- Advertisement -
உலக கிரிக்கெட்

ஆப்கானிஸ்தான் வீரரை பேட்டால் அடிக்க பாய்ந்த பாக் வீரர். பரபரப்பான ஷார்ஜா மைதானம் – நடந்தது என்ன?

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 15-வது ஆசியக் கோப்பை தொடரானது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் ஏற்கனவே இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் இலங்கை என அடுத்தடுத்த தோல்விகளை “சூப்பர் 4” சுற்றில் சந்தித்ததன் காரணமாக இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து விட்டது. இந்நிலையில் நேற்று ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முக்கியமான போட்டி சார்ஜா மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் அணி தகுதி பெறும் என்று கூறப்பட்ட வேளையில் நேற்றைய போட்டியில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதி ஓவரில் வெற்றி பெற்று ஆசிய கோப்பை தொடரின் இறுதி போட்டியில் விளையாடும் வாய்ப்பை பாகிஸ்தான அணி பெற்றுள்ளது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தது.

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான அணி துவக்கத்தில் மிகச் சிறப்பாக பேட்டிங்கை துவங்கினாலும், பின்னர் இரண்டாவது பாதியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்களை மட்டுமே குவித்தது. ஆப்கானிஸ்தான் அணி சார்பாக இப்ராஹிம் ஜார்டான் 35 ரன்கள் குவித்தார்.

பின்னர் 130 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் அணியானது ஆரம்பத்தில் இருந்தே இடையிடையே விக்கெட்டுகளை இழந்து வந்த வேளையில் ஒரு கட்டத்தில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் அணியே வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் கடைசி வீரராக களத்தில் இருந்த நஸீம் ஷா 20-ஆவது ஓவரின் முதல் இரண்டு பந்துகளையும் சிக்ஸருக்கு விளாசி பாகிஸ்தான் அணியை திரில் வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் அதிரடி வீரரான ஆசிப் அலி பரீத் அகமது வீசிய பந்தில் ஒரு சிக்சரை அடித்து விடுத்து அடுத்த பந்தியிலேயே ஆட்டம் இழந்தார். அப்படி அவர் ஆட்டம் இழந்த போது அந்த விக்கெட்டை கொண்டாட தனது ஆக்ரோஷமான மகிழ்ச்சியை பரீத் அகமது வெளிப்படுத்தினார். இதனால் கடுப்பான ஆசிப் அலி அவரது பேட்டை வைத்து பரீத் அகமதை நோக்கி அடிப்பது போன்ற செய்கையை வெளிப்படுத்தினார்.

இதையும் படிங்க : ஐபிஎல் கிரிக்கெட்டில் மிஸ்டர் ஐபிஎல் சுரேஷ் ரெய்னாவின் சிறந்த 5 இன்னிங்ஸ்களின் பட்டியல்

இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளு முள்ளும் ஏற்பட்டது. அதன் பின்னர் வீரர்கள் மற்றும் அம்பயர் ஆகியோர் தலையிட்டு இருவரையும் விளக்கி அனுப்பி வைத்தனர். இந்த கைகலப்பினால் ஷார்ஜா மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by