ஹாட்ரிக் சிக்ஸர்களை தெறிக்க விட்ட அக்சர் படேல் – டிகே, தோனியை மிஞ்சி புதிய வரலாற்று சாதனை

Axar Patel Sixes
- Advertisement -

இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வரும் இந்தியா முதல் போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அசத்தினாலும் 2வது போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது. புனே கிரிக்கெட் மைதானத்தில் ஜனவரி 5ஆம் தேதியன்று இரவு 7 மணிக்கு நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை 20 ஓவரில் அதிரடியாக செயல்பட்டு 206/6 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு பவர் பிளே ஓவரில் சுமாராக பந்து வீசிய இந்தியாவை அடித்து நொறுக்கி 80 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த நிசாங்கா 33 (35) ரன்களும் குசால் மெண்டிஸ் 52 (31) ரன்களும் எடுத்தனர்.

அவர்களை தொடர்ந்து டீ சில்வா 3, ராஜபக்சா 2 என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானாலும் 4 சிக்ஸர்களை தெறிக்க விட்ட அசலங்கா 37 (19) ரன்கள் எடுத்து அவுட்டானார். கடைசி நேரத்தில் டெத் ஓவர்களில் இந்தியாவை பிரித்து மேய்ந்த கேப்டன் சனாக்கா 2 பவுண்டரி 6 சிக்ஸருடன் 56* (22) ரன்கள் குவித்து மிரட்டல் பினிஷிங் கொடுத்தார். சுமாராக பந்து வீசிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக உம்ரான் மாலிக் 3 விக்கெட்கள் சாய்த்தார்.

- Advertisement -

போராடிய அக்சர்:
அதை தொடர்ந்து 207 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு இஷான் கிசான் 2, சுப்மன் கில் 5, ராகுல் திரிபாதி 5, கேப்டன் பாண்டியா 12, தீபக் ஹூடா 9 என முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். அதனால் 57/5 என சரிந்து தோல்வியின் பிடியில் சிக்கிய இந்தியாவை அடுத்து களமிறங்கிய அக்சர் பட்டேல் மறுபுறம் நின்ற சூரியகுமார் யாதவுடன் இணைந்து சரவெடியாக பேட்டிங் செய்து காப்பாற்ற போராடினார். குறிப்பாக இலங்கையின் நம்பர் ஒன் ஸ்பின்னரான வணிந்து ஹசரங்காவின் 15வது ஓவரின் முதல் 3 பந்துகளில் அடுத்தடுத்த சிக்சர்களை பறக்க விட்டு அவர் ஹாட்ரிக் சிக்ஸர்களை தெறிக்க விட்டு இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்தார்.

அவருடன் முடிந்தளவுக்கு அதிரடியாக பேட்டிங் செய்த சூரியகுமார் யாதவ் 6வது விக்கெட்டுக்கு 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றிக்கு போராடிய போது 3 பவுண்டரி 3 சிக்சருடன் 51 (36) ரன்களில் முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார். அந்த நேரத்தில் வந்த சிவம் மாவி யாருமே எதிர்பாராத வகையில் 2 பவுண்டரி 2 சிக்சரை பறக்க விட்டதால் வெற்றியை நெருங்கிய இந்தியாவுக்கு கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்டது.

- Advertisement -

ஆனால் அப்போது முடிந்தளவுக்கு சிங்கமாய் போராடிய அக்சர் பட்டேல் 3 பவுண்டரி 6 சிக்ஸருடன் 65 (31) ரன்களில் ஆட்டமிழக்க சிவம் மாவியும் அவுட்டானதால் 20 ஓவர்களில் 190/8 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா பரிதாபமாக தோற்றது. அதனால் வென்ற இலங்கை 1 – 1* (3) என்ற கணக்கில் தொடரை சமன் செய்ய 56 ரன்களையும் 2 விக்கெட்டும் எடுத்து முக்கிய பங்காற்றிய கேப்டன் தசுன் சனாக்கா ஆட்டநாயகன் விருதை வென்றார். இருப்பினும் அவரை விட 2 விக்கெட்டுகளையும் கடைசி நேரத்தில் அதிரடியாக 65 ரன்களையும் குவித்து வெற்றிக்கு போராடிய அக்சர் பட்டேல் அறிவிக்கப்படாத ஆட்டநாயகனாக செயல்பட்டு கோடிக்கணக்கான இந்திய ரசிகரில் நெஞ்சங்களை அள்ளினார்.

1. குறிப்பாக 7வது இடத்தில் களமிறங்கி 65 ரன்கள் குவித்த அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 7வது இடத்தில் களமிறங்கி அரைசதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையும் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய வீரர் என்ற தோனி, தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட வீரர்களின் சாதனையும் தகர்த்து புதிய சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. அக்சர் படேல் : 65, இலங்கைக்கு எதிராக, 2023*
2. ரவீந்திர ஜடேஜா : 44*, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2020
3. தினேஷ் கார்த்திக் : 41, வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக, 2022
4. எம்எஸ் தோனி : 38, இங்கிலாந்துக்கு எதிராக, 2012

- Advertisement -

2. அத்துடன் 6வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய ஜோடி (91 ரன்கள்) என்ற சாதனையும் அவர் சூரியகுமாருடன் இணைந்து படைத்தார். இதற்கு முன் கடந்த 2021இல் விராட் கோலி – ஹர்திக் பாண்டியா இங்கிலாந்துக்கு எதிராக 70 ரன்கள் குவித்ததே முந்தைய சாதனையாகும்.

இதையும் படிங்க: ஹாட்ரிக் நோ-பால் போட்ட அர்ஷிதீப், அறிமுகமான 6 மாதத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2 மோசமான உலக சாதனை

3. மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் 50+ ரன்கள் மற்றும் 2 விக்கெட் எடுத்த 3வது இந்தியர் என்ற பெருமையை யுவராஜ் சிங் (2009) ஹர்திக் பாண்டியா (2022) ஆகியோருக்கு பின் அக்சப் படேல் பெற்றுள்ளார்.

Advertisement