ஒரு கேட்ச்சால் பாகிஸ்தானுக்கு நேர்ந்த பரிதாபம்.. 305க்கு சுருட்டிய ஆஸி ஒரே வாரத்தில் மேலே வந்தது எப்படி?

Aus vs PAk
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 20ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற 18வது லீக் போட்டியில் வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. மதியம் 2 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு டேவிட் வார்னர் – மிட்சேல் மார்ஷ் ஆகியோர் அதிரடியாக விளையாடினார்கள்.

குறிப்பாக 10 ரன்களில் இருந்த போது கொடுத்த கேட்சை பாகிஸ்தான் தவறவிட்டதை பயன்படுத்திய டேவிட் வார்னர் அதிரடியாக விளையாடினார். அவருடன் மிட்சேல் மார்ஷ் தம்முடைய பங்கிற்கு சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி பாகிஸ்தான் பவுலர்களை பந்தாடினார். அந்த வகையில் நேரம் செல்ல செல்ல நங்கூரமாக நின்று அபாரமாக விளையாடிய இந்த ஜோடி 34 ஓவர்கள் வரை சிறப்பாக செயல்பட்டு 229 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வலுவான துவக்கம் கொடுத்து பிரிந்தது.

- Advertisement -

அதில் 10 பவுண்டரி 9 சிக்ஸருடன் சதமடித்த மார்ஷை 121 (108) ரன்களில் அவுட்டாக்கிய ஷாஹீன் அப்ரிடி அடுத்து வந்த மேக்ஸ்வெலை கோல்டன் டக் அவுட்டாக்கினார். அதைத்தொடர்ந்து வந்த ஸ்மித் 7 ரன்களில் அவுட்டாக மறுபுறம் அடுத்த சில ஓவர்களில் சதமடித்த வார்னரும் பவுண்டரி 9 சிக்ஸருடன் 163 (124) ரன்களில் அவுட்டாகி சென்றார். ஆனால் அடுத்ததாக வந்த ஸ்டோய்னிஷ் 21, ஜோஸ் இங்லீஷ் 13, லபுஸ்ஷேன் 8 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்ததால் 400 ரங்கள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 367/9 ரன்கள் மட்டுமே எடுத்தது.

மறுபுறம் டெத் ஓவர்களில் அசத்திய பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக சாகின் அப்ரிடி 5, ஹரிஷ் ரவூப் 3 விக்கெட்களை எடுத்து அசத்தினார்கள். அதைத்தொடர்ந்து 368 ரன்ககளை துரத்திய பாகிஸ்தானுக்கு பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்த ஓப்பனிங் ஜோடியில் அப்துல்லா சபிக்கை 64 ரன்களில் காலி செய்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் அடுத்த சில ஓவர்களில் இமாம்-உல்-ஹக்கையும் 70 (71) ரன்களில் அவுட்டாக்கினார்.

- Advertisement -

அந்த சமயத்தில் வந்த கேப்டன் பாபர் அசாம் 18 ரன்களில் கமின்ஸின் சிறப்பான கேட்ச்சால் ஆட்டமிழந்தார். அந்த நிலையில் முகமது ரிஸ்வான் நங்கூரமாக விளையாடிய போதிலும் எதிர்ப்புறம் வந்த அடுத்ததாக வந்த சவுத் சாக்கில் 30 ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அதைத் தொடர்ந்து வந்த இப்திகார் அகமது அதிரடியாக விளையாடி 26 (20) ரன்களில் அவுட்டானதால் ஏற்பட்ட அழுத்தத்தில் ரிஸ்வானும் 46 ரன்களில் ஜாம்பா சுழலில் சிக்கினார்.

அடுத்து வந்த முகமது நவாஸ், ஷாஹீன் அப்ரிடி ஆகியோரும் வந்த வாக்கிலேயே பெவிலியன் திரும்பியதால் 45.3 ஓவரிலேயே பாகிஸ்தானை 305 ரன்களுக்கு சுருட்டிய ஆஸ்திரேலியா 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு ஸ்பின்னர் ஆடம் ஜம்பா 4 விக்கெட்டுகளும், கேப்டன் கமின்ஸ், ஸ்டோய்னிஸ் தலா 2 விக்கட்டுகளும் எடுத்து முக்கிய பங்காற்றினர்.

இதையும் படிங்க: பாண்டியா இல்லையென்றால் இவருக்கு தான் வாய்ப்பு. ரசிகர்களே முடிவு பண்ணிட்டாங்க – விவரம் இதோ

அதனால் கடந்த வாரம் 10வது இடத்திலிருந்த ஆஸ்திரேலியா 4 போட்டிகளில் 2வது வெற்றியை பதிவு செய்த ஆஸ்திரேலியா புள்ளி பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மறுபுறம் கடந்த போட்டியில் இந்தியாவிடம் படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அதிலிருந்து மீளாமல் இப்போட்டியில் முக்கிய கேட்ச்களை விட்டு சொதப்பி அடுத்தடுத்த 2 தோல்விகளை பதிவு செய்து 5வது இடத்திற்கு சரிந்துள்ளது.

Advertisement