வீடியோ : லெப்ட் ஹேண்ட் பும்ராவை பாத்துருக்கீங்களா! அச்சு அசலாக அவரை போல பவுலிங் செய்யும் ஆஸி வீரர்

Bumrah Maddinson
- Advertisement -

கிரிக்கெட்டில் விளையாடும் நட்சத்திர வீரர்கள் எப்போதுமே தங்களது திறமையால் நாட்டுக்காக வெற்றியைத் தேடித்தருவது மட்டுமல்லாமல் பல இளைஞர்களுக்கு ரோல் மாடல்களாகவும் இருப்பார்கள். அவர்களை பார்த்து பல இளைஞர்களும் அவர்களைப் போலவே விளையாட வேண்டும் என்ற எண்ணத்தில் பேட்டையும் பந்தையும் கையில் எடுத்து விடாமல் முயற்சி செய்து நாளடைவில் அவர்கள் விளையாடிய இடத்தில் விளையாடி சாதனை படைத்த கதைகளை நிறைய பார்த்துள்ளோம்.

அதற்கு எடுத்துக்காட்டாக 80களில் அசத்தி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 10000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சரித்திர சாதனை படைத்த ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பார்த்து அப்போதைய இளம் வீரர்கள் கிரிக்கெட்டை விளையாட தொடங்கினார்கள். குறிப்பாக அவரைப் பார்த்து உத்வேகம் அடைந்த சச்சின் டெண்டுல்கர் 16 வயதிலேயே கிரிக்கெட்டில் காலடி வைத்து அதன்பின் தனது அபார திறமையினால் இந்தியாவிற்கு பல வெற்றிகளை தேடித்தந்து தனது குருவையே மிஞ்சி மாபெரும் உலக சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

கிரிக்கெட் ஹீரோக்கள்:
அப்படிப்பட்ட மகத்தான சச்சின் டெண்டுல்கரை பார்த்து இந்தியாவின் மூலை முடுக்கில் இருக்கும் பெரும்பாலான இளைஞர்கள் பேட்டை கையில் எடுத்து இந்தியாவுக்காக ஏதோ ஒருநாள் விளையாட வேண்டும் என்ற எண்ணத்தில் விளையாடுகிறார்கள். இப்படி பெரும்பாலும் இளம் வீரர்களுக்கு பேட்ஸ்மேன்கள் ரோல் மாடலாக இருந்து வந்த நிலையில் முன்னாள் வீரர் ஜஹீர் கான் ஒரு பந்து வீச்சாளராக பல இளைஞர்களுக்கு ரோல் மாடலாக திகழ்ந்தார். குறிப்பாக அவரைப்போலவே பந்து வீச வேண்டும் என்ற எண்ணத்தில் கடைக்கு சென்றால் கூட அவர் ஓடி வந்து பந்து வீசுவதை போலவே நினைத்துக் கொண்டு அவரின் பவுலிங்கை காப்பி அடிக்க முயற்சிக்காத 90கிட்ஸ் ரசிகர்களே இருக்க முடியாது.

அந்த வகையில் தற்போது நவீன கிரிக்கெட்டில் எம்எஸ் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற நட்சத்திர வீரர்களை பார்த்து வளரும் இப்போதைய இளசுகள் அவர்களைப் போலவே விளையாட வேண்டும் என்ற தெருக்களிலும், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட தொடங்கியுள்ளனர். அதேபோல் பந்துவீச்சில் தற்போது உலகத்தரம் வாய்ந்த வீச்சாளராக உருவெடுத்துள்ள ஜஸ்பிரித் பும்ரா பல இளைஞர்களுக்கு ரோல் மாடலாக உருவாகியுள்ளார்.

- Advertisement -

வித்யாசமான பும்ரா:
அதிலும் மற்ற பந்துவீச்சாளர்களை போல் அல்லாமல் வித்தியாசமாக ஓடி வந்து மின்னல் வேகத்தில் பந்து வீசும் அவர் தற்போதைய உலகத்தரம் வாய்ந்த பல பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறார். யார்கர் பந்துகளை வீசி எதிரணி பேட்ஸ்மேன்களின் ஸ்டம்ப்களை தெறிக்கவிடும் அவர் தனது வித்தியாசமான பௌலிங் ஆக்சனால் பல ரசிகர்களையும் இளம் வீரர்களையும் கவர்ந்து இழுத்துள்ளார் என்றே கூறலாம்.

கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் காலடி வைத்த அவர் தனது அபார திறமையால் அடுத்த சில வருடங்களில் 3 வகையான இந்திய அணியிலும் கால் பதித்து இன்று இந்தியாவின் முதல் வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்துள்ளார். அதனால் தற்போது அவரைப் பார்த்து நிறைய இளம் வீரர்கள் அவரைப் போலவே பந்துவீச முயற்சி செய்து வரும் நிலையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு வீரர் அவரைப் போலவே பந்து வீசுவது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

- Advertisement -

லெப்ட் ஹேண்ட் பும்ரா:
ஆஸ்திரேலியாவில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த பிரபல உள்ளூர் கிரிக்கெட் தொடரான சிபில்டு ஷீல்டு கோப்பையில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றில் அசத்திய மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் விக்டோரியா ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. அதைத்தொடர்ந்து நடைபெற்ற இறுதிப் போட்டியில் விக்டோரியாவை தோற்கடித்த மேற்கு ஆஸ்திரேலியா 23 வருடங்கள் கழித்து கோப்பையை வென்று சாதனை படைத்தது.

பெர்த் நகரில் இருக்கும் புகழ் பெற்ற வாகா கிரிக்கெட் மைதானத்தில் நடந்த அந்த போட்டியில் ஏப்ரல் 4-ஆம் தேதி நடந்த 2-வது இன்னிங்சில் 161-வது ஓவரை வீசிய விக்டோரியா வீரர் நிக் மடின்சன் இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ராவை போலவே பந்து வீசியது பலரின் கவனத்தையும் ஈர்த்தது. அதை கிரிக்கெட் ஆஸ்திரேலியா அதிகாரப்பூர்வ இணையதளம் தனது பக்கத்தில் வெளியிட அந்த வீடியோ வைரலானது. தற்போது 30 வயதாகும் அவர் இதற்கு முன் கடந்த 2016-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு விளையாடியவர்.

இதையும் படிங்க : வெடித்த சர்ச்சை! ஒருதலைபட்சமான தெ.ஆ அம்பயர்கள் மீது ஐசிசியிடம் வங்கதேசம் ஆதாரத்துடன் புகார்

அப்படி சீனியர் வீரரான அவர் இந்தியாவைச் சேர்ந்த ஒரு இளம் வீரராக வலம் வரும் ஜஸ்பிரித் பும்ராவை போல பந்துவீச முயற்சித்து வருகிறார். அதிலும் ஒரு இடதுகை பந்து வீச்சாளரான அவர் வீசுவதை பார்க்கும் போது ஜஸ்பிரித் பும்ரா இடது கையை பயன்படுத்தி (லெப்ட் ஹேண்ட்) பந்து வீசினால் எப்படி இருக்குமோ அப்படி உள்ளதாக ரசிகர்கள் பேசுகின்றனர். மொத்தத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஜஸ்பிரித் பும்ராவின் புகழ் கடல் கடந்து ஆஸ்திரேலியா வரை சென்றுள்ளது இந்தியாவிற்கு பெருமையாகும்.

Advertisement