20 நிமிட போராட்டம். ஷேன் வார்ன் மறைவிற்கு பின்னால் உள்ள மர்மம் – தாய்லாந்து அரசாங்கம் கொடுத்த விளக்கம்

Warne-2
- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவானான ஷேன் வார்ன் மார்ச் 4-ஆம் தேதி நேற்று திடீரென மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி வெளியானதிலிருந்து உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 52 வயது மட்டுமே நிரம்பிய அவர் தொடர்ச்சியாக கிரிக்கெட் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டிருந்த வேளையில் திடீரென்று அவரது இந்த மறைவினை யாராலும் அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

Warne-1

- Advertisement -

இந்நிலையில் அவரது மறைவு குறித்த பல்வேறு மர்மமான விடயங்கள் தற்போது தொடர்ந்து சமூகவலைதளத்தில் அதிகளவு பகிரப்பட்டு வருகின்றன. அதாவது அவர் அதிக உடல் எடை காரணமாக மீண்டும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று அதிக உடற்பயிற்சி செய்தாலே இறந்தார் என்று ஒரு சில செய்திகள் வெளியாகின.

அதேபோன்று வரும் ஜூலை மாதத்திற்குள் தான் பிட்டாக மாற வேண்டும் என்று “Operation Shred” என்ற கடுமையான டயட்டை அவர் மேற்கொண்டதால் அதன் பக்க விளைவுகளால் அவரது இழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று ஒரு சில கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. மேலும் அவரது உணவு பழக்கங்கள், போதை பழக்கம் காரணமாகவும் இந்த மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று பலவிதமான கருத்துகளை சமூகவலைதளத்தில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன.

Warne

இந்நிலையில் ஷேன் வார்ன்னின் மரணம் குறித்து தாய்லாந்து நாட்டு அரசாங்கம் அதிகாரப்பூர்வமான ஒரு விளக்கத்தை கொடுத்துள்ளது. அதன்படி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் : ஷேன் வார்ன் மற்றும் அவருடைய மூன்று நண்பர்கள் விடுமுறைக்காக தாய்லாந்து வந்திருந்தனர். இரவு உணவிற்கு அவர் நண்பர்களுடன் இணையாததால் அந்த நண்பர்கள் கூட்டத்தில் இருந்த ஒருவர் வார்னை பார்க்க சென்றபோது அவர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

- Advertisement -

உடனடியாக முதலுதவிக்கு ஆம்புலன்சை அழைத்த அவரது நண்பர் 10 முதல் 15 நிமிடங்கள் வரை அவருக்கு முதலுதவி சிகிச்சை வழங்க வழி வகுத்தார். இருப்பினும் நிலைமை மோசமானதால் பின்னர் தாய்லாந்து நாட்டின் சர்வதேச மருத்துவமனையில் அவரை அனுமதித்து அங்கும் 5 நிமிடங்கள் தீவிர சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவரின் உயிர் பிரிந்தது. அவரின் மரணத்திற்கான காரணங்கள் குறித்து பல மர்மமான விஷயங்கள் வெளியாகி வருகின்றன.

இதையும் படிங்க : லெக் ஸ்பின் பந்துவீச்சை உயிர் கொடுத்து காப்பாற்றிய ஷேன் வார்னே எனும் மகத்தான கலைஞன் – சிறப்பு பதிவு

ஆனால் எங்களை பொறுத்தவரை அவருடைய மரணத்தில் எந்தவித சந்தேகத்திற்குரிய விடயமும் இல்லை. அவரது மரணம் முற்றிலும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் இயற்கையாகவே ஏற்பட்ட மாரடைப்பினால் மட்டுமே நடந்துள்ளது. இதில் எந்த ஒரு மர்மமோ, சூழ்ச்சியோ கிடையாது என்றும் இயற்கையாகவே உதவி செய்ய முடியாத நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாகவே அவர் உயிர் பிரிந்துள்ளது என்று தாய்லாந்து அரசாங்கம் தெளிவான விளக்கத்தை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement