அஹமதாபாத்தில் நாளைக்கு நீங்க அதை கேட்கவே முடியாது.. அது தான் எங்களோட திருப்தி.. ஃபைனலுக்கு முன் கமின்ஸ் பேட்டி

Pat Cummins 2
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதி போட்டி நவம்பர் 19ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெறுகிறது. அதில் இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடித்து தங்களுடைய அலமாரியில் 6வது உலகக் கோப்பையை வைப்பதற்காக பட் கமின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா தயாராகியுள்ளது. மறுபுறம் சொந்த மண்ணில் இதுவரை விளையாடிய 10 போட்டிகளிலும் தோல்வியை சந்திக்காமல் வெற்றிநடை போட்டு வரும் இந்தியா அதற்கு சவாலை கொடுக்க உள்ளது.

குறிப்பாக 2003 உலகக்கோப்பை ஃபைனல் மற்றும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் தோல்விகளுக்கு ஆஸ்திரேலியாவை இப்போட்டியில் தோற்கடித்து பழி தீர்க்க போராட உள்ள இந்தியா 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் களமிறங்குகிறது. இருப்பினும் இவ்விரு அணிகளை பொறுத்த வரை ஆஸ்திரேலியாவை விட இந்திய அணியில் அனைத்து வீரர்களுமே உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறார்கள்.

- Advertisement -

சம்பவம் உறுதி:
எனவே சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியிலேயே வெறும் 200 ரன்களை சேசிங் செய்யும் போது 2/3 என்ற மோசமான துவக்கத்தை பெற்றும் விராட் கோலி மற்றும் ராகுல் ஆகியோரது ஆட்டத்தால் ஆஸ்திரேலியாவை தோற்கடித்த உத்வேகத்துடன் இந்தியா விளையாட உள்ளது. இந்நிலையில் சொந்த மண்ணில் நடைபெறும் இந்த போட்டியில் அகமதாபாத் மைதானத்தில் இருக்கும் ஒரு லட்சம் ரசிகர்களும் இந்தியாவுக்கே ஆதரவை கொடுப்பார்கள் என்று எதிர்பார்ப்பாக பட் கமின்ஸ் தெரிவித்துள்ளார்.

அந்த சூழ்நிலையில் அகமதாபாத் மைதானத்தில் இந்திய ரசிகர்களின் சத்தம் கேட்காத அளவுக்கு தங்களுடைய அணி இந்தியாவுக்கு சவாலை கொடுத்து வெற்றி காணும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி போட்டி துவங்குவதற்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது அற்புதமாக இருக்கும். ஏனெனில் அவர்களுக்கு பின்னே ரசிகர்கள் இருப்பார்கள்”

- Advertisement -

“தற்சமயத்தில் அவர்கள் மகத்தான கிரிக்கெட்டை விளையாடி வருகின்றனர். கடந்த போட்டியில் ஸ்டார்க் மிகச் சிறப்பாக பந்து வீசினார். அவருக்கும் ஜோஸ் ஹேசல்வுட்டுக்கும் இடையேயான இருக்கும் ஓப்பனிங் ஃபார்ட்னர்ஷிப் எங்களுடைய வெற்றிக்கு முக்கியமாகும். இந்தியா இந்த உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடி வருகின்றனர். குறிப்பாக அவர்களுடைய பவுலர்கள் மிகவும் கூர்மையாக செயல்பட்டு வருகின்றனர்”

இதையும் படிங்க: அவங்க டீம்ல பெரிய வீக்னெஸ் இருக்கு.. ஒருத்தர் கூட சப்போர்ட் பண்ணமாட்டோம்.. வெற்றியாளரை கணித்த ஸ்வான்

“அந்த வகையில் இத்தொடரில் சிறந்த அணியாக செயல்பட்டு வரும் அவர்களுக்கு எதிராக ஃபைனலில் விளையாடுவோம் என்று நினைக்கவில்லை. மேலும் ஃபைனல் நடைபெறும் மைதானத்தில் ரசிகர்கள் ஒரு தலைபட்சமாக இருப்பார்கள். அவர்களை அமைதியாக இருக்க வைப்பது எங்களுக்கு மிகப்பெரிய திருப்தியை கொடுக்கும்” என்று கூறினார். அப்படி சவாலான ஆஸ்திரேலியாவை சொந்த ரசிகர்கள் ஆதரவுடன் இந்தியா எதிர்கொள்ள முழு வீச்சில் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement