அவங்க டீம்ல பெரிய வீக்னெஸ் இருக்கு.. ஒருத்தர் கூட சப்போர்ட் பண்ணமாட்டோம்.. வெற்றியாளரை கணித்த ஸ்வான்

Greame Swann
- Advertisement -

அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி நவம்பர் 19ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெறுகிறது. 1,32,000 ரசிகர்கள் அமரக்கூடிய அந்த மைதானத்தில் நடைபெறும் அப்போட்டியில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்று போட்டிகளில் வென்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் கோப்பையை வென்று புதிய சாம்பியனாக சாதனை படைக்க போராட உள்ளன.

அதில் 2 அணிகளுமே உலகத்தரம் வாய்ந்த வீரர்களுடன் சமமான பலத்தை கொண்டிருப்பதால் வெல்லப்போவது யார் என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இவ்விரு அணிகளில் 2003 உலக கோப்பை ஃபைனல் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியாவை தோற்கடித்தது போல் ஐசிசி தொடர்களில் எப்படி செயல்பட வேண்டும் என்பதை நன்றாக தெரிந்து கொள்ள ஆஸ்திரேலியா 6வது கோப்பையை வெல்லும் அளவுக்கு தேவையான பலத்தைக் கொண்டிருக்கிறது.

- Advertisement -

சப்போர்ட் கிடையாது:
மறுபுறம் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 10 போட்டிகளில் வென்று உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் இந்தியா முழு பலத்துடன் இருப்பதால் ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்து 2003 தோல்விக்கு பழி தீர்த்து 2011 போல கோப்பையை வெல்ல தயாராகியுள்ளது. இந்நிலையில் குல்தீப் யாதவ் – ரவீந்திர ஜடேஜா போன்ற தரமான ஸ்பின்னர்களை எதிர்கொள்ளும் அளவுக்கு ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பலமாக இல்லை என்று கிரேம் ஸ்வான் தெரிவித்துள்ளார்.

மேலும் தாம் உட்பட எந்த இங்கிலாந்து ரசிகரின் ஆதரவும் ஆஸ்திரேலியாவுக்கு இருக்காது என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இந்த தொடர் முழுவதும் இந்தியா தங்களுடைய எந்த பலவீனத்தையும் வெளியே காட்டவில்லை. மறுபுறம் ஆஸ்திரேலிய சுழல் பந்து வீச்சுக்கு எதிராக அப்பட்டமான பலவீனத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடந்த போட்டியில் கூட அவர்களால் எளிதாக வெல்ல முடியவில்லை”

- Advertisement -

“குறிப்பாக 212 ரன்களை தொடுவதற்கு அவர்கள் திண்டடினார்கள். அந்த வகையில் ஆஸ்திரேலியா தடுமாறி வந்த ஃபைனலுக்கு இந்தியா சிறப்பாக விளையாடி வந்துள்ளது. எனவே செமி ஃபைனல் உட்பட இதுவரை விளையாடிய அதே நேர்மறையான மனநிலையுடன் விளையாடினால் இந்தியா எவ்விதமான போட்டியுமின்றி கண்டிப்பாக கோப்பையை வெல்லும். அதே சமயம் ஆஸ்திரேலியாவை நீங்கள் குறைத்து மதிப்பிட முடியாது”

இதையும் படிங்க: உலகக்கோப்பை இறுதிப்போட்டி மழையால் கைவிடப்பட்டால் சாம்பியன் யார்? – ரூல்ஸ் கூறுவது என்ன?

“துரதிஷ்டவசமாக இதை சொல்லும் நான் ஒரு ஆங்கிலேயராக இருக்கிறேன். இந்த ஃபைனலில் 2 சிறந்த அணிகள் மோதுகின்றன. அதில் கண்டிப்பாக நான் இந்தியாவுக்கு ஆதரவு கொடுப்பேன். இந்த கிரகத்தில் இருக்கும் ஒரு ஆங்கில ரசிகர் கூட ஆஸ்திரேலியாவுக்கு கண்டிப்பாக ஆதரவு கொடுக்க மாட்டார்கள்” என்று கூறினார். அதாவது தங்களுடைய பரம எதிரியான ஆஸ்திரேலியாவுக்கு இப்போட்டியில் இங்கிலாந்து ரசிகர்கள் ஆதரவு கொடுக்க மாட்டார்கள் என்று அவர் வெளிப்படையாக ஜாலியாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement