ஆசிய கோப்பை 2023 : சாம்சனுக்கு இடமில்லை, நேரில் வெளியிடும் அஜித் அகர்கர் – இந்தியாவின் 17 பேர் உத்தேச அணி இதோ

- Advertisement -

இந்தியாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி துவங்கும் 2023 ஐசிசி உலகக்கோப்பைக்கு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் தயாராகும் வகையில் ஆகஸ்ட் 30ஆம் தேதி ஆசிய கோப்பை துவங்குகிறது. உலக கோப்பைக்கு தேவையான இறுதிக்கட்ட அணியை தேர்வு செய்வதற்கு உதவும் இந்த தொடரில் பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகள் ஏற்கனவே தங்களுடைய அணிகளை அறிவித்து விட்டன. ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் ஆகிய 2 முக்கிய வீரர்கள் காயத்தை சந்தித்துள்ளதால் இந்தியா மட்டும் இதுவரை தங்களுடைய அணியை அறிவிக்காமல் தாமதம் செய்து வருகிறது.

Babar Azam Rohit Sharma IND vs PAK

- Advertisement -

இருப்பினும் ஆசிய கோப்பை துவங்குவதற்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே இருப்பதன் காரணமாக ஆகஸ்ட் 21ஆம் தேதி தலைநகர் டெல்லியில் நடைபெறும் செய்தியாளர்கள் சந்திப்பில் இத்தொடருக்கான 17 பேர் கொண்ட இந்திய அணியை புதிய தேர்வுக்குழு தலைவராக பொறுப்பேற்றுள்ள அஜித் அகர்கர் முதல் முறையாக செய்தியாளர்களை சந்தித்து வெளியிட உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இந்த ஆசிய கோப்பைக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று அதிகமாக எதிர்பார்க்கப்படும் வீரர்களை கொண்ட உத்தேச அணியை பற்றி பார்ப்போம்:

1. ஓப்பனிங்: முதல் தொடக்க தொடக்க வீரராக சந்தேகமின்றி கேப்டன் ரோகித் சர்மா இருப்பார் என்று நிலைமையில் 2வது தொடக்க வீரராக கடந்த வருடத்திலிருந்து சிறப்பாக செயல்பட்டு நல்ல ஃபார்மில் இருக்கும் சுப்மன் கில் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது.

அதே போல நடைபெற்று முடிந்த வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் ஹாட்ரிக் அரை சதங்கள் அடித்து அசத்திய இஷான் கிசான் பேக்-அப் தொடக்க வீரராகவும் விக்கெட் கீப்பராகவும் தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளது. அதன் காரணமாகவும் ஏற்கனவே வலது கை பேட்ஸ்மேன்கள் நிறைந்திருப்பதாலும் சஞ்சு சாம்சன் கழற்றிவிடப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கிறது.

- Advertisement -

2. மிடில் ஆர்டர்: மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கும் மிடில் ஆர்டரில் 3வது இடத்தில் சந்தேகமின்றி விளையாடுவார் என்ற நிலைமையில் 4வது இடத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்பட உள்ளார். 2019 உலக கோப்பைக்கு பின் அவர் மட்டுமே அந்த இடத்தில் வெற்றிகரமாக செயல்பட்டுள்ள இந்திய வீரராக அசத்தியுள்ள நிலையில் தற்போது என்சிஏவில் காயத்திலிருந்து குணமடைந்து விளையாடி வருவதால் ஆசிய கோப்பையிலும் விளையாட அதிக வாய்ப்புள்ளது.

KL rahul Shreyas Iyer

அதே போல கேஎல் ராகுலும் குணமடைந்து பயிற்சிகளை செய்வதால் முதன்மை விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது. அவர்களுக்கு பேக்-அப் வீரராக டி20 கிரிக்கெட்டில் அபாரமாக செயல்படுவதன் பலனாக சூரியகுமார் யாதவ் தேர்வாக வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது. இவர்களுடன் இடதுகை பேட்ஸ்மேன் தேவை என்பதற்காக திலக் வர்மா ஆச்சரியப்படும் வகையில் தேர்வாவதற்கும் வாய்ப்புள்ளது.

- Advertisement -

3. ஆல் ரவுண்டர்கள்: இந்த பிரிவில் சந்தேகமின்றி ரவீந்திர ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் இருப்பார்கள் என்று உறுதியாக நம்பலாம். பேக்-அப் வீரராக சர்தூள் தாக்கூர் விளையாடுவதற்கும் வாய்ப்புள்ளது.

Bumrah

4. பவுலர்கள்: பந்து வீச்சு துறையில் சந்தேகமின்றி காயத்திலிருந்து குணமடைந்துள்ள ஜஸ்பிரித் பும்ராவுடன் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ள முகமது சிராஜ் மற்றும் சீனியர் முகமது ஷமி ஆகியோர் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். சுழல் பந்து வீச்சுத் துறையில் தற்போது நல்ல ஃபார்மில் இருக்கும் குல்தீப் யாதவ் முதன்மை ஸ்பின்னராக விளையாட வாய்ப்புள்ளது.

- Advertisement -

அதே போல ஆல் ரவுண்டராக திகழும் அக்சர் பட்டேல் இத்தொடரில் இருப்பார் என்ற நிலைமையில் சஹால் சமீபத்திய தொடர்களில் அதிக ரன்களை வாரி வழங்குகிறார். மறுபுறம் அக்சர், குல்தீப், ஜடேஜா போன்ற அனைவருமே லெக் அல்லது லெப்ட் ஆர்ம் ஸ்பின்னர்களாக இருப்பதால் ஒரு ஆஃப் ஸ்பின்னர் தேவை என்பதற்காக இடது கை பேட்ஸ்மேன்களை தெறிக்க விடும் ரவிச்சந்திரன் அஸ்வின் அனுபவத்தை கருத்தில் கொண்டு தேர்வு செய்யப்படுவார் என்றும் சில செய்திகள் காணப்படுகின்றன.

இதையும் படிங்க:உலகக்கோப்பையில் அந்த இந்திய வீரரின் விக்கெட்டை வீழ்த்தனும். அதுவே என் இலக்கு – மகேஷ் தீக்ஷனா சவால்

2023 ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய உத்தேச அணி இதோ: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், இஷான் கிசான், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், சூரியகுமார் யாதவ், திலக் வர்மா, ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாகூர், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின்/யுஸ்வேந்திர சஹால்

Advertisement