- Advertisement -
இந்திய கிரிக்கெட்

28.2 ஓவரில் 205 ரன்ஸ்.. பஸ்பாலை பொளந்த ஹெட்.. 104 வருடத்துக்கு பின் 2 நாளில் ஆஸி சாதனை வெற்றி

ஆஷஸ் 2025/26 கிரிக்கெட் தொடர் நவம்பர் 21ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில் துவங்கியது. 5 போட்டிகள் கொண்ட அந்தத் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து 172 ரன்கள் மட்டுமே உள்ளது. அதிகபட்சமாக ஹாரி ப்ரூக் 52, ஓலி போப் 46, ஜேமி ஸ்மித் 32 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 7 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியாவை 132 ரன்களுக்கு சுருட்டிய இங்கிலாந்து நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதைக் காண்பித்தது. அதிகபட்சமாக கேமரூன் கிரீன் 24, அலெக்ஸ் கேரி 26 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்ததாக 40 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இங்கிலாந்தை அபாரமாக பந்து வீசிய ஆஸ்திரேலியா வெறும் 164 ரன்களுக்கு சுருட்டி வீசியது.

- Advertisement -

வெளுத்த ஹெட்:

அதிகபட்சமாக ஓலி போப் 33, பென் டக்கெட் 28, கஸ் அட்கின்ஷன் 37 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக ஸ்காட் போலண்ட் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்ததாக 204 என்ற இலக்கைத் துரத்திய ஆஸ்திரேலியா திணறலாக பேட்டிங் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் பெர்த் பிட்ச் அந்தளவுக்கு வேகத்துக்கு சாதமாகவும் பேட்டிங் செய்வதற்கு சவாலாகவும் இருந்தது.

ஆனால் அந்த சூழ்நிலையில் வித்தியாசமாக சிந்தித்த ஆஸ்திரேலியா முதல் முறையாக டிராவிஸ் ஹெட்டை தங்களுடைய சொந்த ஊரில் ஓப்பனிங்கில் களமிறக்கியது. அந்த வாய்ப்பில் இங்கிலாந்தை அடித்த நொறுக்க ஆரம்பித்த ஹெட் வேகமாக ரன்கள் குவித்தார். அவருடன் 75 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜேக் வெதர்லேண்ட் 23 ரன்களில் பிரைடன் கார்ஸ் வேகத்தில் அவுட்டானார்.

- Advertisement -

104 வருடத்துக்கு பின்:

மறுபுறம் தொடர்ந்து இங்கிலாந்தை வெளுத்த ஹெட் 36 பந்துகளில் அரை சதத்தை அடித்தார். அவருடன் அடுத்ததாக ஜோடி சேர்ந்த மார்னஸ் லபுஸ்ஷேன் தமது பங்கிற்கு ரன்களை குவித்தார். அதைப் பயன்படுத்திய ஹெட் எதிர்புறம் இங்கிலாந்தை அடித்து நொறுக்கி 69 பந்துகளில் சதத்தை அடித்து 16 பவுண்டரி 4 சிக்சருடன் 123* (83) ரன்கள் விளாசி அவுட்டானார்.

இறுதியில் லபுஸ்ஷேன் 51* (49), கேப்டன் ஸ்மித் 2* ரன்கள் எடுத்ததால் 28.2 ஓவரில் 205/2 ரன்களை அடித்த ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்றது. அதனால் 1 – 0* (5) என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ள ஆஸ்திரேலிய தங்களை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை நிரூபித்துள்ளது. மேலும் பெர்த் ஆப்டஸ் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சேசிங் செய்து வென்ற முதல் அணியாகவும் ஆஸ்திரேலியா சாதனை படைத்துள்ளது.

இதையும் படிங்க: தோனியுடன் 2 மாசம் இருக்கபோறேன்.. முதல் முறையாக தோனியுடன் இணைந்து விளையாடுவது குறித்து – சாம்சன் நெகிழ்ச்சி

அத்துடன் இப்போட்டி வெறும் 2 நாளுக்குள் ராக்கெட் வேகத்தில் முடிந்துள்ளது. இதன் வாயிலாக ஆஷஸ் தொடரில் 104 வருடங்கள் கழித்து 2 நாட்களுக்குள் முடிந்த போட்டியாக இப்போட்டி சாதனை படைத்துள்ளது. கடைசியாக 1921 ஆஷஸ் தொடரில் நாட்டிங்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியும் 2 நாட்களில் முடிந்தது. அதிலும் இங்கிலாந்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோற்கடித்தது.

- Advertisement -