தோனியுடன் 2 மாசம் இருக்கபோறேன்.. முதல் முறையாக தோனியுடன் இணைந்து விளையாடுவது குறித்து – சாம்சன் நெகிழ்ச்சி

Samson ms dhoni
- Advertisement -

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக டிரேடிங் முறையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனை தங்களது அணிக்குள் கொண்டு வந்துள்ளது. 18 கோடி ரூபாய் என்கிற விலைக்கு சஞ்சு சாம்சன் வாங்கப்பட்ட வேளையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகியோர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ட்ரேடிங் செய்யப்பட்டுள்ளனர்.

எம்.எஸ் தோனியுடன் விளையாட இருப்பது குறித்து : சஞ்சு சாம்சன் பகிர்வு

இந்நிலையில் அடுத்த ஆண்டு சிஎஸ்கே அணியுடன் இணைந்து விளையாட இருப்பது குறித்து தற்போது மகிழ்ச்சி தெரிவித்து தெரிவித்துள்ள சஞ்சு சாம்சன் முதல் முறையாக எம்.எஸ் தோனியுடன் இணைந்து விளையாட இருப்பது குறித்தும் நெகிழ்ச்சியான சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் அவர் கூறியதாவது :

- Advertisement -

சி.எஸ்.கே அணியில் இருக்கும் ஒரு நபர் பற்றி அனைவருக்குமே தெரியும். எம்.எஸ் தோனி அந்த அணியின் மிகப்பெரிய வீரராக இருந்து வருகிறார். நான் முதல்முறை 19 வயதில் இருக்கும்போது இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டேன். அப்போது இந்திய அணியின் கேப்டனாக தோனி தான் இருந்தார். நாங்கள் அப்போது இங்கிலாந்து தொடருக்காகவும் சென்றிருந்தோம்.

அந்த சமயத்தில் 10 முதல் 20 நாட்கள் வரை அவருடன் இந்திய அணியில் இருந்து பேசுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு ஐபிஎல் தொடர்களில் மட்டுமே நான் அவரை பார்ப்பேன். இருந்தாலும் நான் எப்போது அவரை சந்திக்க நினைத்தபோதும் அவருக்கு பக்கத்தில் 5 முதல் 10 வீரர்கள் இருப்பார்கள். அந்த நேரத்தில் நான் அவரை சந்திக்க விரும்பவில்லை.

- Advertisement -

ஏனெனில் நான் அவரிடம் தனியான சந்திப்பை எதிர்பார்க்கிறேன். கடைசியாக விதி என்னை சென்னை அணிக்கு அழைத்து வந்துள்ளது. அவருடன் இணைந்து ஓய்வறையை பகிர்ந்து கொள்ள இருப்பதை நினைத்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அடுத்த ஆண்டு அவருடன் ஒரே அணியில் விளையாட இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி. அடுத்து ஐபிஎல் தொடரில் இரண்டு மாதம் அவருடன் காலை உணவு அருந்துவது, பயிற்சியில் ஒன்றாக விளையாடுவது, போட்டிகளில் ஒன்றாக பங்கேற்பது என்று மகிழ்ச்சியான நேரத்தை செலவழிக்க இருக்கிறேன்.

இதையும் படிங்க : ரவீந்திர ஜடேஜா விடயத்தில் சி.எஸ்.கே அணி எடுத்த இந்த முடிவு ஆச்சரியமா இருக்கு – அணில் கும்ப்ளே கருத்து

சென்னை அணியில் இணைந்ததும் அவரை சந்திக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று சஞ்சு சாம்சன் கூறினார். மேலும் முதல் முறையாக மஞ்சள் நிறத்திலான ஜெர்சி அணிந்ததும் தான் சாம்பியன் போல உணர்ந்ததாகவும் சஞ்சு சாம்சன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement