ரோஹித் சர்மா மெகா ஏலத்திற்கு வந்தால் அவருடைய மொத்த மதிப்பு எத்தனை கோடி தெரியுமா? – அஷ்வின் கருத்து

Ashwin-and-Rohit
- Advertisement -

இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதிவியில் இருந்து ரோகித் சர்மா வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து டிரேடிங் முறையில் மும்பை அணிக்கு கொண்டுவரப்பட்ட ஹார்டிக் பாண்டியாவை மும்பை அணி கேப்டனாக நியமித்து இந்த தொடரில் பங்கேற்று விளையாடியது.

ரோஹித் சர்மாவின் ஏலத்தொகை எவ்வளவு :

அதன்படி பாண்டியா தலைமையில் விளையாடிய அந்த அணி படுமோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தினை பிடித்து வெளியேறியது. இதன் காரணமாக அதிருப்தியில் இருக்கும் போதே சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேறி மெகா ஏலத்திற்கு வருவார் என்று பலராலும் பேசப்பட்டது.

- Advertisement -

ஆனாலும் இதுவரை ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து வெளியேறுவாரா? இல்லையா? என்பது உறுதியாக வில்லை. ஆனாலும் மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து ரோகித் சர்மா வெளியேறி மெகா ஏலத்திற்கு வரும் பட்சத்தில் அவரை 50 கோடி ரூபாய் வரை கொடுத்து லக்னோ மற்றும் டெல்லி அணிகள் வாங்க இருப்பதாக கடந்த சில நாட்களாகவே செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் கூறுகையில் : ரோகித் சர்மாவிற்கு நிச்சயம் 20 கோடி வரை ஏலம் கேட்கப்படும். ஏனெனில் அவர் ஒரு நல்ல கேப்டன் என்பது மட்டுமின்றி அதிரடியான வீரர். அவருக்காக எந்த ஒரு அணியும் 20 கோடி வரை செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை.

- Advertisement -

ஆனால் அதைத் தாண்டி 50 கோடி வரை எல்லாம் யாரும் கேட்க மாட்டார்கள் என ரவிச்சந்திரன் அவர்கள் கூறியுள்ளார். இதன் காரணமாக ரோகித் சர்மாவின் அதிகபட்ச விலை 20 கோடி வரை இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இந்தியா – நியூஸிலாந்து முதல் டெஸ்ட் நடைபெறும் பெங்களூரு மைதானம் எப்படி? புள்ளிவிவரம்.. பிட்ச் ரிப்போர்ட்

கடந்த ஆண்டு அவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்படவில்லை என்றாலும் நடைபெற்று முடிந்த 2024 டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியை கேப்டனாக முன்னின்று வழிநடத்தி தோனிக்கு பிறகு இரண்டாவது முறையாக டி20 உலக கோப்பை வென்ற இந்திய கேப்டனாக சாதனை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement