IND vs WI : தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுத்தா கலக்குவாரு – சஞ்சு சம்சன் விஷயத்தில் ஒரே நாளில் பல்டி அடித்த பாக் வீரர் புதிய கருத்து

Sanju Samson
- Advertisement -

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நகரில் ஜூலை 24-ஆம் தேதியான நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா போராடி திரில் வெற்றி பெற்றது. அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 50 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு 311/6 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக தொடக்க வீரராக களமிறங்கி 49 ஓவர்கள் வரை அற்புதமாகவும் நங்கூரமாகவும் பேட்டிங் செய்த ஷாய் ஹோப் சதமடித்து 8 பவுண்டரி 3 சிக்சருடன் 115 (135) ரன்கள் விளாசினார். அவருடன் கேப்டன் நிக்கோலஸ் பூரன் 74 (77) ரன்களும் கெய்ல் மேயர்ஸ் 39 (23) ரன்களும் எடுத்தனர்.

Axar Patel

- Advertisement -

இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஷார்துல் தாகூர் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதை தொடர்ந்து 312 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ஷிகர் தவான் 13 (31) ரன்களிலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூரியகுமார் யாதவ் 9 (8) ரன்களிலும் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர். இருப்பினும் மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில் 43 (31) ரன்களும் ஷ்ரேயஸ் ஐயர் 63 (71) ரன்களும் சஞ்சு சாம்சன் 54 (51) ரன்களும் விளாசி ஆட்டமிழந்தனர். இறுதியில் தீபக் ஹூடா 33 (36) ரன்கள் எடுக்க மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் 3 பவுண்டரி 5 சிக்சருடன் 64* (35) ரன்களை தெறிக்கவிட்ட அக்சர் பட்டேல் அபார பினிசிங் கொடுத்து வெற்றிபெற வைத்தார்.

அசத்திய சாம்சன்:
முன்னதாக முதல் போட்டியிலும் இதேபோல் 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற இந்தியா கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாத நிலைமையில் ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களுடன் வெஸ்ட் இண்டீசை அதன் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்து 2 – 0* (3) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.

Sanju Samson

இப்போட்டியில் 79/3 என்ற இக்கட்டான சூழ்நிலையில் களமிறங்கிய சஞ்சு சாம்சன் – ஷ்ரேயஸ் ஐயர் உடன் இணைந்து 99 ரன்கள் முக்கியமான பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். குறிப்பாக 3 பவுண்டரி 3 சிக்சருடன் அதிரடியாக 54 (51) ரன்களை குவித்த அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் அரை சதத்தை அடித்து நிம்மதியடைந்தார்.

- Advertisement -

ஏனெனில் கடந்த 2015இல் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான அவருக்கு கடந்த 7 வருடங்களில் 5 வருடத்திற்கு ஒருமுறை 2 வருடத்திற்கு ஒருமுறை 6 மாதத்திற்கு ஒருமுறை என்ற வகையில் 14 போட்டிகளில் மட்டுமே தொடர்ச்சியற்ற வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. அதில் 13 போட்டிகளில் தடுமாறிய அவர் ஒரு வழியாக அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில் முதல் முறையாக அரை சதமடித்தார். ஆனாலும் அதன்பின் நடந்த இங்கிலாந்து டி20 தொடரிலும் அடுத்ததாக நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரிலும் நியாயமே இல்லாமல் கழற்றி விடப்பட்டுள்ளார்.

Rishabh Pant Sanju Samson

தீடீர் பல்டி:
அந்த நிலைமையில் கடந்த ஜூலையில் இலங்கை மண்ணில் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகி 43 ரன்கள் குவித்த அவர் இத்தொடரின் முதல் போட்டியில் 2-வது வாய்ப்பை பெற்று வெறும் 12 ரன்களில் அவுட்டாகி கிடைத்த வாய்ப்பை பொன்னாக மாற்ற தவறினார். அதனால் கிடைக்கும் வாய்ப்புகளை வீணடிப்பவராக இருக்கும் சஞ்சு சாம்சனை பேட்டிங் வரிசையில் மேலிடத்தில் களமிறக்கினால் அதிரடியாக விளையாடுவதற்கு அவர் ஒன்றும் ரிஷப் பண்ட் கிடையாது என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா விமர்சித்திருந்தார்.

- Advertisement -

ஆனால் நேற்றைய போட்டியில் அரைசதம் அடித்த காரணத்தால் அப்படியே பல்டி அடித்துள்ள அவர் தொடர்ச்சியான வாய்ப்புகளை பெற்றால் சஞ்சு சாம்சன் சிறப்பாக செயல்படுவார் என்று தற்போது பாராட்டியுள்ளார். இது பற்றி 2-வது போட்டி முடிந்த பின் அவர் பேசியது பின்வருமாறு.

Kaneria

” சஞ்சு சாம்சன் சிறந்த வீரர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர் தொடர்ச்சியாக அணிக்குள் செல்வதும் வெளியேறுவதுமாக உள்ளார். எனவே அவர் தொடர்ச்சியாக வாய்ப்பு பெற்றால் நிச்சயம் சிறப்பாக செயல்படுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்”

இதையும் படிங்க: IND vs WI : தேவையா இது, வித்யாசமான ஷாட் அடிக்க முயற்சித்து பல்ப் வாங்கிய இளம் இந்திய வீரர் – வீடியோ உள்ளே

“அவர் எந்த இடத்தில் பேட்டிங் செய்தாலும் அழகாக செய்கிறார். அதேபோல் நீண்ட இன்னிங்ஸ் விளையாடும் திறமையும் அவரிடம் உள்ளது. அவர் தன்னுடைய பேட்டிங்கில் கவனத்துடன் செயல்படுகிறார். தனது முதல் அரை சதத்தை அடித்த அவர் சிறப்பாக செயல்பட்ட நிலையில் துரதிஸ்டவசமாக தீபக் ஹூடா அழைத்ததால் ரன் அவுட்டானார். அதுவரை அவர் முதிர்ச்சியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்” என்று கூறினார். இதைப் பார்க்கும் ரசிகர்கள் ஒரே நாளில் இப்படி பல்டி அடிக்கும் அளவுக்கு பேசுகிறாரே என்று அவரை சமூக வலைதளங்களில் கலாய்க்கிறார்கள்.

Advertisement