ஹாட்ரிக் நோ-பால் போட்ட அர்ஷிதீப், அறிமுகமான 6 மாதத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2 மோசமான உலக சாதனை

Arshdeep SIngh No Ball
- Advertisement -

இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி முதல் போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வென்றாலும் 2வது போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது. ஜனவரி 5ஆம் தேதியன்று புனே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 206 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு 80 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து மிரட்டலான தொடக்கம் கொடுத்த ஓப்பனிங் ஜோடியில் நிஷாங்கா 33 ரன்களும் குசால் மெண்டிஸ் 52 ரன்களும் எடுத்தனர்.

மிடில் ஆர்டர் டீ சில்வா 3, ராஜபக்சா 2 என முக்கிய வீரர்கள் ஒற்றை இலக்க ரண்களில் அவுட்டானாலும் 4 சித்தர்களை பறக்க விட்ட அசலங்கா 37 (19) ரன்களும் கடைசி நேரத்தில் 2 பவுண்டரின் 6 சிக்சரை தெறிக்க விட்ட கேப்டன் சனாக்கா 56* (22) ரன்களும் குவித்து அபார பினிஷிங் கொடுத்தார். சுமாராக பந்து வீசிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக உம்ரான் மாலிக் 3 விக்கெட்களை எடுத்தார். அதைத் தொடர்ந்து 207 என்ற கடினமான இலக்கை சேசிங் செய்த இந்தியாவுக்கு இஷான் கிசான் 2, சுப்மன் கில் 5, ராகுல் திரிபாதி 5, கேப்டன் பாண்டியா 12, தீபக் ஹூடா 9 என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

நோ-பால் நாயகன்:
அதனால் 57/5 என சரிந்து தோல்வியின் பிடியில் சிக்கி இந்தியாவை 6வது விக்கெட்டுக்கு 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்ற முயன்ற சூரியகுமார் யாதவ் 3 பவுண்டரி 3 சிக்ஸருடன் 51 (36) ரன்களில் ஆட்டமிழந்தார். அவருடன் ஜோடி சேர்ந்து பட்டையை கிளப்பிய அக்சர் பட்டேல் உயிரைக் கொடுத்து போராடிய போதிலும் 3 பவுண்டரி 6 சிக்ஸருடன் 65 (31) ரன்கள் குவித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். இறுதியில் 2 பவுண்டரி 2 சிக்சருடன் போராடிய சிவம் மாவியும் அவுட்டானதால் 20 ஓவர்களில் 190/8 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா பரிதாபமாக தோற்றது.

அதனால் 1 – 1* (3) என்ற கணக்கில் தொடரை சமன் செய்த இலங்கையின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்ற சனாகாவை விட 2 ஓவரில் 37 ரன்களை 18.50 என்ற எக்கனாமியில் மோசமாக பந்து வீசிய அர்ஷிதீப் சிங் தான் உண்மையான ஆட்டநாயக்கனாக செயல்பட்டதாக இந்திய ரசிகர்களே சமூக வலைதளங்களில் வேதனையை வெளிப்படுத்துகிறார்கள். ஏனெனில் கடந்த போட்டியில் காயத்தால் பங்கேற்காத அவர் இப்போட்டியில் தன்னுடைய முதல் ஓவரிலேயே முதல் 5 பந்துகளில் 4, 0, 0, 1, 0 என 5 ரன்களை மட்டுமே கொடுத்தார்.

- Advertisement -

ஆனால் எளிதாக வீசி முடிக்க வேண்டிய கடைசிப் பந்தில் நோ-பால் வீசிய அவர் மீண்டும் வீசிய பந்தை நோ-பாலாக வீசி பவுண்டரி கொடுத்தார். அதனால் மீண்டும் வீசிய பந்தை நோ-பாலாக வீசிய அவர் சிக்ஸர் கொடுத்தார். அப்படி அடுத்தடுத்த 3 நோ-பால்களை வீசிய அவர் ஒரு வழியாக சிங்கிள் கொடுத்து ஓவரை முடித்தார். மேலும் 18வது ஓவரிலும் நோ-பால் வீசிய அவரால் தப்பிய சனாக்கா இந்தியாவை தண்டித்தார். மொத்ததில் 12 பந்துகளை வீசிய அவர் 5 நோ-பால்களை வீசினார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் நோ-பால்களை வீசிய முதல் இந்திய பந்து வீச்சாளர் என்ற படுமோசமான சாதனையை அர்ஷிதீப் படைத்துள்ளார்.

மேலும் 5 நோ-பால்களை வீசிய அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிக நோ-பால்களை வீசிய பவுலர் என்ற உலக சாதனையை ஹமிஸ் ரூத்தர்போர்ட் உடன் பகிர்ந்து கொண்டார். அதை விட சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக அதிக நோ-பால்களை வீசிய பவுலர் என்ற பரிதாப உலக சாதனையும் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. அர்ஷிதீப் சிங் : 12*
2. ஹசன் அலி/கீமோ பால்/ஓசினோ தாமஸ் : தலா 11
3. ரிச்சர்ட் ங்கரவா : 10

இதையும் படிங்க: ஆரம்பத்திலேயே எச்சரித்த முரளி கார்த்திக், அதீத தைரியத்தால் வெற்றியை கோட்டை விட்ட பாண்டியா – நடந்தது என்ன?

இதில் 2, 3 ஆகிய இடங்களில் உள்ள வீரர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட வருடங்களில் விளையாடி இந்த பரிதாப சாதனையை படைத்துள்ளார்கள். ஆனால் கடந்த 2022 ஜூலை மாதம் அறிமுகமான அர்ஷிதீப் 6 மாதங்களிலேயே இப்படி 2 மோசமான நோ-பால் உலக சாதனைகளை படைத்து இந்திய ரசிகர்களை தலை குனிய வைத்துள்ளார். சொல்லப்போனால் கடந்த 2016இல் அறிமுகமான ஜஸ்பிரித் பும்ரா கடந்த 6 வருடங்களில் 8 நோ-பால்களை மட்டுமே வீசி இந்திய அளவிலான பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement