என்னோட பதவிக்காலத்தில் இந்திய அணி உலககோப்பையை வெல்லாதது ஏன் தெரியுமா? – வாய் திறந்த ரவி சாஸ்திரி

Shastri
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி அணில் கும்ப்ளேவிற்கு பிறகு இந்திய அணியின் பயிற்சியாளராக பதவியேற்று இந்திய அணியை சிறப்பாக வழி நடத்தினார். அவரது தலைமையில் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் ஒன் அணியாக மாறியது மட்டுமின்றி இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் போன்ற வெளிநாடுகளிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிகளை பதிவு செய்திருந்தது.

Shastri

- Advertisement -

ஆனால் இவரது தலைமையின் கீழ் இந்திய அணி ஒருமுறை கூட உலகக் கோப்பையை கைப்பற்றவில்லை .அந்த விஷயம் ஏற்கனவே சமூகவலைதளத்தில் பெரிய அளவு பேசுபொருளாக மாறியது. ஏனெனில் ரவி சாஸ்திரியின் பயிற்சியின் கீழ் இந்திய அணி 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியிலும் அதை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியிலும் தோற்றிருந்தது.

அதனை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் தோல்வி அடைந்தது ஏமாற்றத்தையே தந்தது. இப்படி தொடர்ச்சியாக ஐசிசி கோப்பைகளை இந்திய அணி தவறவிட்டதன் காரணமாக கேப்டன் கோலியும், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் தங்களது பதவியில் இருந்து விலகினர்.

Hardik Pandya

இந்நிலையில் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி தற்போது இந்திய அணி ஏன் தனது தலைமையில் ஒரு முறை கூட உலகக் கோப்பையை வெல்லவில்லை என்பது குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : டாப் 6-ல் பந்துவீசக்கூடிய ஒரு வீரரை நான் எப்போதும் விரும்புகிறேன்.

- Advertisement -

அந்த சமயத்தில் ஹார்டிக் பாண்டியா காயம் அடைந்து இருந்ததால் அது இந்திய அணிக்கு ஒரு பெரிய பிரச்சனை ஏற்படுத்தியது. இதனால் இந்திய அணி நிறைய வெற்றிகளை இழக்க வேண்டியிருந்தது. அதன் காரணமாகவே இரண்டு உலக கோப்பையில் இந்திய அணியால் சோபிக்க முடியாமல் போனது.

இதையும் படிங்க : IND vs WI : தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுத்தா கலக்குவாரு – சஞ்சு சம்சன் விஷயத்தில் ஒரே நாளில் பல்டி அடித்த பாக் வீரர் புதிய கருத்து

ஏனெனில் டாப் 6-சில் நன்றாக பந்துவீச தெரிந்த ஒரு வீரர் இடம் பெறுவது என்பது எப்போதுமே இந்திய அணியில் காலியாக இருந்தது. இதற்கு யாரையாவது தேர்வு செய்யுங்கள் என்று தேர்வாளர்களிடம் கூறினோம். ஆனால் அந்த பிரச்சனையை சரி செய்யவே முடியவில்லை என்று ரவி சாஸ்திரி பதில் அளித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement