மீண்டும் ஃபார்முக்கு வந்த ஆஸ்திரேலியா.. உலகின் வேறு எந்த அணியும் செய்யாத இரட்டை உலக சாதனை

Australia 100
Advertisement

இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 28ஆம் தேதி தரம்சாலா நகரில் நடைபெற்ற லீக் போட்டியில் நியூசிலாந்தை 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த ஆஸ்திரேலியா 4வது வெற்றியை பதிவு செய்தது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா டிராவிஸ் ஹெட் 109, டேவிட் வார்னர் 81 ரன்கள் எடுத்த உதவியுடன் 389 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

மறுபுறம் ஒரு கட்டத்தில் 400 ரன்கள் தொடும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியாவை ஓரளவுக்கு கட்டுப்படுத்திய நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட் மற்றும் கிளன் பிலிப்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதைத் தொடர்ந்து சேசிங் செய்த நியூசிலாந்துக்கு ரச்சின் ரவீந்திரா சதமடித்து 116, டார்ல் மிட்சேல் 54 ரன்கள் அடித்து வெற்றி பாதைக்கு அழைத்து வந்தனர்.

- Advertisement -

ஆஸ்திரேலியாவின் சாதனை:
ஆனாலும் அவர்களைத் தொடர்ந்து வந்த கேப்டன் டாம் லாதம், கிளன் பிலிப்ஸ் ஆகியோர் குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்ததால் கடைசியில் ஜிம்மி நீசம் அதிரடியாக 58 ரன்கள் எடுத்து போராடியும் வெற்றி காண முடியவில்லை. அந்தளவுக்கு பந்து வீச்சிலும் அசத்திய ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஆடம் ஜாம்பா 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

முன்னதாக 5 கோப்பைகளை வென்று உலகக்கோப்பை வரலாற்றின் வெற்றிகரமான அணியாக திகழும் ஆஸ்திரேலியா இத்தொடரின் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் 10வது இடத்திற்கு சரிந்தது. ஆனாலும் அதன் பின் இலங்கை, நெதர்லாந்தை மற்றும் பாகிஸ்தான் அணிகளை தோற்கடித்த ஆஸ்திரேலியா தற்போது வலுவான நியூசிலாந்தையும் வீழ்த்தி தொடர்ச்சியாக 4 வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலிலும் டாப் 4 இடத்திற்குள் நுழைந்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் அபாரமான கம்பேக் கொடுத்துள்ள ஆஸ்திரேலியாவுக்கு இது 100வது உலகக் கோப்பை போட்டியாகும். இதன் வாயிலாக உலகக்கோப்பை வரலாற்றில் 100 போட்டிகளில் விளையாடிய முதல் அணி என்ற மாபெரும் உலக சாதனையையும் ஆஸ்திரேலியா படைத்துள்ளது. குறிப்பாக 5 உலகக்கோப்பைகளை வென்று அதிக முறை நாக் அவுட் சுற்றில் விளையாடியதன் காரணமாக ஆஸ்திரேலியா இந்த சாதனையை எளிதாக படைத்துள்ளது.

இதையும் படிங்க: காயத்திலிருந்து மீண்டு வந்த முதல் போட்டியிலே இப்படி நடந்ததில் மகிழ்ச்சி – ஆட்டநாயகன் டிராவிஸ் ஹெட் பேட்டி

ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தபடியாக நியூசிலாந்து 95, இந்தியா 89 உலகக்கோப்பை போட்டிகளிலும் விளையாடியுள்ளன. அதை விட கடந்த 3 போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக 367/9 ரன்கள் அடித்த ஆஸ்திரேலியா நெதர்லாந்துக்கு எதிராக 399/8 ரன்கள் குவித்து இப்போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக 388 ரன்கள் அடித்துள்ளது. இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 3 போட்டிகளில் 350க்கும் மேற்பட்ட ரன்களை அடித்த முதல் அணி என்ற மற்றுமொரு உலக சாதனையும் ஆஸ்திரேலியா நிகழ்த்தியுள்ளது. ஆஸ்திரேலியாவை தவிர்த்து உலகில் வேறு எந்த அணியும் தொடர்ச்சியாக இப்படி 3 போட்டிகளில் 350+ ரன்கள் அடித்ததில்லை.

Advertisement