உலகக் கோப்பைக்கு சாப்பிட தான் போனீங்களா.. கேமராவில் சிக்கிய சூரியகுமார்.. கலாய்த்த ரசிகருக்கு பதிலடி

Suryakumar Yadav
- Advertisement -

உலக கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிப்பதற்காக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 3 போட்டிகளில் 3 வெற்றிகளை பதிவு செய்து அசத்தி வருகிறது. அதனால் ரன் ரேட் அடிப்படையில் புள்ளி பட்டியலில் முதலிடத்திலும் இருக்கும் இந்தியா சொந்த மண்ணில் 2011 போல கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் ஆழமாக காணப்படுகிறது.

எனவே முதல் போட்டியிலேயே வலுவான ஆஸ்திரேலியாவை 2/3 என சரிந்தும் ராகுல், விராட் கோலியின் சிறப்பான ஆட்டத்தால் தோற்கடித்த இந்தியா 2வது போட்டியில் ரோகித் சர்மாவின் அதிரடியால் ஆப்கானிஸ்தானை எளிதாக வீழ்த்தியது. அதை விட பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற 3வது போட்டியில் பந்து வீச்சில் 191 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா பின்னர் ரோகித் சர்மாவின் அதிரடியால் உலகக் கோப்பையில் 8வது முறையாக வென்று கௌரவத்தை தக்க வைத்துக் கொண்டது.

- Advertisement -

கலாய்த்த ரசிகர்:
முன்னதாக இத்தொடரில் நம்பிக்கை நட்சத்திர வீரர் சூரியகுமார் யாதவ் விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பு பெறாமல் தொடர்ந்து பென்சில் இருந்து வருகிறார். குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் சரவெடியாக அடித்து நொறுக்கி உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக ஜொலிக்கும் அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாததால் இந்த உலகக் கோப்பையில் தேர்வானதற்கே நிறைய விமர்சனங்கள் காணப்பட்டது.

அந்த நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை பெவிலியனில் அமர்ந்து கொண்டு ஏதோ சாப்பிட்டுக்கொண்டே பார்த்த அவரை கேமராமேன் உடனடியாக கவனித்து போக்கஸ் செய்தார். மறுபுறம் குனிந்து வாயில் உணவை வைத்த பின் நிமிர்ந்த சூரியகுமார் பெரிய தரையில் நாம் சாப்பிடுவதை கேமராமேன் படம் பிடிக்கிறார் என்பதை உடனடியாக பார்த்தார்.

- Advertisement -

அப்போது தொடர்ந்து சாப்பிடாமல் அப்படியே வாயை நிறுத்திய அவர் சைட் கண்ணால் “நிம்மதியா சாப்பிட கூட விட மாட்டாங்க” போல என்பது போல பார்த்தது சிரிப்பை உண்டாக்குவதாக அமைந்தது. குறிப்பாக பள்ளிகளில் கடைசி பெஞ்சில் அமர்ந்து கொண்டு சாப்பிடும் மாணவர் ஆசிரியரிடம் பிடிபட்டால் என்ன ரியாக்சன் கொடுப்பாரோ அதே ரியாக்ஷனை சூரியகுமார் கொடுத்ததால் அதை வீடியோவாக எடுத்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்தனர்.

இதையும் படிங்க: உண்மையாவே உங்களுக்கு வேற லெவல் மனசிருக்கு.. இந்திய ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி சொன்ன ரசித் கான்

அதில் ஒரு ரசிகர் “பெவிலியனில் அமர்ந்து கொண்டு என்ன சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள் களத்திற்கு சென்று 2 சிக்சர்களை அடியுங்கள்” என்று கலாய்க்கும் வகையில் பதிலளித்தார். அதைப் பார்த்த சூரியகுமார் “ஆர்டர் எனக்கு போடாதீர்கள் ஸ்விக்கியில் போடுங்கள்” என்று பதிலளித்து அந்த ரசிகருக்கு பதிலடி கொடுத்துள்ளார். குறிப்பாக சிக்ஸர் அடிப்பதை பற்றி எனக்கு சொல்லாதீர்கள் இன்று அந்த ரசிகருக்கு சூரியகுமார் பதிலடி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement