இடது கை பேட்ஸ்மேன்களுக்கு இடமில்ல, வேணும்னா 4வது இடத்தில் அவரையே ஆட வைக்கலாம் – ரவி சாஸ்திரிக்கு அஸ்வின் பதில்

Ravichandran Ashwin Ravi Shastri
- Advertisement -

ஐசிசி நடத்தும் 2023 உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் துவங்குகிறது. சர்வதேச கிரிக்கெட்டின் சாம்பியனை கண்டறிய உதவும் இத்தொடரில் சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் இந்தியா 2011 போல சாம்பியன் பட்டம் வென்று சரித்திரம் படைக்குமா என்ற எதிர்பார்ப்பு உச்சகட்டமாக காணப்படுகிறது. ஆனால் அதற்கு முன்பாக 2011 உலகக்கோப்பை சரித்திர வெற்றியில் யுவராஜ் சிங் போன்ற இடது கை பேட்ஸ்மேன்கள் முக்கிய பங்காற்றிய நிலையில் தற்போதைய அணியில் ரோகித் முதல் பாண்டியா வரை டாப் 7 பேட்ஸ்மேன்கள் வலதுகை வீரர்களாக இருப்பது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

KL rahul Shreyas Iyer

- Advertisement -

எனவே அதை சரி செய்ய வேண்டிய நிலைமையில் இருக்கும் இந்திய கிரிக்கெட் அணியில் நம்பர் 4வது இடத்தில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படும் ஸ்ரேயாஸ் ஐயர் இன்னும் காயத்திலிருந்து குணமடையாமல் இருப்பது மற்றொரு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த இடத்தில் அவரை தவிர்த்து சிறப்பாக்கு விளையாடுவதற்கு சரியான மாற்று வீரர் இல்லாதது 2023 ஆசிய கோப்பை அணியை அறிவிப்பதிலும் இந்தியாவுக்கு தாமதத்தை உண்டாக்கி வருகிறது.

அஸ்வின் ஆலோசனை:
இருப்பினும் அவர் குணமடையாமல் போனால் இந்த 2 பிரச்சனைகளையும் திலக் வர்மாவை தேர்வு செய்து சரி செய்யலாம் என்று ஏராளமான முன்னாள் வீரர்கள் ஆலோசனை தெரிவித்து வருகின்றனர். ஆனால் இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகாமல் 20 வயது மட்டுமே நிரம்பியுள்ள அனுபவமற்ற அவரை பெரிய தொடரில் தேர்வு செய்வது சரியான முடிவாக இருக்காது என்ற எதிர்ப்புகளும் காணப்படுகின்றன. அந்த நிலைமையில் இந்திய அணியின் டாப் ஆர்டர் அதிக எடையுடன் இருப்பதால் ஆரம்பத்தில் சில விக்கெட்டுகளை விழுந்தால் தோல்வி கிடைக்க வாய்ப்பிருப்பதாக ரவி சாஸ்திரி தெரிவித்திருந்தார்.

Ravi-Shastri-Coach

எனவே டாப் ஆர்டரின் எடையை குறைக்க நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 2019 உலகக்கோப்பையிலேயே 4வது இடத்தில் விளையாட வைக்க நினைத்ததாக தெரிவித்த அவர் இம்முறை அதை செய்யலாம் என்று ஆலோசனை தெரிவித்திருந்தார். இந்நிலையில் 2011 உலகக்கோப்பையில் சச்சின், சேவாக், கம்பீர் ஆகியோரை தொடர்ந்து 4வதாக விளையாடிய விராட் கோலியை வைத்து அந்த பிரச்சினையை எளிதாக தீர்க்கலாம் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.

- Advertisement -

இருப்பினும் அது கேஎல் ராகுல் காயத்தால் வெளியேறி இஷான் கிசான் தொடக்க வீரராக களமிறங்கினால் மட்டுமே சாத்தியமாகும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “2011 உலகக் கோப்பையில் விராட் கோலி 4வது இடத்தில் தான் விளையாடினார். சொல்லப்போனால் 4வது இடத்தில் விளையாட வேண்டிய நிலைமை ஏற்பட்டால் விராட் கோலி அங்கே விளையாட வேண்டும் என்று ரவி சாஸ்திரியும் கூறியிருந்தார். மேலும் அவர் ஒரு இடது கை வீரருக்கு இடமளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார் என நினைக்கிறேன்”

Ravichandran Ashwin 2

“ஆனால் கேஎல் ராகுல் காயத்தால் விலகினால் மட்டுமே விக்கெட் கீப்பர் தேவை உருவாகும் என்பதால் இசான் கிசான் தொடக்க வீரராக களமிறங்குவார். அப்போது தான் விராட் கோலி 4வது இடத்தில் விளையாடுவதற்கான வாய்ப்பு உருவாகும். ஏனெனில் ஒருநாள் போட்டிகளில் ஸ்ரேயாஸ் ஐயர் இந்தியாவின் முக்கிய வீரராக இருக்கிறார்” என்று கூறினார். அத்துடன் இந்திய பேட்டிங் வரிசையில் 3 இடதுகை வீரர்கள் இருக்க வேண்டுமென ரவி சாஸ்திரி கூறியிருந்தார். ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என்று தெரிவிக்கும் அஸ்வின் இது பற்றி மேலும் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க:தோனி ஒரு அற்புதமான லீடர். அவர்கிட்ட இருந்து நான் கத்துக்கிட்டது இதுதான் – மஹேஷ் தீக்ஷனா வெளிப்படை

“ரவி சாஸ்திரி டாப் 7 பேட்ஸ்மேன்களில் 3 வீரர்கள் இடது கை பேட்ஸ்மேன்களாக இருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். ஆனால் அந்த 3 பேரை நீங்கள் எந்த இடத்தில் கொண்டு வருவீர்கள். ஏனெனில் ரோகித் சர்மா, கில், விராட் கோலி ஆகியோர் ஏற்கனவே நிலையான இடத்தை பிடித்துள்ளார்கள். அதே போல ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் தங்களுடைய இடத்தை உறுதி செய்துள்ளனர். மேலும் ராகுல், ஸ்ரேயாஸ் ஆகியோர் குணமடைந்து வந்தாலும் நிச்சயமாக 4, 5வது இடங்களில் விளையாடுவார்கள்” என்று கூறினார்.

Advertisement