டெஸ்ட் கிரிக்கெட்டில் ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய சாதனை – விரைவில் இமாலய சாதனை நிகழ்த்த வாய்ப்பு

Ashwin
- Advertisement -

இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் விளையாடி வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நகரில் துவங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற புதிய டெஸ்ட் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதை அடுத்து தனது பேட்டிங்கை தொடங்கிய இந்தியாவிற்கு ரோஹித் சர்மா 29 ரன்கள் மயங் அகர்வால் 33 ரன்கள் எடுத்து ஓரளவு சுமாரான தொடக்கம் கொடுத்தனர்.

Pant

- Advertisement -

அடுத்து வந்த ஹனுமா விஹாரி 58 ரன்களில் அவுட்டாக அவருடன் தனது 100வது மைல்கல் போட்டியில் விளையாடி சாதனைப் படைத்த விராட் கோலி 45 ரன்களில் அவுட்டாகி மீண்டும் சதம் அடிக்க முடியாமல் அவுட்டானார். அடுத்த வந்த ஷ்ரேயஸ் ஐயர் 27 ரன்களில் நடையை கட்டியதால் 175/4 என தவித்த இந்தியாவை ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டெடுத்தார்கள்.

இந்தியா 574 ரன்களில் டிக்ளேர் :
இந்த ஜோடியில் அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் 96 பந்துகளில் 96 ரன்கள் குவித்து சதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டை விட்டு அவுட்டானார். ஆனால் அவருடன் தொடர்ந்து பேட்டிங் செய்த ரவீந்திர ஜடேஜா இலங்கை பந்துவீச்சாளர்களை பந்தாடி அவர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார்.

Ravindra Jadeja

அவருடன் அடுத்ததாக களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் தன் பங்கிற்கு இலங்கை பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கி அரைசதம் கடந்து 61 ரன்கள் அடித்து அவுட்டானார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து சதமடித்து பேட்டிங் செய்து வந்த ரவீந்திர ஜடேஜா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 175* ரன்கள் எடுத்திருந்தபோது கேப்டன் ரோகித் சர்மா இந்தியாவின் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தார். இதனால் அவர் சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டாலும் 574/8 என இமாலய ஸ்கோரை எடுத்து நல்ல நிலையை எட்டியது.

- Advertisement -

வெற்றி பெறும் நிலையில் இந்தியா:
இதை அடுத்து தனது பேட்டிங்கை துவக்கிய இலங்கை வீரர்கள் இந்தியாவுக்கு எதிராக பந்துவீசி பீல்டிங் செய்த சோர்வில் இருந்த காரணத்தால் நிலையான பேட்டிங்கை வெளிப்படுத்த முடியாமல் ஆரம்பத்திலேயே தடுமாறினார்கள். குறிப்பாக அந்த அணியில் நீண்ட நாட்கள் கழித்து இடம்பிடித்து அனுபவ வீரர் லகிறு திரிமண்ணே 17 ரன்கள் எடுத்திருந்தபோது ரவிச்சந்திரன் அஸ்வின் வீசிய பந்தில் எல்பிடபிள்யூ ஆனார்.

Ashwin

அந்த வேளையில் அந்த அணியின் முக்கிய வீரர்களான கேப்டன் கருணரத்னே மற்றும் அனுபவம் வாய்ந்த ஏஞ்சலா மேத்யூஸ் ஆகியோரும் இந்திய பவுலர்களின் தரமான பந்துவீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்கள். இதனால் 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 108/4 என்ற மோசமான நிலையில் தவிக்கும் இலங்கை இப்போட்டியில்தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. மறுபுறம் 466 முன்னிலை வகிக்கும் இந்தியா இப்போட்டியில் இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்ய பிரகாச வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனை:
இந்த போட்டியில் இரண்டாவதாக பந்து வீசி வரும் இந்தியாவிற்கு நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இலங்கையின் திரிமண்ணே மற்றும் டீ சில்வா ஆகிய 2 வீரர்களை அடுத்தடுத்து அவுட் செய்து ஆரம்பத்திலேயே போட்டியை இந்தியாவின் பக்கம் திருப்பினார். இப்போட்டியில் இதுவரை 2 விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 11வது பந்துவீச்சாளர் என்ற நியூசிலாந்தை சேர்ந்த ஜாம்பவான் சர் ரிச்சர்ட் ஹேட்லியை முந்திய புதிய சாதனை படைத்தார்.

Richard Hadlee Ravichandran Ashwin

இதுநாள் வரை இச்சாத்தனையை நியூசிலாந்தின் மகத்தான வேகப்பந்து வீச்சாளராக கருதப்படும் ஜாம்பவான் சர் ரிச்சர்ட் ஹட்லீ 86 போட்டிகளில் 431 விக்கெட்டுகள் எடுத்து தன் வசம் வைத்திருந்தார். ஆனால் 85 போட்டிகளில் 432 விக்கெட்டுகளை எடுத்துள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது அவரை முந்தி புதிய சாதனை படைத்துள்ளார்.

இதையும் படிங்க : 20 நிமிட போராட்டம். ஷேன் வார்ன் மறைவிற்கு பின்னால் உள்ள மர்மம் – தாய்லாந்து அரசாங்கம் கொடுத்த விளக்கம்

இது மட்டுமல்லாமல் தற்போது 11வது இடத்தில் இருக்கும் அவர் இந்த போட்டியில் இன்னும் 3 விக்கெட்டுகள் எடுக்கும் பட்சத்தில் இந்தியாவின் கபில்தேவ் (434 விக்கெட்கள்), இலங்கையின் ரங்கனா ஹேராத் (433 விக்கெட்கள்) ஆகியோரை முந்தி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்த 9வது பவுலர் என்ற என்ற புதிய சாதனையையும் படைப்பார். அதேபோல் இப்போட்டியில் இன்னும் 8 விக்கெட்டுகளை எடுத்தால் தென்ஆப்பிரிக்க ஜாம்பவான் டேல் ஸ்டெய்னை முந்தி 8வது பவுலராக சாதிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement