கலாய்த்த சேவாக், தொடர் மழை எதிரொலியால் ஆசிய கோப்பையின் சூப்பர் 4 சுற்று புதிய இடத்துக்கு மாற்றம்? விவரம் இதோ

Rain 1
- Advertisement -

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பாகிஸ்தானில் கோலாகலமாக துவங்கிய 2023 ஆசிய கோப்பையின் பெரும்பாலான போட்டிகள் இலங்கையில் நடைபெற்று வருகிறது. தங்களுடைய சொந்த மண்ணில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் நேபாளை துவம்சம் செய்த பாகிஸ்தான் மிகப்பெரிய வெற்றி பெற்று தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்தது. ஆனால் அதன் பின் இலங்கையில் இதுவரை நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் மழையின் தாக்கம் இருந்து வருவது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்து வருகிறது.

குறிப்பாக பல்லக்கேல் நகரில் நடைபெற்ற வங்கதேச மற்றும் இலங்கை அணிகள் மோதிய போட்டியில் லேசாக வந்து சென்ற மழை அனைவரது எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டியில் பாதிக்கு மேல் வந்து மொத்தமாக ரத்து செய்தது. அதனால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் பகிர்ந்து கொடுக்கப்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தான் 3 புள்ளிகளுடன் சூப்பர் 4 சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது.

- Advertisement -

போட்டியில் மாற்றம்:
மறுபுறம் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் சொதப்பலால் 66/4 என சரிந்த இந்தியா இஸான் கிசான் மற்றும் பாண்டியா ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தின் உதவியால் 267 ரன்களை இலக்காக நிர்ணயித்தும் வெற்றிக்காக போராட முடியவில்லை. அதனால் 1 புள்ளி மட்டுமே பெற்றுள்ள இந்தியா நேபாளுக்கு எதிரான 2வது போட்டியில் வென்றால் தான் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலைமைக்கு வந்துள்ளது.

ஆனால் அப்போட்டி நடைபெறும் நாளிலும் பல்லக்கேல் நகரில் 80 – 90% இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவிக்கிறது. அது போக அக்டோபர் 10ஆம் தேதி மீண்டும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் சூப்பர் 4 போட்டியில் இதே மைதானத்தில் நடைபெறும் போது 70 – 90% மழை பெய்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக மாநில மையம் கூறியுள்ளது. மொத்தத்தில் 2023 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இத்தொடரில் பாதிக்கும் மேற்பட்ட போட்டிகள் இப்படியே மழையால் ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது.

- Advertisement -

குறிப்பாக மழை வரும் போது காபி மற்றும் பக்கோடா சாப்பிடும் இடத்தில் ஆசிய கோப்பையை நடத்துவதாக விரேந்தர் சேவாக் ட்விட்டரில் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் இத்தொடரின் முக்கியமான சூப்பர் 4 சுற்று போட்டிகளும் மற்றும் ஃபைனலும் கொழும்புவில் இருக்கும் பிரேமதாசா மைதானத்தில் நடைபெற உள்ளது. ஆனால் தற்போது கொழும்பு நகரில் சாலையில் வெள்ளம் புரண்டு ஓடும் அளவுக்கு மழை வெளுத்து வாங்கி வருகிறது.

இதையும் படிங்க: உங்கள மாதிரி வன்மம் புடிச்சவர பாத்ததில்ல, ஆதாரத்துடன் சிக்கிய கெளதம் கம்பீரை – திட்டி தீர்க்கும் தோனி ரசிகர்கள், நடந்தது என்ன?

அதனால் சூப்பர் 4 மற்றும் ஃபைனல் போட்டிகளை தம்புலா அல்லது பல்லக்கேல் நகரில் இருக்கும் மைதானங்களுக்கு மாற்றுவதற்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் முடிவெடுத்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது. குறிப்பாக கொழும்புவில் செப்டம்பர் 9ஆம் தேதியிலிருந்து தான் ஆசிய கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளன. அதற்குள் நிலைமை சீராக விட்டால் அங்கு நடைபெறும் போட்டிகளை தம்புலா மைதானத்திற்கு மாற்ற ஆலோசித்து வரும் ஆசிய கவுன்சில் இது பற்றி அடுத்த 24 – 48 மணி நேரத்தில் இறுதி முடிவை எடுக்க உள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement