நீங்களே டூப்ளிகேட் டீம் தான், 10 மேட்ச் வெச்சாலும் இந்தியாவே வெல்லும் – ஆஸ்திரேலியாவை விளாசும் முன்னாள் இந்திய வீரர்

IND vs AUS Siraj SMith
- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2004க்குப்பின் டெஸ்ட் தொடரை வென்று 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் சொந்த மண்ணில் சந்தித்த தோல்விகளுக்கு பதிலடி கொடுக்கும் முயற்சியுடன் களமிறங்கியது. ஆனால் அதற்காக ஆரம்பத்திலேயே தங்களை வேண்டுமென்றே தோற்கடிப்பதற்காக இந்தியா சுழலுக்கு சாதகமான பிட்ச் அமைத்துள்ளதாக குற்றம் சாட்டிய ஆஸ்திரேலிய அணியினர் ரவிச்சந்திரன் அஸ்வின் போலவே பந்து வீசும் மகேஷ் பிதியா எனும் லோக்கல் ஸ்பின்னரை தேடிப் பிடித்து தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.

Ravichandran Ashwin Steve Smith

- Advertisement -

ஆனால் நாக்பூரில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் வாயில் பேசியதை செயலில் காட்ட தவறிய ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. மறுபுறம் அதே பிட்ச்சில் 400 ரன்கள் அடித்த இந்தியா ஆஸ்திரேலியாவின் குற்றச்சாட்டுகளை பொய்யாக்கி உலகின் நம்பர் ஒன் அணியை 3வது நாளில் 2 மணி நேரத்தில் வெறும் 91 ரன்களுக்கு சுருட்டி அபார வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து டெல்லியில் நடைபெற்ற 2வது போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஓரளவு தாக்குப் பிடித்து 263 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா பந்து வீச்சில் நேதன் லயன் உதவியுடன் ஒரு கட்டத்தில் இந்தியாவை 139/7 என மடக்கி பிடித்தது.

டூப்ளிகேட் டீம்:
ஆனால் அந்த மமதையில் சுமாராக செயல்பட்ட அவர்களை 8வது விக்கெட்டுக்கு 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அஷ்வின் – அக்சர் படேல் ஆகியோர் போட்டியை தலைகீழாக மாற்றி விட்டனர். ஏனெனில் அதன் பின் வெறும் 1 ரன் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 7 விக்கெட்டுகள் சாய்த்த ஜடேஜா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினார். அதனால் 2023 பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டுள்ள ஆஸ்திரேலியா எஞ்சிய போட்டிகளில் வென்று குறைந்தபட்சம் ஒய்ட் வாஷ் தோல்வியை தவிர்த்து தன்னை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

Nathan Lyon Pujara IND vs AUS

ஆனால் சுழல் பந்து வீச்சில் திண்டாடும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் நேராக வரும் பந்துகளை கூட சரியாக எதிர்கொள்ள தேவையான டெக்னிக் தெரியாமல் ஸ்வீப் ஷாட் அடித்து அவுட்டானார்கள். அந்த வகையில் ஆஸ்திரேலியாவுக்கு நல்ல டெக்னிக் தெரியாத காரணத்தால் 4 போட்டி மட்டுமல்ல 10 போட்டி நடைபெற்றாலும் இந்தியாவே 10 – 0 என்ற கணக்கில் வெல்லும் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் வெளிப்படையாக விமர்சித்துள்ளார். மேலும் டூப்ளிகேட் அஷ்வினுக்கு எதிராக பயிற்சிகளை மேற்கொண்ட தற்போதைய ஆஸ்திரேலிய அணியிடம் வெற்றி பெறும் அளவுக்கு பஃயர் இல்லையென்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஆஸ்திரேலிய அணியினர் டூப்ளிகேட் ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு எதிராக பயிற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் இந்த ஆஸ்திரேலிய அணியே டூப்ளிகேட் என்று நான் கருதுகிறேன். ஏனெனில் ஆரம்பத்திலிருந்தே அவர்கள் எதிர்மறையான செயல்களில் கவனம் செலுத்தி வருகிறார்கள். அவர்களிடம் நிறைய குழப்பம் இருப்பதாலேயே இத்தொடரின் முதல் பந்து வீசுவதற்கு முன்பாகவே தோற்று விட்டார்கள். இதிலிருந்து அவர்கள் இந்த சுற்று பயணத்துக்கு தயாராகவில்லை என்பதும் தெளிவாகத் தெரிகிறது. அவர்களுடைய செயல்பாடுகளை பார்க்கும் போது எப்படி அவுட்டாகலாம் என்பதற்கு ஏற்றார் போல் தயாரானதாக மட்டுமே தெரிகிறது”

Harbhajan

“எனவே இத்தொடரில் இந்தியா நிச்சயமாக 4 – 0 (4) என்ற கணக்கில் வெல்லும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஒருவேளை இத்தொடரில் 10 போட்டிகள் இருந்தால் கூட 10 – 0 என்ற கணக்கில் இந்தியா ஆஸ்திரேலியாவை தோற்கடிக்கும். ஏனெனில் தற்போதைய ஆஸ்திரேலிய அணியில் ஃபயர் பவர் இல்லை”

இதையும் படிங்க: கே.எல் ராகுலின் இந்த நிலைமை எனக்கும் வந்திருக்கு. அப்போலாம் நான் அழுதிருக்கேன் – மனம்திறந்த தினேஷ் கார்த்திக்

“குறிப்பாக பிட்ச் கொஞ்சம் சுழன்றாலும் அவர்கள் எப்படி விக்கெட்டை இந்தியாவுக்கு பரிசளிக்கலாம் என்பதை உடைமாற்றும் அறையிலேயே விட்டு விடுகிறார்கள்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இத்தொடரின் 3வது போட்டி மார்ச் 1ஆம் தேதியன்று இந்தூரில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement