத்தில் 100 ரன்களுக்கு மேல் ஆஸ்திரேலியா முன்னிலை பெற்று விட்டால் தோல்வி உறுதியாகி விடும் என்று இந்திய ரசிகர்கள் கவலையடைந்தனர். இருப்பினும் நாங்கள் இருக்கிறோம் என்ற வகையில் பேட்டிங் செய்த அக்சர் பட்டேல் – ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்கு சிம்ம சொப்பனமாக மாறி 8வது விக்கெட்டுக்கு 114 ரன்கள் அபார பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை செங்குத்தாக தூக்கி நிறுத்தினர். அந்த பார்ட்னர்ஷிப் காரணமாக 100க்கும் மேற்பட்ட ரன்கள் முன்னிலை பெற வேண்டிய ஆஸ்திரேலியா இறுதியில் வெறும் 1 ரன் மட்டுமே முன்னிலை பெற்று ஏமாற்றத்தை சந்தித்தது.

- Advertisement -

பொதுவாக 8, 9 ஆகிய இடங்களில் டெயில் எண்டர்கள் எனப்படும் பவுலர்கள் களமிறங்கும் இடத்தில் பவுலிங் ஆல் ரவுண்டர்களாக களமிறங்கிய இந்த ஜோடியில் அக்சர் பட்டேல் 74 ரன்களும் அஷ்வின் 37 ரன்களும் எடுத்து ஆஸ்திரேலியாவுக்கு பெரிய சவாலை கொடுத்தனர். இந்நிலையில் அஷ்வின் – அக்சர் ஆகியோரை டெயில் எண்டர்கள் அல்லது லோயர் பேட்ஸ்மேன்கள் என்று சொல்லவே முடியாது என நேதன் லயன் பாராட்டியுள்ளார். குறிப்பாக தங்களின் வெற்றியை பறிக்கும் அளவுக்கு அபாரமாக பேட்டிங் செய்த அவர்கள் உலகின் இதர சில அணிகளில் டாப் 6 இடங்களில் விளையாடுவதற்கு தகுதியானவர்கள் என்று பாராட்டும் அவர் இது பற்றி செய்தியாளர்களிடம் பேசியது பின்வருமாறு.

“அவர்கள் நிச்சயமாக லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கிடையாது என்பதை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். எனது பார்வையில் இந்த உலகில் இருக்கும் இதர சில அணிகளில் அஷ்வின் – அக்சர் ஆகியோர் தாராளமாக டாப் 6 இடங்களில் விளையாடும் தகுதியுடையவர்கள். இருப்பினும் இந்திய அணியில் பெரிய டாப் ஆர்டர் இருப்பதால் அவர்களுக்கு கடைசியில் தான் வாய்ப்பு கிடைக்கிறது” என்று கூறினார்.

இதையும் படிங்க: IND vs AUS : சொந்த ஊரான டெல்லியில் சதமடிக்கவில்லை என்றாலும் சச்சினை முந்தி புதிய உலக சாதனை படைத்த கிங் கோலி

முன்னதாக 8, 9 ஆகிய இடங்களில் ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல் போன்ற ஆல் ரவுண்டர்கள் பேட்டிங் செய்வதற்கு இந்தியா சொக்கத்தங்கமான அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என்ற வகையில் முன்னாள் வீரர் இர்பான் பதான் தனது ட்விட்டரில் பாராட்டினார். இருப்பினும் டாப் ஆர்டரில் ராகுல் போன்ற சில வீரர்கள் செய்யும் சொதப்பலை இது போன்ற லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தான் சமீப காலங்களில் சரி செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement