இலங்கை ஹாட்ரிக் தோல்வி.. முதல் வெற்றியுடன் ஆஸ்திரேலியா கம்பேக்.. புள்ளிப்பட்டியலில் நிகழ்ந்த பெரிய மாற்றம்

Sl vs Aus 2
- Advertisement -

இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 16ஆம் தேதி லக்னோ நகரில் மதியம் 2 மணிக்கு நடைபெற்ற 17வது லீக் போட்டியில் வலுவான ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. அதில் தங்களுடைய முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து தடுமாறி வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்ற இலங்கை டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு நிசாங்கா மற்றும் குசால் பெரேரா ஆகியோர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 125 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து இலங்கைக்கு நல்ல துவக்கத்தை கொடுத்தனர். இருப்பினும் அதில் நிசாங்காவை 61 ரன்களில் அவுட்டாக்கிய கேப்டன் கமின்ஸ் அடுத்த சில ஓவர்களில் பெரேராராவையும் 78 ரன்களில் கோல்டன் டக் அவுட்டாக்கி போட்டியில் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தினார்.

- Advertisement -

ஏனெனில் அடுத்ததாக வந்த கேப்டன் குசால் மெண்டிஸ் 9, சமரவிக்ரமா 8, டீ சில்வா 7 ரன்களில் அவுட்டானதால் ஏற்பட்ட அழுத்தத்தில் மறுபுறம் முடிந்தளவுக்கு போராடிய அசலங்காவும் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். அதனால் 157/1 என ஒரு கட்டத்தில் வலுவாக இருந்த இலங்கையை 43.3 ஓவரிலேயே 209 ரன்களுக்கு சுருட்டிய ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஆடம் ஜாம்பா 4 விக்கெட்களும் மிட்சேல் ஸ்டார்க், கேப்டன் கமின்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

அதைத்தொடர்ந்து 210 என்ற சுலபமான இலக்கை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு 3வது ஓவரில் டேவிட் வார்னரை 11 ரன்களில் அவுட்டாக்கிய மதுசங்கா அடுத்ததாக வந்த ஸ்டீவ் ஸ்மித்தை டக் அவுட்டாக்கி மிரட்டினார். அதனால் 24/2 என தடுமாறிய அந்த அணிக்கு அடுத்ததாக வந்த லபுஸ்ஷேனுடன் மறுபுறம் நிலைத்து நின்ற மற்றொரு துவக்க வீரர் மிட்செல் மார்ஷ் அதிரடியாக விளையாடி 3வது விக்கெட்டுக்கு 56 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 9 பவுண்டரியுடன் 52 (51) ரன்களில் ரன் அவுட்டானார்.

- Advertisement -

அவரைப் போலவே அடுத்ததாக வந்த ஜோஸ் இங்லீசுடன் ஜோடி சேர்ந்த லபுஸ்சேன் தம்முடைய கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தி 4வது விக்கெட்டுக்கு 77 பார்ட்னர்ஷிப் அமைத்த மீண்டும் மதுசங்கா வேகத்தில் 40 (60) ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் களமிறங்கிய மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடிய நிலையில் எதிர்புறம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோஸ் இங்லீஷ் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 58 (59) ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்து ஆட்டமிழந்தார்.

இதையும் படிங்க: உலகக் கோப்பைக்கு சாப்பிட தான் போனீங்களா.. கேமராவில் சிக்கிய சூரியகுமார்.. கலாய்த்த ரசிகருக்கு பதிலடி

இறுதியில் மேக்ஸ்வெல் 4 பவுண்டரி 2 சிக்ஸருடன் 31* (21) ரன்களும் ஸ்டோனிஸ் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 20* (10) ரன்களும் எடுத்ததால் 35.2 ஓவரிலேயே 215/5 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. அதனால் இலங்கை சார்பில் அதிகபட்சமாக மதுசங்கா 3 விக்கெட்டுகள் எடுத்தும் இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளில் தொடர்ந்து தோற்று ஹாட்ரிக் தோல்வியை பதிவு செய்தது. மறுபுறம் அடுத்தடுத்த தோல்விகளால் துவண்டு கிடந்த ஆஸ்திரேலியா இத்தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் இலங்கையை 10வது இடத்திற்கு தள்ளி 8வது இடத்திற்கு முன்னேறி வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது.

Advertisement