118/0 ரன்கள்.. ஹெட் – வார்னர் சரவெடியால் பவர் பிளேவில் ஆஸி மாபெரும் சாதனை.. நியூசிலாந்து மினி கம்பேக்

AUS vs NZ head
- Advertisement -

இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 28ஆம் தேதி காலை 10 மணிக்கு அழகான தரம்சாலா நகரில் நடைபெற்ற 27வது போட்டியில் வலுவான ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கி ஆஸ்திரேலியாவுக்கு டேவிட் வார்னர் – டிராவிஸ் ஹெட் ஆகியோர் அதிரடியாக விளையாடினர்.

குறிப்பாக காயத்தால் கடந்த 6 வாரங்களாக எவ்விதமான போட்டிகளிலும் விளையாடாத டிராவிஸ் ஹெட் முழுமையாக குணமடைந்து இப்போட்டியில் நியூசிலாந்து பவுலர்களை வெளுத்து வாங்கினார். அவருடன் டேவிட் வார்னர் தம்முடைய பங்கிற்கு நிதானம் கலந்த அதிரடியை காட்டியதால் ஒவ்வொரு ஓவரிலும் குறைந்தது ஒரு சிக்சரை அடித்த இந்த ஜோடி 10க்கும் மேற்பட்ட ரன்களை குவித்தது.

- Advertisement -

அசத்திய ஆஸ்திரேலியா:
அவர்களது அதிரடியான ஆட்டத்தால் முதல் 10 ஓவர்களில் ஆஸ்திரேலியா 118/0 ரன்கள் எடுத்து அபாரமான துவக்கத்தை பெற்றது. சொல்லப்போனால் இதன் வாயிலாக உலகக்கோப்பை வரலாற்றில் பவர் பிளே ஓவர்களில் அதிக ரன்கள் அடித்த 2வது அணி என்ற நியூசிலாந்தின் சாதனையை உடைத்த ஆஸ்திரேலியா புதிய சாதனை படைத்தது. இதற்கு முன் 2015 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக முதல் 10 ஓவர்களில் நியூசிலாந்து 116 ரன்கள் எடுத்தது.

தற்போது அப்பட்டியலில் நியூசிலாந்து 3வது இடத்தைப் பிடித்துள்ள நிலையில் 2003 உலகக் கோப்பையில் கனடாவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் முதல் 10 ஓவர்களில் 119/1 ரன்களை விளாசி உலகக்கோப்பையில் பவர்பிளே ஓவர்களில் அதிக ரன்கள் அடித்த அணியாக உலக சாதனையுடன் முதலிடம் இருக்கிறது. அந்தளவுக்கு மிரட்டலான துவக்கத்தை கொடுத்த இந்த ஜோடி 175 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த போது டேவிட் வார்னர் 5 பவுண்டரி 6 சிக்சருடன் 81 (65) ரன்களில் கிளன் பிலிப்ஸ் சுழலில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

போலவே மறுபுறம் தொடர்ந்து 50 ரன்கள் கடந்து அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் சதமடித்து 10 பவுண்டரி 7 சிக்ஸருடன் 109 (67) ரன்கள் விளாசி அவுட்டானார். அவர்களைத் தொடர்ந்து மிட்சேல் மார்ஷ் 36, ஸ்டீவ் ஸ்மித் 18, மார்னஸ் லபுஸ்ஷேன் 18 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். ஆனாலும் அடுத்ததாக வந்த கிளன் மேக்ஸ்வெல் அதிரடியாக 41 (24) ரன்களும் ஜோஸ் இங்லிஷ் 38 (28) ரன்களும் விளாசி ஆஸ்திரேலியாவை வலுப்படுத்தி ஆட்டமிழந்தனர்.

இதையும் படிங்க: அம்பயரால் தான் பாகிஸ்தான் தோத்தாங்க.. கிரேம் ஸ்மித்துடன் விவாதம் செய்து.. ஐசிசி’யை விளாசிய ஹர்பஜன்

அவர்களை விட கடைசி நேரத்தில் வந்த கேப்டன் பட் கமின்ஸ் 2 பவுண்டரி 4 சிக்சரை பறக்க விட்டு 37 (14) ரன்கள் விளாசி தம்முடைய வேலையை செய்த ஆட்டமிழந்தார். ஆனாலும் 400 ரன்களை தொடும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியாவை 387/6 ரன்களிலிருந்து 49.2 ஓவரிலேயே 388 ரன்களுக்கு போராடி ஆல் அவுட் செய்து மினி கம்பேக் நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக கிளன் பிலிப்ஸ், ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

Advertisement