காயத்திலிருந்து மீண்டு வந்த முதல் போட்டியிலே இப்படி நடந்ததில் மகிழ்ச்சி – ஆட்டநாயகன் டிராவிஸ் ஹெட் பேட்டி

Travis-Head
- Advertisement -

தர்மசாலா நகரில் இன்று நடைபெற்ற நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் மிக முக்கியமான 27-வது லீக் ஆட்டத்தில் அரையிறுதி வாய்ப்பை பிரகாசமாக்க வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி இமாலய ரன் குவிப்பை வழங்கியும் இறுதியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது ரசிகர்களை பரவசியப்படுத்தியது என்றே கூறலாம். அந்த வகையில் இன்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலாவதாக விளையாடிய ஆஸ்திரேலியா அணி 49.2 ஓவர்களில் 388 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது.

துவக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடிய ஆஸ்திரேலிய அணி 400 ரன்களுக்கு மேல் குவித்து மிகப் பெரிய ஸ்கோரை எட்டும் என்று பலரும் நினைத்து இருப்பார்கள். ஏனெனில் துவக்க வீரர்களான வார்னர் 65 பந்துகளில் 81 ரன்களையும், டிராவிஸ் ஹெட் 67 பந்துகளில் 109 ரன்களையும் குவித்து பிரம்மாண்டமான துவக்கத்தை தர அடுத்து வந்த வீரர்கள் சற்று பொறுமையாக விளையாடிய விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்ததால் ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி எவ்வளவு ரன்களை குவிக்கும் என்ற சந்தேகம் இருந்தது.

- Advertisement -

ஆனால் பின் வரிசையில் களம் இறங்கிய மேக்ஸ்வெல் 24 பந்துகளில் 41 ரன்களையும், ஜாஸ் இங்கிலீஷ் 28 பந்துகளில் 38 ரன்களையும், கம்மின்ஸ் 14 பந்துகளில் 37 ரன்களையும் குவிக்க ஆஸ்திரேலிய அணியானது இறுதியில் 388 ரன்கள் குவித்தது. பின்னர் 389 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணியும் மிகச் சிறப்பான போராட்டத்தை அளித்து இறுதியாக 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 383 ரன்கள் குவித்து வெறும் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

நியூசிலாந்து அணி சார்பாக ரச்சின் ரவீந்திரா 116 ரன்களையும், ஜிம்மி நீசம் 58 ரன்களையும் குவித்து அசத்தினர். இந்நிலையில் இந்த போட்டியின் போது ஆஸ்திரேலியா அணியின் வெற்றிக்கு உதவிய அந்த அணியின் துவக்க வீரரான டிராவிஸ் ஹெட் 109 ரன்கள் குவித்து தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் போட்டி முடிந்து தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய டிராவிஸ் ஹெட் கூறுகையில் : நான் மீண்டும் அணிக்கு திரும்பி இருப்பதில் மகிழ்ச்சி. அதே வேளையில் அணிக்கு திரும்பியதோடு எனது பங்களிப்பை வழங்கி அதில் நாங்கள் வெற்றியும் பெற்றதில் எனக்கு கூடுதல் சந்தோஷம். இந்த போட்டி கடைசி வரை மிகவும் நெருக்கமாக சென்றது இறுதியிலும் நாங்கள் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. காயத்திலிருந்து மீண்டு வந்த பிறகு இந்த போட்டியில் நான் விளையாட ஆரம்பித்ததும் இரண்டு ஷாட்டுகள் கிளிக் ஆனதும் என்னுடைய பேட்டிங் ரிதம் கிடைத்தது.

இதையும் படிங்க : நாங்க 388 ரன்ஸ் அடிச்சும் அவங்க சூப்பரா துரத்துனாங்க.. ஆனாலும் நாங்க ஜெயிக்க இதுதான் காரணம் – கம்மின்ஸ் மகிழ்ச்சி

கிட்டத்தட்ட ஏழு வாரங்களாக நான் அணியில் விளையாடாமல் இருந்தேன். ஆனாலும் தற்போது மிகச் சிறப்பான முறையில் மீண்டு வந்திருக்கிறேன். வார்னருடன் விளையாடும்போது மிகவும் சிறப்பாக இருக்கும். ஏனெனில் நாங்கள் இருவருமே சமீப காலமாக நிறைய போட்டிகளில் விளையாடி வருகிறோம். நாங்கள் ஒன்றாக விளையாடும் போது எங்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறது என்றும் டிராவிஸ் ஹெட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement