இந்த ஒரு விஷயம் மட்டும் நடந்தா சி.எஸ்.கே பிளேஆப் சுற்றுக்கு கூட போகாது – எச்சரித்த ஆர்.பி.சிங்

RP-Singh
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 26-ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரின் 15 வது சீசனானது தற்போது வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் தற்போது பரிதாப நிலையில் உள்ளது என்றே கூறலாம். ஏனெனில் கொல்கத்தா அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த சிஎஸ்கே அணி அடுத்தடுத்து தோல்வியிலிருந்து மீண்டு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

CSK-1

- Advertisement -

ஆனால் அதற்கு மாற்றாக சென்னை அணி அடுத்தடுத்து விளையாடிய லக்னோ மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டியிலும் தோல்வியை சந்தித்து முதல் முறையாக ஐபிஎல் வரலாற்றில் முதல் மூன்று போட்டிகளிலுமே தோல்வியை சந்தித்து பரிதாப நிலையில் உள்ளது. சென்னை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விளகியதால் இம்முறை சிஎஸ்கே எவ்வாறு செயல்படப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் இருந்தது.

ஆனால் முதல் மூன்று போட்டிகளிலுமே ஜடேஜா தலைமையிலான சென்னை அணி தோல்வி அடைந்து தற்போது இக்கட்டான நிலையில் உள்ளது. மேலும் 2020 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற 13 ஆவது ஐ.பி.எல் தொடரில் பிளேஆப் சுற்றுக்கு முன்னேறாதது போன்று இம்முறையும் சி.எஸ்.கே அணி மோசமான நிலையை சந்திக்கும் என பல்வேறு கருத்துக்களும் உலா வருகின்றன.

CSK

இந்நிலையில் எதிர்வரும் நான்காவது லீக் போட்டியில் சென்னை அணி வெற்றி பெறவில்லை என்றால் மிகப்பெரிய சிக்கலை சந்திக்கும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆர்.பி.சிங் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

முதல் மூன்று போட்டிகளில் சென்னை அணி தற்போது தோல்வியை தழுவியுள்ளதால் ஒரு இக்கட்டான நிலையில் உள்ளது. மேலும் இனி ஒரு போட்டியில் அதாவது அடுத்த நான்காவது போட்டியில் சென்னை அணி தோற்கும் பட்சத்தில் நிச்சயம் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவது கடினம் ஆகிவிடும்.

இதையும் படிங்க : வீடியோ : லெப்ட் ஹேண்ட் பும்ராவை பாத்துருக்கீங்களா! அச்சு அசலாக அவரை போல பவுலிங் செய்யும் ஆஸி வீரர்

இம்முறை 10 அணிகள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளதால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் நான்கு இடங்களுக்காக கடும் போட்டி நிலவும். சிஎஸ்கே அணி தற்போது விளையாடி வரும் நிலையை பார்க்கையில் அவர்கள் மிகவும் இக்கட்டான நிலையில் இருப்பதாக ஆர்.பி.சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement