ஷேன் வார்னின் இந்த சாதனையை கனவில் கூட யாராலும் நினைத்து பார்க்க முடியாது – மனம்திறந்த அஷ்வின்

Warne
- Advertisement -

இந்தியா – இலங்கை அணிகள் மோதி வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டி நடைபெற்று முடிந்துள்ள நிலையில் 1 – 0* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து இவ்விரு அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 12-ஆம் தேதியன்று பெங்களூருவில் துவங்க உள்ளது.

ashwin 1

- Advertisement -

பகல் – இரவாக நடைபெற உள்ள இந்த போட்டியில் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகள் ஒரு பகலிரவு டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக விளையாட உள்ளன. இந்தப் போட்டியிலும் வெற்றி பெற்று 2 – 0 என்ற கணக்கில் மீண்டுமொரு ஒயிட்வாஷ் வெற்றியை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாதனை படைத்த அஷ்வின்:
முன்னதாக மொகாலியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்டுகள் சாய்த்த தமிழகத்தின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த 2-வது இந்திய பந்து வீச்சாளராக புதிய சாதனை படைத்தார். இதுவரை 85 போட்டிகளில் 436 விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் இதுநாள் வரை 131 போட்டிகளில் 434 விக்கெட்டுகள் எடுத்து 2வது இடத்தில் இருந்த ஜாம்பவான் கபில் தேவை முந்தி இந்தப் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

Ashwin

மேலும் 619 விக்கெட்களுடன் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய பந்துவீச்சாளராக முதலிடத்தில் சாதனை படைத்துள்ள ஜாம்பவான் அனில் கும்ப்ளே சாதனையையும் அவர் உடைப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது 35 வயதை கடந்துள்ள அஷ்வின் இன்னும் 3 – 4 வருடங்கள் மிகச் சிறப்பாக விளையாடினாலும் கூட அதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு என கருதப்படுகிறது. ஏனெனில் சமீப காலங்களாக டி20 போட்டிகளின் வருகையால் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் எண்ணிக்கை முன்பைவிட குறைந்து விட்டது.

- Advertisement -

1000 விக்கெட் சாத்தியமில்லை:
இந்நிலையில் சமீபத்தில் மாரடைப்பால் திடீரென மறைந்த ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் ஷேன் வார்னே பற்றி ரவிச்சந்திரன் அஸ்வின் தனது பக்கத்தில் மனம் திறந்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஷேன் வார்னே ஒரு வண்ணமயமான கேரக்டரை கொண்டவர். மேலும் அவர் பந்து வீச்சின் அடிப்படை இலக்கணத்தை மாற்றி அமைத்தவர். அவர் 1000 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த ஒரு மகத்தான ஜாம்பவான். அந்த சாதனையை பலராலும் படைக்க முடியாது.

warne 1

சொல்லப்போனால் அடுத்த தலைமுறை வீரர்கள் 1000 விக்கெட்டுகளை எடுக்கலாம் என்ற எண்ணத்தையே மறந்து விட வேண்டும். இதற்கு காரணம் டெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்து போய் விட்டது. மேலும் உலக அளவில் பல்வேறு டி20 லீக் தொடர்கள் வந்துவிட்டது. எனவே வீரர்களின் பணிச்சுமை ஒரு மிகப்பெரிய பளுவாக மாறிவிட்டது” என கூறினார். அவர் கூறுவது போல இலங்கையின் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் (1347) மற்றும் ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் ஷேன் வார்னே (1001) ஆகிய இருவர் மட்டுமே சர்வதேச போட்டிகளில் 1000 விக்கெட்கள் என்ற மாபெரும் இலக்கை கடந்த பந்து வீச்சாளர்களாக சரித்திரம் படைத்துள்ளார்கள்.

- Advertisement -

சொல்லப்போனால் அவரைகளை போல 1990 – 2010 வரையிலான காலகட்டங்களில் அனில் கும்ப்ளே, கிளென் மெக்ராத், வாசிம் அக்ரம் போன்ற ஒருசில ஜாம்பவான் வீரர்கள் 900க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்தார்கள். ஆனால் அதன்பின் ஐபிஎல் போன்ற டி20 போட்டிகளின் வருகையால் டெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கை குறைந்து போய் விட்டது. இதனால் இன்று சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு பவுலர் 500 விக்கெட்டுகளை கூட தொட முடியாது என்ற மோசமான நிலை ஏற்பட்டுள்ளதாக ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ஆதங்கத்தையும் வேதனையையும் வெளிப்படுத்தினார்.

இதையும் படிங்க : இதெல்லாம் நியாயமே இல்ல. நீங்க பண்ணது தவறு – பாகிஸ்தான் மீது அதிருப்தியை வெளிப்படுத்திய கம்மின்ஸ்

மகத்தான ஷேன் வார்னே:
கிரிக்கெட் கண்ட மகத்தான சுழல்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே மறைந்தது பற்றி அஸ்வின் மனம் உருகி பேசியது பின்வருமாறு. “உலக கிரிக்கெட் வரைபடத்தில் சுழல் பந்துவீச்சுக்கான கொடியை பிடிப்பவராக வார்னேவை நான் பார்க்கிறேன். அவர் சுழல் பந்து வீச்சாலும் எதிரணியை அட்டாக் செய்ய முடியும் என்ற இலக்கணத்தை கொண்டு வந்தார். மேலும் பிட்சில் ஒன்றுமே இல்லையென்றால் கூட தனது அபார திறமையால் விக்கெட்டுகளை எடுத்து காட்டினார். சுழல் பந்துவீச்சு என்ற கலைக்கு மாஸ்டர் என ஒருவர் இருப்பாரேயானால் அது வார்னே ஆவார். அவரைப் போன்ற ஒரு மகத்தான பந்துவீச்சாளர் விளையாடுவதை எவ்வளவு காசு கொடுத்து வேண்டுமானாலும் நான் பார்ப்பேன்” என புகழாரம் சூட்டினார்.

Advertisement