இங்கிலாந்து அணி பெற்ற தோல்வியால் ஆஸ்திரேலிய அணிக்கு அடித்த ஜாக்பாட் -புள்ளி பட்டியலில் ஏற்படவுள்ள மாற்றம்

ENG-vs-AUS
- Advertisement -

இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 13-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தான் அணியிடம் 69 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்ததன் காரணமாக தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு புள்ளி பட்டியலில் முன்னேற பொன்னான வாய்ப்பு ஒன்று அவர்களது கையில் கிடைத்துள்ளது.

இதனை சரியாக பயன்படுத்தி ஆஸ்திரேலிய அணி முன்னேறுமா? என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. கடந்த 1992-ஆம் ஆண்டிற்கு பிறகு உலகக் கோப்பை தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி தோல்வியை சந்தித்தது இதுவே முதல் முறை.

- Advertisement -

இந்த ஆண்டு இந்தியாவில் துவங்கிய இந்த உலக கோப்பை தொடரின் முதலாவது போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணியிடம் முதல் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலிய அணியானது இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்க அணியிடம் தோல்வியை தழுவியது. இப்படி இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியில் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலிய அணி புள்ளி பட்டியலில் பின்தங்கியது.

அதோடு இரண்டு போட்டியிலுமே மோசமான தோல்வியை சந்தித்தால் ரன் ரேட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி நெதர்லாந்து அணியையும் தாண்டி புள்ளி பட்டியலில் கடைசி இடமான பத்தாவது இடத்தில் தற்போது பறிதவித்து வருகிறது. அதேவேளையில் நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகளும் இரண்டு போட்டியில் தோல்வியை சந்தித்து எட்டு மற்றும் ஒன்பதாவது இடத்தில் உள்ளனர்.

- Advertisement -

மேலும் இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய மூன்று அணிகளும் மூன்று போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்று முறையே 5, 6, 7 வது இடத்தில் உள்ளனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியானது இந்த தொடரில் தங்களது 3 ஆவது ஆட்டத்தில் வங்கதேச அணியை எதிர்த்து இன்று அக்டோபர் 16 ஆம் தேதி லக்னோ மைதானத்தில் விளையாட இருக்கிறது.

இதையும் படிங்க : உங்க கோவத்தை அவர்மேலயா காமிப்பீங்க? களத்தில் மோசமாக நடந்து கொண்ட சாம் கரனை – விமர்சிக்கும் ரசிகர்கள்

இன்று நடைபெற இருக்கும் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி மட்டும் 180 ரன்கள் வித்தியாசத்திலோ அல்லது 8 விக்கெட் வித்தியாசத்திலோ இலங்கை அணியை வீழ்த்தும் பட்சத்தில் இந்து தொடரில் ஆஸ்திரேலிய முதல் வெற்றி பெறுவதோடு மட்டுமின்றி ரன் ரேட் அடிப்படையில் பெரிய முன்னேற்றத்தைக் கண்டு 5-ஆவது பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement