ஒரே ஓவரில் ஹைதராபாத்க்கு தோல்வியை பரிசளித்த லக்னோவின் இளம் இந்திய வீரர் ! குவியும் பாராட்டு

Avesh Khan
- Advertisement -

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 4-ஆம் தேதியன்று நடைபெற்ற 12-வது லீக் போட்டியில் லக்னோ மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டிஒய் பாட்டில் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு துவங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்து வீசுவதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க வீரர் குயின்டன் டி காக் மற்றும் எவின் லெவிஸ் ஆகிய 2 தரமான வெளிநாட்டு அதிரடி வீரர்களை தலா 1 ரன்னில் தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர் அடுத்தடுத்த ஓவர்களில் அவுட் செய்து அசத்தினார்.

KL Rahul

- Advertisement -

அடுத்து வந்த இந்திய வீரர் மணிஷ் பாண்டே 11 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றியதால் 27/3 என மோசமான தொடக்கத்தைப் பெற்ற லக்னோவை நல்ல நிலைமைக்கு கொண்டுவர அதன் கேப்டன் கேஎல் ராகுல் போராடினார். அவருடன் நடு வரிசையில் களமிறங்கிய இளம் வீரர் தீபக் கூட உறுதுணையாக நின்றார்.

லக்னோ 169 ரன்கள் சேர்ப்பு:
ஆரம்பத்தில் மிரட்டிய ஹைதராபாத் பவுலிங்கை அதன்பின் மிரட்டிய இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிந்த லக்னோவை மீட்டெடுத்தது. இந்த ஜோடியில் 33 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் உட்பட 51 ரன்கள் எடுத்திருந்தபோது தீபக் ஹூடா அவுட்டானார். அவருடன் ஆரம்பம் முதல் நங்கூரமாக பேட்டிங் செய்து கொண்டிருந்த கேஎல் ராகுல் 50 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் உட்பட 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

Kane Wiiliamson

கடைசியில் இளம் வீரர் ஆயுஷ் படோனி 19 (12) ரன்கள் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழந்த லக்னோ 169 ரன்கள் சேர்த்தது. ஹைதராபாத் சார்பில் பந்துவீச்சில் கலக்கிய நடராஜன், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷெஃபார்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். அதை தொடர்ந்து 170 என்ற நல்ல இலக்கை துரத்திய ஹைதராபாத் அணிக்கு தொடக்க வீரர்கள் கேப்டன் கேன் வில்லியம்சன் 16 ரன்களிலும் அவருடன் களமிறங்கிய அபிஷேக் சர்மா 13 (11) ரன்களிலும் அவுட்டானார்கள்.

- Advertisement -

ஒரே ஓவரில் மாற்றிய அவேஷ் கான்:
இதனால் 38/2 என தடுமாறிய ஹைதராபாத் அணியை அடுத்து களமிறங்கிய ராகுல் திரிப்பாதி மற்றும் ஐடன் மார்க்ரம் ஆகியோர் ஜோடி சேர்ந்து மீட்டெடுக்க போராடினார்கள். இதில் 12 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய மார்க்ரம் இந்திய வீரர் திரிபாதிக்கு கைகொடுத்த தவறினார். அடுத்த ஒரு சில ஓவர்களிலேயே 30 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் உட்பட 44 ரன்கள் எடுத்த ராகுல் திரிபாதியும் அவுட்டானார். ஆனால் அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிகோலஸ் பூரன் அதிரடியாக விளையாடி ஹைதராபாத் வெற்றிக்கு போராடினார்.

SRH vs LSG Jason Holder

இதனால் 17 ஓவர்களில் 140/4 என்ற நிலையில் இருந்த ஹைதராபாத் வெற்றி கிட்டத்தட்ட உறுதியானது. அப்போது 18-வது ஓவரை வீசிய இளம் இந்திய வீரர் ஆவேஷ் கானின் முதல் பந்திலேயே நிக்கோலஸ் பூரன் மெகா சிக்சரை பறக்க விட்டார். இருப்பினும் அதற்கு அசராத அவர் 2-வது பந்தில் ரன் எதுவும் கொடுக்காமல் 3-வது பந்தில் 24 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்கள் உட்பட 34 ரன்கள் எடுத்து லக்னோவை மிரட்டிக் கொண்டிருந்த நிக்கோலஸ் பூரனை அவுட் செய்தார். அடுத்த பந்திலேயே இளம் வீரர் அப்துல் சமத்தை கோல்டன் டக் அவுட்டாக்கிய அவேஷ் கான் அந்த ஓவரில் வெறும் 7 மட்டும் கொடுத்து அடுத்தடுத்த 2 விக்கெட்டுகளை சாய்த்து போட்டியை அப்படியே தலைகீழாக லக்னோவின் பக்கம் திருப்பினார்.

- Advertisement -

லக்னோ வெற்றி, குவியும் பாராட்டு:
அந்த திடீர் சரிவில் இருந்து மீள முடியாத ஹைதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழந்டு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் வெறும் 12 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்த லக்னோ இந்த வருடம் இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளில் 2-வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 5-வது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. இந்த அற்புதமான வெற்றிக்கு 4 விக்கெட்டுகள் சாய்த்து முக்கிய பங்காற்றிய இளம் இந்திய வீரர் ஆவேஷ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Avesh Khan

அதிலும் நேற்றைய போட்டியில் 170 என்ற குறைவான இலக்கை டிபன்ட் செய்த லக்னோவுக்கு பவர்பிளே ஓவர்களில் கேன் வில்லியம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகிய 2 முக்கிய விக்கெட்டுகளை எடுத்த அவர் 18-வது ஓவரில் பூரன், அப்துல் சமட் ஆகியோரின் விக்கெட்டுகளையும் முக்கிய நேரத்தில் எடுத்தது வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது.

- Advertisement -

கடந்த வருடங்களில் டெல்லி அணிக்காக விளையாடிய அவர் சமீப காலங்களாக மிகச் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியில் கால்தடம் பதிக்க தொடங்கியுள்ளார். அந்த நிலையில் ஹைதராபாத் அணிக்கு எதிரான இந்த போட்டியில் ஒரே ஓவரில் லக்னோவின் வெற்றியை உறுதி செய்த அவர் பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறார்.

இதையும் படிங்க : ஜெயிச்சதுக்கு அப்புறம் இப்படியா பண்ணுவீங்க? கிண்டலுக்கு உள்ளான பாக் வீரர்களின் கொண்டாட்டம் – வீடியோ

மறுபுறம் 170 ரன்களை கூட எட்டிப் பிடிக்க முடியாத ஹைதராபாத் இந்த வருடம் இதுவரை பங்கேற்ற 2 போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்விகளை பெற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடமான 10-வது இடத்தில் திண்டாடுகிறது.

Advertisement