இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியானது நாளை ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 19-ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் சாம்பியன் பட்டத்திற்காக பலப்பரீட்சை நடத்த காத்திருக்கின்றன.
ஐந்து முறை உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்ற ஆஸ்திரேலிய அணியும், இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணியும் இந்த போட்டியில் களமிறங்குவதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. அதேவேளையில் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறவே அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.
இவ்வேளையில் இந்த இறுதிப்போட்டியானது மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்? என்பது குறித்த கேள்வியும் அனைவரது மத்தியிலும் உள்ளது. அந்த வகையில் இந்த உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியானது மழை காரணமாக தடைபட்டால் என்ன நடக்கும்? என்பது குறித்து முழு தகவலை இங்கு காணலாம்.
அதன்படி இந்த உலக கோப்பை தொடரானது அறிவிக்கப்பட்டபோதே அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகளில் மழை பெய்தால் ரிசர்வ் டேவில் போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாளைய போட்டி மழையால் தடைபடும் பட்சத்தில் அடுத்த நாள் ரிசர்வ் டேவில் ஆட்டம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
ஒருவேளை நாளைய ஆட்டம் துவங்கி சில ஓவர்கள் வீசப்பட்டு போட்டி இடையில் மழையால் தடைபடும் பட்சத்தில் எந்த இடத்தில் போட்டி நின்றதோ அதே இடத்தில் இருந்து தான் அடுத்தநாள் போட்டி நடைபெறும். ஒருவேளை இரண்டு நாட்களும் மழையால் போட்டி நடைபெற முடியாமல் போனால் லீக் சுற்றில் எந்த அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறதோ அந்த அணியே சாம்பியனாக அறிவிக்கப்படும்.
இதையும் படிங்க : அவர் மட்டும் 100 பால் எதிர்கொண்டா மேட்ச் இந்தியாவின் பக்கம்.. ஐபிஎல் அனுபவம் உதவும்.. யுவி நம்பிக்கை
அந்த வகையில் பார்க்கையில் இந்தியா லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியல் முதல் இடத்தில் உள்ளதால் அவர்களே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்கள். மற்றபடி போட்டி முழுவதுமாக நடைபெறும் பட்சத்தில் அந்த போட்டியில் வெற்றி பெறும் அணியே சாம்பியனாக அறிவிக்கப்படும். நாளைய போட்டி நடைபெற இருக்கும் அகமதாபாத் மைதானத்தில் மதிய வேளையில் 33 டிகிரி அளவிற்கு வெப்பம் இருக்கும் என்றும் மாலை 24 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கும் என்பதாலும் மழை அச்சுறுத்தல் ஏதும் இருக்காது என்று கூறப்படுகிறது.