சி.எஸ்.கே அணியில் அவரோட இடத்தை நிரப்புவது ரொம்ப கஷ்டம் – ரவிச்சந்திரன் அஷ்வின் ஓபன்டாக்

Ashwin
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு துவங்கிய ஐபிஎல் தொடரானது இதுவரை 15 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் அடுத்ததாக 2023-ஆம் ஆண்டிற்கான பதினாறாவது ஐபிஎல் தொடரானது வரும் மார்ச் மாதத்தில் துவங்கி நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக தற்போது இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் 10 அணிகளும் தங்களது அணியில் தக்கவைக்கும் மற்றும் வெளியேற்றும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 15-ஆம் தேதி வெளியிட்டது.

அதை தொடர்ந்து டிசம்பர் 23-ஆம் தேதி கொச்சியில் மினி ஏலம் நடைபெற இருப்பதாகவும் ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த மினி ஏலத்தில் ஒவ்வொரு அணியில் இருந்தும் கழட்டி விடப்பட்ட வீரர்களை ஏலத்தில் எடுக்க மற்ற அணிகள் போட்டி போடும். அதே வேளையில் டிரேடிங் மூலமும் சில வீரர்கள் ஏலத்திற்கு முன்பாகவே அணிமாற்றம் செய்துள்ளனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாட மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரவீந்திர ஜடேஜா மீண்டும் 2023-ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் சென்னை அணிக்காக தான் விளையாடுவேன் என்று ஏற்கனவே உறுதி செய்திருந்தார். அதே வேளையில் சென்னை அணியும் ரவீந்திர ஜடேஜாவை தக்கவைத்து அவர் விளையாடுவார் என்று அறிவித்திருந்தது.

இந்நிலையில் சமீப காலமாகவே கிரிக்கெட் குறித்த கருத்துக்களை தனது youtube சேனல் மூலமாக பேசி வரும் ரவிச்சந்திரன் அஸ்வின் : ரவீந்திர ஜடேஜாவின் இடம் குறித்தும் பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : ரவீந்திர ஜடேஜா இந்த ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே அணிக்காக விளையாட மாட்டார் என்றெல்லாம் பல பேச்சுகள் இருந்தன. ஆனால் இந்த முறையும் ஜடேஜா சென்னை அணிக்காக தான் விளையாடுகிறார்.

- Advertisement -

ஜடேஜாவை டிரேடிங் மூலம் மாற்ற நினைத்தார்கள் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால் அதெல்லாம் எதுவுமே உண்மை கிடையாது. ஜடேஜா போன்ற ஒரு வீரரை வெளியேற்றினால் சென்னை அணிக்கு 16 கோடி மிச்சமாகும். ஆனால் அவரது இடத்திற்கு வேறொரு இந்திய வீரரை நிரப்புவது என்பது முடியாத காரியம். ஜடேஜா போன்று எல்லா துறைகளிலும் சிறப்பாக செயல்பட கூடிய ஒரு வீரருக்கு பதிலாக மாற்று இந்திய வீரரை எப்படி தேர்வு செய்ய முடியும்.

இதையும் படிங்க : சின்ன சின்ன டீம் கிட்ட கூட வெஸ்ட் இண்டீஸ் தோத்து அசிங்கப்பட இதுதான் காரணம் – சந்தர்பால் கருத்து

அதேபோன்று ஜடேஜா வேறொரு அணிக்கு மாறினால் அந்த அணி எவ்வளவு பலமாகும் என்பதை யோசித்துப் பாருங்கள். இதனால்தான் சென்னை அணி நிர்வாகமும் அவரின் மதிப்பை உணர்ந்து தக்க வைத்துள்ளது என அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement