ப்ளீஸ் அடுத்த மேட்ச்லையும் அதே தப்பை பண்ணாதீங்க. பாகிஸ்தான் நிர்வாகத்திடம் கெஞ்சிய – இன்சமாம் உல் ஹக்

Inzamam
- Advertisement -

பாகிஸ்தான் நாட்டில் நிலவிவந்த அசாதாரணமான சூழ்நிலை காரணமாக கடந்த பல ஆண்டுகளாகவே எந்த ஒரு அணியும் அங்கு சென்று கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்து வந்தது. ஆனால் தற்போது காலங்கள் கடந்த பின்னர் மெல்ல மெல்ல பாகிஸ்தானிற்கு ஒவ்வொரு அணியாக சென்று கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். அந்த வகையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் பாகிஸ்தான் சென்ற ஆஸ்திரேலிய வீரர்கள் தற்போது எந்தவித பிரச்சனையுமின்றி பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றனர்.

pak vs aus

- Advertisement -

இவ்விரு அணிகளுக்கும் இடையே மார்ச் மாதம் நான்காம் தேதி துவங்கிய முதலாவது டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது. மொத்தம் ஐந்து நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் 14 விக்கெட்டை மட்டுமே விழுந்தாலும், ஏகப்பட்ட சதங்கள் பேட்ஸ்மேன்களால் அடிக்கப்பட்டதாலும் இந்த போட்டி முடிந்த பிறகு இந்த மைதானத்தின் தன்மை குறித்து பெரிய அளவில் சர்ச்சை வெடித்தது.

கொஞ்சமும் பவுலிங்கிற்கு சாதகமாக இல்லாத இந்த மைதானத்தில் பவுலர்கள் பந்துவீச மிகவும் சிரமப்பட்டனர். அதே வேளையில் பேட்டிங்க்கு மைதானம் எளிதாக ஒத்துழைத்தால் இந்த போட்டியில் 1100 ரன்களுக்கு மேல் எளிதாக அடிக்கப்பட்டது. எனவே இதுபோன்ற டெட் பிட்ச்களில் விளையாடுவதால் எந்த ஒரு பயனும் இல்லை என இந்த முதலாவது போட்டி முடிந்ததுமே பல்வேறு கருத்துக்கள் இணையதளத்தில் உலா வந்தன.

Pak vs Aus

அதோடு இந்த மாதிரி மைதானத்தில் விளையாடக் கூடாது என்ற விமர்சனமும் அதிகளவில் இருந்தது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான இன்சமாம் உல் ஹக் அடுத்த போட்டிக்கு இதேபோன்று பிட்சை தயார் செய்யக் கூடாது என்றும் நல்ல போட்டி நடைபெறும் அளவிற்கு சிறந்த முறையில் மைதானம் அமைக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில் கூறியதாவது :

- Advertisement -

முதலாவது டெஸ்ட் போட்டியில் மைதானத்தின் தன்மை குறித்து நிறைய புகார்கள் வந்தன. இது என்ன மாதிரி ஆடுகளம் என்றும் அதிகம் விமர்சிக்கப்பட்டது. ஆனால் முதல் போட்டியை போன்று அடுத்த போட்டியிலும் டெட் பிட்ச் இருக்கக்கூடாது. மைதானத்தில் இரு அணிகளுக்குமே பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிற்கும் சாதகமான முறையில் சரியான சமநிலையான மைதானங்கள் அமைக்கப்பட வேண்டும். டெஸ்ட் போட்டி ஐந்து நாட்கள் விளையாடியும் டிராவில் முடிவடைந்தது ஏற்கக் கூடியது அல்ல.

இதையும் படிங்க : அனில் கும்ப்ளே சாதனையை கண்டிப்பாக இவர்தான் முறியடிப்பார் – பார்த்திவ் படேல் ஓபன்டாக்

எனவே முடிவு கிடைக்கும் வகையில் ஒரு தரமான மைதானத்தை அமைக்க வேண்டும் என பாகிஸ்தான் நிர்வாகத்திடம் இன்சமாம் கேட்டுக் கொண்டுள்ளார். அதுமட்டுமின்றி இனி இதே போன்று டெஸ்ட் போட்டிகளை நடத்த டெட் பிட்ச்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement