ஜெயிச்சதுக்கு அப்புறம் இப்படியா பண்ணுவீங்க? கிண்டலுக்கு உள்ளான பாக் வீரர்களின் கொண்டாட்டம் – வீடியோ

pak
- Advertisement -

பாகிஸ்தான் நாட்டில் நிலவி வந்த பாதுகாப்பற்ற சூழல் காரணமாக கடந்த பல ஆண்டுகளாகவே எந்தவொரு அணியும் அங்கு சென்று கிரிக்கெட் தொடரில் பங்கேற்காமல் இருந்து வந்தது. ஆனால் சமீப காலமாக மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி ஒவ்வொரு அணியாக பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியானது தற்போது பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வெற்றிகரமாக கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி முடித்துள்ளது.

அதன்படி பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. அதை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி 2 க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றி டெஸ்ட் தொடரில் அடைந்த தோல்விக்கு ஒருநாள் தொடரின் மூலம் பழி தீர்த்தது.

- Advertisement -

இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற மூன்றாவது கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த 211 ரன்களை வெற்றிகரமாக சேஸிங் செய்து பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இந்த ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தியது. ஐந்து முறை ஒருநாள் போட்டிகளில் உலக சாம்பியனான ஆஸ்திரேலிய அணியை பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் வீழ்த்தியது ரசிகர்கள் மத்தியில் பெரிய பாராட்டுகளை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த ஒருநாள் தொடரில் பெற்ற வெற்றிக்குப் பின்னர் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் வீரர்கள் செய்த ஒரு குறும்புத்தனமான செயல் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

அதன்படி போட்டியை வென்ற பின்னர் விருதுகள் கொடுக்கும் நிகழ்ச்சி எல்லாம் முடிந்து பாபர் அசாம் கோப்பையை வாங்கி வந்து மைதானத்தின் மீது வைத்து வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அதோடு வீரர்கள் அனைவரும் கோப்பையுடன் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதையும் படிங்க : இந்த ஒரு விஷயம் மட்டும் நடந்தா சி.எஸ்.கே பிளேஆப் சுற்றுக்கு கூட போகாது – எச்சரித்த ஆர்.பி.சிங்

அப்போது உற்சாக மிகுதியில் இருந்த பாகிஸ்தான் வீரர்கள் சாம்பியன் போர்டை தட்டிவிட்டு முன்னே விழுந்தனர். அவர்கள் செய்த இந்த குறும்புத்தனமான செயலானது அப்படியே வீடியோ வடிவாக வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது. மேலும் இந்த விடயம் நகைச்சுவையாக பல்வேறு ரசிகர்களாலும் அதிக அளவில் பகிரப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement