உங்க பின்னால் வரவங்களுக்கு பெரிய தலைவலியை குடுத்துட்டீங்க – கோலியின் விலகல் குறித்து மனம்திறந்த அஷ்வின்

Ashwin
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரில் 2 க்கு 1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க அணி கோப்பையை கைப்பற்றி இருந்தது. இந்நிலையில் நேற்று திடீரென இந்திய அணியின் டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி தான் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஏனெனில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய விராட்கோலி அதனை தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் அறிவிக்கும் போது ஒருநாள் போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து அவர் வெளியேறி உள்ளதால் ரசிகர்கள் அவரை இனி கேப்டனாக பார்க்க முடியாதோ என்ற வருத்தத்தில் உள்ளனர். இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய விராட் கோலி குறித்து பல்வேறு பிரபலங்களும் தங்களது கருத்தினை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழக பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் சில கருத்துக்களை கூறியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது :

கிரிக்கெட்டில் கேப்டன்கள் எப்போதும், தங்களின் சாதனைகள், வெற்றிகள், தாங்கள் அணியை நிர்வகித்த விதம் ஆகியவற்றைப் பற்றிப் பேசப்படுவார்கள். ஆனால், நீங்கள் கேப்டனாக காட்டிய மரபு, கேப்டனுக்கென ஒரு தர அடையாளமாக இருக்கும். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் உங்கள் தலைமை பெற்ற வெற்றியைப் பற்றி இனிவருவோர் பேசுவார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : உங்களோட சாதனைகளை நெருங்கனுனா அது.. – விராட் கோலி பதவி விலகல் குறித்து யுவ்ராஜ் சிங் நெகிழ்ச்சி

உங்களுக்கு அடுத்து கேப்டனாக வருவோருக்கு உங்கள் சாதனைகளால் பெரிய தலைவலியை நீங்கள் விட்டுச் சென்றுவிட்டீர்கள் கோலி. அத்தகைய உயரத்தில் நாம் கண்டிப்பாக ஒரு இடத்தை விட்டு வெளியேற வேண்டும். ஆனால், அந்த இடத்தை அங்கிருந்து எதிர்காலம்தான் மேலே கொண்டு செல்லும்” என்றார்.

Advertisement