லெக் ஸ்பின் பந்துவீச்சை உயிர் கொடுத்து காப்பாற்றிய ஷேன் வார்னே எனும் மகத்தான கலைஞன் – சிறப்பு பதிவு

Warne-1
- Advertisement -

ஆஸ்திரேலியாவை சேர்ந்த நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் ஜாம்பவான் ஷேன் வார்னே நேற்று திடீரென தனது 52வது வயதில் மாரடைப்பால் காலமானார். கடந்த 1992ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் 2007 வரை 15 ஆண்டுகளுக்கு மேலாக உலகின் டாப் பேட்ஸ்மேன்களுக்கு தனது அபாரமான சுழல் பந்து வீச்சால் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார்.

Warne-3

- Advertisement -

கடந்த 2007ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற போதிலும் ஐபிஎல் தொடர் தோற்றுவிக்கப்பட்ட 2008ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட்டு முதல் தொடரிலேயே கோப்பையை வென்று சாதனை படைத்தார். அந்த அளவுக்கு தரமான கிரிக்கெட் வீரராக உலகிற்கு தன்னை நிரூபித்த அவர் அதன்பின் கிரிக்கெட் மீது இருந்த காதல் காரணமாக நேரடி கிரிக்கெட் போட்டிகளுக்கு தொலைக்காட்சியில் வர்ணனை செய்து வந்தார்.

மகத்தான ஷேன் வார்னே:
அவர் வீசும் பந்துகளை எதிர்கொள்வதற்கு சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா உள்ளிட்ட உலகின் எந்த ஒரு டாப் பேட்ஸ்மேனாக இருந்தாலும் கண்டிப்பாக யோசிப்பார்கள். ஏனெனில் அவர் வீசிய பெரும்பாலான பந்துகள் தரையில் பிட்ச் ஆனபின் யாருமே எதிர்பாராத வண்ணம் திடீரென சுழன்று பேட்ஸ்மேன்களை ஏமாற்றி ஸ்டம்ப் மீது பட்டு விக்கெட்டாக மாறிவிடும்.

Shane Warne Rajasthan Royals RR IPL 2008

பேட்டிங்கில் சச்சின் டெண்டுல்கர் களமிறங்கினால் எந்த அளவுக்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருக்குமோ அதே அளவுக்கு ஷேன் வார்னே பந்து வீசினால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு இருப்பது மட்டுமல்லாமல் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு கலக்கம் இருக்கும். அந்த அளவுக்கு தரமான இவர் கிரிக்கெட் வரலாற்றிலேயே முத்தையா முரளிதரனுக்கு பின் அதிக விக்கெட்டுகளை (1001 விக்கெட்கள்) வீழ்த்திய 2வது பந்துவீச்சாளராக உலக சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

லெக் ஸ்பின்னுக்கு உயிர் கொடுத்த ஜாம்பவான்:
சொல்லப்போனால் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய லெக் ஸ்பின்னராக சாதனை படைத்துள்ள ஷேன் வார்னே கிரிக்கெட் வரலாற்றின் தலைசிறந்த லெக் ஸ்பின்னராக கருதப்படுகிறார். பொதுவாக சுழல் பந்துவீச்சில் நிறைய வகைகள் இருந்தாலும் அதில் ஆப் ஸ்பின் மற்றும் லெக் ஸ்பின் என 2 வகையான பவுலிங் தான் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இதில் ஆப் ஸ்பின் பந்து வீச்சுக்கு எடுத்துக்காட்டாக 800 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்த முரளிதரன் மற்றும் ஹர்பஜன்சிங், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரைக் கூறலாம்.

warne 1

லெக் ஸ்பின் பந்து வீச்சுக்கு எடுத்துக்காட்டாக ஷேன் வார்னே மற்றும் இந்தியாவின் அனில் கும்ப்ளே ஆகியோரைத் தவிர பெரிய உதாரணமாக கூறுவதற்கு யாருமில்லை. ஏனெனில் லெக் ஸ்பின் என்பது பிட்ச்சை பெரிதாக நம்பாமல் முழுக்க முழுக்க கையில் உள்ள பல்வேறு திறமை ஜாலங்களால் வீசப்படும் ஒரு பந்துவீச்சாகும். அப்படிப்பட்ட இந்த லெக் ஸ்பின் ஒரு காலத்தில் அழியும் தருவாயில் இருந்தபோது ஷேன் வார்னே தான் அதை காப்பாற்றினார் என்பது பலருக்கும் தெரியாது.

- Advertisement -

ஆட்சி செய்த ஃபாஸ்ட் பவுலர்கள்:
ஆம் 1970 – 80 போன்ற கிரிக்கெட் அதிக அளவுக்கு வளரத் தொடங்கிய காலகட்டங்களில் மைக்கேல் ஹோல்டிங், மால்கம் மார்ஷல், ஆன்டி ராபர்ட்ஸ், ரிச்சர்ட் ஹேட்லி,இயன் போத்தம், பாப் வில், டெனிஸ் லில்லி, ஜெஃப் தாம்சன் மற்றும் இந்தியா கண்ட மகத்தான கபில்தேவ் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் தான் உலக கிரிக்கெட்டை தங்கள் கட்டுக்குள் வைத்து இருந்தார்கள். அதாவது அந்த தருணங்களில் சுழல் பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம் சுமாராகவே இருந்தது. குறிப்பாக குறிப்பாக சுழல்பந்து வீச்சில் கடினமாக கருதப்படும் லெக் ஸ்பின் அழிவை நோக்கி சென்றது.

அந்த சமயத்தில் இந்தியா போன்ற சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கக்கூடிய ஆசிய கண்டத்தில் சிவராமகிருஷ்ணன், வேங்கடபதி ராஜு போன்ற ஒருசில சுழல் பந்து வீச்சாளர்களை தவிர இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வேகப்பந்து வீச்சுக்கு சாதகமளிக்க கூடிய வெளிநாடுகளில் ஒரு தரமான லெக் ஸ்பின் பந்துவீச்சாளர்கள் கூட உருவாகவில்லை. அந்த சமயத்தில் ஆஸ்திரேலியாவில் இருந்து தோன்றிய ஷேன் வார்னே வரலாற்றில் அதற்கு முன் விளையாடிய பந்துவீச்சாளர்களை மிஞ்சும் அளவுக்கு தனது அபாரமான திறமையால் லெக் ஸ்பின் பந்துவீச்சில் பல புதிய பரிணாமங்களை கொண்டு வந்தார்.

- Advertisement -

அதாவது புரியும்படி சொல்ல வேண்டுமெனில் இப்போது ஏபி டிவிலியர்ஸ் எப்படி விதவிதமான புதிய ஷாட்களை அறிமுகப்படுத்தி பவுண்டரிகளையும் சிகசர்களையும் பறக்கவிட்டு மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என பெயரெடுத்தாரோ அதேபோல 90-களில் ஷேன் வார்னே லெக் ஸ்பின் பந்துவீச்சில் வித விதமான நுணுக்கங்களை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.

Warne

கிங் ஆப் லெக் ஸ்பின்:

குறிப்பாக அறிமுகமான அடுத்த வருடத்திலேயே இங்கிலாந்தில் நடந்த ஒரு ஆஷஸ் போட்டியில் இங்கிலாந்து வீரர் மைக் கெட்டிங்க்கு எதிராக அவர் வீசிய ஒரு பந்து பிட்ச் ஆனபின் யாரும் எதிர்பாராத வண்ணம் தாறுமாறாக திரும்பி ஸ்டம்பில் பட்டு விக்கெட்டாக மாறும். இத்தனைக்கும் அந்த போட்டி அவர் முதல் முறையாக வெளிநாட்டில் களமிறங்கிய முதல் போட்டியாகும். அதை தொலைக்காட்சியில் வர்ணனை செய்து கொண்டிருந்த ஆஸ்திரேலியாவின் மற்றொரு முன்னாள் ஜாம்பவான் லெக் ஸ்பின்னர் ரிச்சி பெனட் “மிக அழகான பந்தை வீசி அவரை அவுட் செய்துவிட்டார். இந்த பந்து இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த பந்தாக இருக்கும் என எனக்கு தோன்றுகிறது” என வர்ணனை செய்தார்.

இறுதியில் 20ஆம் நூற்றாண்டின் இறுதியில் சிறந்த பந்தை தேர்வு செய்ததற்காக லண்டனில் நடந்த வாக்கெடுப்பில் ரிச்சி பெனட் கூறியது போலவே ஷேன் வார்னே வீசிய அந்த பந்து தான் 20ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த பந்தாக ஜாம்பவான்களால் தேர்வு செய்யப்பட்டது. அதன் காரணமாக “லெக் ஸ்பின் பந்து வீச்சுக்கு புதிய உயிர் கொடுத்தார்” மற்றும் “வரலாற்றில் மிகச்சிறந்த ஸ்பின் பவுலர்” என பல்வேறு பாராட்டுகளை ஷேன் வார்னே பெற்றார். மேலும் லெக் ஸ்பின் எனும் கலை என்றால் அதில் ஷேன் வாறர்னே ஒரு கலைஞன் என பலரும் பாராட்டினார்கள்.

warne 1

அப்படிப்பட்ட அவர் 1999ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை உள்ளிட்ட ஆஸ்திரேலியாவின் பல்வேறு சரித்திர வெற்றிகளில் மிக மிக முக்கிய பங்காற்றினார். அவரைப் பார்த்துதான் இன்று பல இளைஞர்கள் லெக் ஸ்பின் பந்து வீச்சை பயின்று பந்துவீச தொடங்கியுள்ளார்கள். மேலும் இன்று உலகின் முதன்மை லெக் ஸ்பின் பந்து வீச்சாளர்களாக வலம் வரும் ஆப்கானிஸ்தானின் ரஷித் கான், இந்தியாவின் சஹால், பாகிஸ்தானின் யாசிர் ஷா ஆகியோர் தங்களின் ரோல் மாடல் ஷேன் வார்னே தான் என வெளிப்படையாகவே பலமுறை கூறியுள்ளார்கள்.

முரளிதரனை விட மேல்:
டெஸ்ட் கிரிக்கெட் மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலக கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்துள்ள இலங்கையின் முத்தையா முரளிதரன் வரலாற்றின் மிகச்சிறந்த சுழல் பந்து வீச்சாளராக கருதப்படுகிறார். ஆனால் உண்மையில் அவரை விட ஷேன் வார்னே தான் மகத்தான சுழல்பந்து வீச்சாளர் என்றே கூறலாம்.

இதையும் படிங்க : வீடியோ : இந்த வீடியோவை பாத்தா கோலிக்கும், ரோஹித்துக்கும் சண்டைனு இனிமே யாரும் சொல்ல மாட்டாங்க

ஏனெனில் இலங்கையைச் சேர்ந்த முரளிதரன் இலங்கை, இந்தியா போன்ற சுழல் பந்து வீச்சுக்கு அதிக சாதகமாக இருக்கக்கூடிய ஆசிய கண்டத்தில் தான் பெரும்பாலும் பந்துவீசி பெரும்பாலான விக்கெட்டுகளை எடுத்தார். ஆனால் ஷேன் வார்னே பிறந்து வளர்ந்த ஆஸ்திரேலியாவில் இருக்கும் மைதானங்கள் அப்போது முதல் இப்போது வரை வேகப்பந்து வீச்சுக்கு தான் அதிக சாதகமாக இருந்து வருகிறது. வெளிப்படையாக சொல்ல வேண்டுமெனில் தார் ரோடு போல காணப்படும் சுழல் பந்து வீச்சுக்கு அதிகம் கைகொடுக்காத ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள மைதானங்களில் தனது அபார திறமையால் மிகச் சிறப்பாக பந்து வீசி 1001 விக்கெட்களை எடுத்துள்ள ஷேன் வார்னே உண்மையாகவே கிங் ஆப் ஸ்பின் என அழைப்பதில் எந்த தவறும் இல்லை.

Advertisement