தல தோனியின் சாதனையை 17 வருடங்கள் கழித்து முறியடித்த அக்சர் படேல் – ஓ இப்படி ஒரு விஷயம் இருக்கா?

Axar-Patel-and-Dhoni
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 312 ரன்கள் என்கிற இலக்கினை வெற்றிகரமாக சேசிங் செய்து அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. ஏற்கனவே இவ்விரு அணிகளும் மோதிய முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேளையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் இந்த தொடரையும் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி தொடரில் முன்னிலை வகிக்கிறது.

Axar Patel

- Advertisement -

அதன்படி நேற்று குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற முக்கியமான இந்த இரண்டாவது போட்டியில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 311 ரன்களை குவிக்கவே இந்திய அணிக்கு 312 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் மிகச் சிறப்பாக விளையாடிய இந்திய வீரர்கள் இலக்கினை நோக்கி சரியான வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்தனர்.

ஆனாலும் இறுதி கட்டத்தில் யாராவது ஒருவர் அதிரடியாக விளையாட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அந்த வேளையில் ஏழாவது வீரராக களமிறங்கிய அக்சர் பட்டேல் 35 பந்துகளை சந்தித்த வேளையில் 3 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் என அமர்க்களமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 64 ரன்கள் குவித்து அசத்தினார். அவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாக இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு மட்டுமின்றி அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

Axar Patel IND vs WI

இந்நிலையில் இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அக்சர் பட்டேல் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனியின் ஒரு முக்கியமான சாதனையை தகர்த்து சாதனை புரிந்துள்ளார்.

- Advertisement -

அதன்படி இந்திய அணிக்காக ஏழாவது விக்கெட்டுக்கு களமிறங்கி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் என்ற பெருமையை தோனி வைத்திருந்தார். கடந்து 2005 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் ஏழாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய தோனி 3 சிக்ஸர்கள் அடித்திருந்தார்.

இதையும் படிங்க : என்னோட பதவிக்காலத்தில் இந்திய அணி உலககோப்பையை வெல்லாதது ஏன் தெரியுமா? – வாய் திறந்த ரவி சாஸ்திரி

அதனை தொடர்ந்து தற்போது 17 ஆண்டுகளுக்கு பிறகு ஏழாவது இடத்தில் களமிறங்கி அக்சர் பட்டேல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்த போட்டியில் 5 சிக்ஸர்களை விளாசி தோனியின் 17 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான கடைசி ஒருநாள் போட்டி வரும் ஜூலை 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement