இதெல்லாம் நியாயமே இல்ல. நீங்க பண்ணது தவறு – பாகிஸ்தான் மீது அதிருப்தியை வெளிப்படுத்திய கம்மின்ஸ்

- Advertisement -

பாகிஸ்தான் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணியானது தற்போது பாகிஸ்தான் அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. கடந்த 24 ஆண்டுகளுக்கு பின்னர் முதன்முறையாக பாகிஸ்தான் சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வெற்றிகரமாக இந்த தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது.

pak vs aus

- Advertisement -

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 476 ரன்களையும், ஆஸ்திரேலியா 459 ரன்களை குவித்தது. அதனை தொடர்ந்து 2-வது இன்னிங்சில் பாகிஸ்தான் அணி ஐந்தாம் நாள் ஆட்டநேர முடிவில் இரண்டு விக்கட்டுகளை இழந்து 252 ரன்கள் எடுத்தது. ஒட்டு மொத்தமாக ஐந்து நாட்கள் ஆட்டம் நடைபெற்றும் போட்டி டிராவில் முடிவடைந்தது பலராலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக அமைந்தது.

மேலும் முற்றிலுமாக பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருந்த இந்த மைதானம் டெட் பிட்ச் என்றும் இந்தப் பிட்சில் 1100 ரன்களுக்கு மேல் எளிதாக அடிக்கப்பட்டதால் இந்த மைதானத்தின் மீது பலரும் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்த முதலாவது டெஸ்ட் போட்டி நடந்த ராவல்பிண்டி ஆடுகளம் குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.

cummins

இதுகுறித்து அவர் கூறுகையில் : பொதுவாகவே டெஸ்ட் போட்டியின்போது பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என இரண்டிற்கும் சம அளவிலான போட்டி இருக்கவேண்டும். ஆனால் முதல் டெஸ்ட் போட்டி நடந்த மைதானம் அந்த வகையில் இல்லை. டெஸ்ட் போட்டிகளுக்கான மதிப்பே பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என இரு தரப்பிற்கும் சரியான போட்டி இருக்க வேண்டும். அப்போதுதான் டெஸ்ட் போட்டி சுவாரசியமாக இருக்கும்.

- Advertisement -

ஆனால் முழுக்க முழுக்க பேட்ஸ்மேன்களுக்கு ஏற்ற வகையில் முதல் டெஸ்ட் போட்டி நடந்த ராவல்பிண்டி மைதானம் இருந்ததால் பவுலர்கள் மிகவும் சிரமப்பட்டனர். இதன் காரணமாக இனி வரும் போட்டிகளில் இதுபோன்ற மைதானங்கள் தயார் செய்யக் கூடாது என்றும் பாகிஸ்தான் நிர்வாகம் மீது தனது அதிருப்தியை அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

இதையும் படிங்க : ப்ளீஸ் அடுத்த மேட்ச்லையும் அதே தப்பை பண்ணாதீங்க. பாகிஸ்தான் நிர்வாகத்திடம் கெஞ்சிய – இன்சமாம் உல் ஹக்

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான அடுத்த இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 12ஆம் தேதி கராச்சி மைதானத்தில் துவங்குகிறது.

Advertisement