CWC 2023 : தரமான ஸ்டீவ் ஸ்மித்தை பெட்டி பாம்பாக அடக்கும் ஜடேஜா – ஸ்டூவர்ட் ப்ராடை மிஞ்சி மாஸ் சாதனை

Steve Smith vs Ravindra Jadeja.jpeg
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 8ஆம் தேதி நடைபெற்ற 5வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 49.3 ஓவரில் 199 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அந்த அணி அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 46, டேவிட் வார்னர் 41 ரன்கள் எடுக்க பந்து வீச்சிலேயே பாதி வெற்றியை உறுதி செய்த இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்களும் பும்ரா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்களும் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 200 என்ற சுலபமான இலக்கை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா, இஸ்ஸான் கிசான், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய 3 வீரர்கள் அடுத்தடுத்தது ஹேசல்வுட், ஸ்டார்க் வேகத்தில் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

மாயாஜால ஜடேஜா:
அதனால் 2/3 என்ற மோசமான துவக்கத்தை பெற்ற இந்தியாவின் தோல்வி உறுதி என்று ரசிகர்கள் கவலையடைந்த போது மிடில் ஆர்டரில் நங்கூரமாக விளையாடிய விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் ஆஸ்திரேலியா பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக மாறி வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். அதில் ராகுல் 97* (115) ரன்களும் விராட் கோலி 85 (116) ரன்களும் எடுத்ததால் 41.2 ஓவரிலேயே 201/4 ரன்கள் அடுத்த இந்தியா அபாரமான வெற்றி பெற்றது.

இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ராகுல் ஆட்டநாயகன் விருதை வென்றாலும் பந்து வீச்சில் 10 ஓவரில் 28 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்த ரவீந்திர ஜடேஜா கருப்பு குதிரையாக செயல்பட்டார் என்று சொல்லலாம். ஏனெனில் 110/2 என்ற நல்ல துவக்கத்தை பெற்றிருந்த ஆஸ்திரேலியாவை மிடில் ஓவர்களில் ஸ்மித், லபுஸ்ஷேன், அலெக்ஸ் கேரி ஆகிய 3 முக்கிய வீரர்களை அடுத்தடுத்த ஓவர்களில் அவுட்டாக்கிய அவர் ஆஸ்திரேலியாவில் 199 ரன்களுக்கு சுருட்ட உதவினார்.

- Advertisement -

அதை விட ஆஸ்திரேலியா பேட்டிங் துறையின் முதுகெலும்பு வீரராக அறியப்படும் ஸ்டீவ் ஸ்மித் தடுப்பை உடைத்து ஜடேஜா கிளீன் போல்ட்டாக்கியது விராட் கோலி உட்பட அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அதை விட இதையும் சேர்த்து டெஸ்ட் ஒருநாள், டி20 ஆகிய 3 வகையான கிரிக்கெட்டிலும் ஸ்டீவ் ஸ்மித்தை 18 முறை ரவீந்திர ஜடேஜா அவுட்டாக்கியுள்ளார்.

இதையும் படிங்க: CWC 2023 : மூழ்கிய இந்தியாவை காப்பாற்றிய கோலி – ராகுல் ஜோடி.. ஆஸிக்கு எதிராக 24 வருட புதிய சாதனை

இதன் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் மகத்தான வீரராக அறியப்படும் ஸ்டீல் ஸ்மித்தை அதிக முறை அவுட்டாக்கிய வீரர் என்ற சிறப்பான சாதனையை ரவீந்திர ஜடேஜா படைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக இங்கிலாந்தின் ஸ்டுவர்ட் பிராட் மற்றும் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் முறையே 17 மற்றும் 13 முறை ஸ்மித்தை அவுட்டாக்கியுள்ளனர். இதிலிருந்து ஸ்மித்தை அசால்ட்டாக ஜடேஜா பெட்டி பாம்பாக அடக்கி வருவது தெரிவது குறிப்பிடத்தக்கது.

Advertisement