உலகக்கோப்பையில் அந்த இந்திய வீரரின் விக்கெட்டை வீழ்த்தனும். அதுவே என் இலக்கு – மகேஷ் தீக்ஷனா சவால்

Maheesh-Theekshana
- Advertisement -

கடந்த 2011-ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தியாவில் எதிர்வரும் அக்டோபர் 5-ஆம் தேதி முதல் நவம்பர் 19-ஆம் தேதி வரை ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. இந்த தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் இந்திய அணியானது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

maheesh theekshana

- Advertisement -

அதேவேளையில் இந்திய அணிக்கு சவால் அளிக்கும் வகையில் அனைத்து அணிகளுமே தற்போது தயாராகி வருகின்றன. அந்த வகையில் இந்திய அணிக்கு எதிராக நடைபெறப்போகும் போட்டி குறித்து பேசியுள்ள இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளரான மகேஷ் தீக்ஷனா கூறுகையில் :

இந்திய அணிக்கு எதிராக என்னுடைய திட்டத்தை நான் மிகவும் சிம்பிளாகவே வைத்திருக்க போகிறேன். டி20 போட்டிகளை பொறுத்தவரை சிங்கிள்ஸ் கொடுப்பதில் தவறில்லை. ஏனெனில் பெரிய ஷாட்களை தருவதை விட சிங்கிள்ஸ் கொடுப்பதால் நிச்சயம் ஏதாவது ஒரு தவறை பேட்ஸ்மேன்கள் மேற்கொள்வார்கள்.

virat kohli 166

ஆனால் 50 போட்டிகள் என்பது முற்றிலும் மாறுபட்டது. 11-ஆவது ஓவர் முதல் 40-ஆவது ஓவர் வரை உள்வட்டத்திற்கு வெளியே நான்கு பீல்டர்கள் மட்டும் இருப்பதினால் அந்த மிடில் ஓவர்களில் நாம் விக்கெட்டை வீழ்த்த பேட்ஸ்மேன்கள் மீது அழுத்தத்தை கொடுக்க வேண்டும். அந்த வகையில் என்னுடைய திட்டத்தை மிகவும் தெளிவாக வைத்துக்கொள்ள விரும்புகிறேன்.

- Advertisement -

நிச்சயம் என்னுடைய பந்துவீச்சு எனது அணியின் வெற்றிக்கு உதவியாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன். அதோடு இந்தியாவில் இதுவரை நான் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தியதே கிடையாது. எனவே இம்முறை உலகக் கோப்பை போட்டியில் அவரை வீழ்த்த வேண்டும் அதுவே என்னுடைய இலக்கு என்று மகேஷ் தீக்ஷனா கூறியுள்ளார்.

இதையும் படிங்க : இடது கை பேட்ஸ்மேன்களுக்கு இடமில்ல, வேணும்னா 4வது இடத்தில் அவரையே ஆட வைக்கலாம் – ரவி சாஸ்திரிக்கு அஸ்வின் பதில்

எதிர்வரும் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிராக பங்கேற்க இருக்கும் இலங்கை அணி தங்களது பலத்தை அங்கு நிரூபித்து விட்டு பிறகு உலக கோப்பை தொடரிலும் இந்திய அணிக்கு எதிராக பங்கேற்க இருக்கிறது. மேலும் கடந்த 2011-ஆம் ஆண்டு உலக கோப்பையில் இறுதி போட்டி வரை முன்னேறியது போன்று இம்முறையும் நாங்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவோம் என மகேஷ் தீக்ஷனா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement