சின்ன சின்ன டீம் கிட்ட கூட வெஸ்ட் இண்டீஸ் தோத்து அசிங்கப்பட இதுதான் காரணம் – சந்தர்பால் கருத்து

Chanderpaul
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தகுதி சுற்றின் முடிவிலேயே வெஸ்ட் இண்டீஸ் அணி வெளியேறியது அனைவரது மத்தியிலும் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் டி20 வரலாற்றில் இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை வென்ற சாம்பியன் அணியான வெஸ்ட் இண்டீஸ் இப்படி தகுதி சுற்றிய போட்டிகளிலேயே சிறிய அணிகளிடம் இருந்து தோல்வியை சந்தித்து சூப்பர் 12 சுற்றிற்கு கூட முன்னேறாதது பல்வேறு தரப்பிலும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

IND vs WI T20I

- Advertisement -

பல நட்சத்திர வீரர்கள் இருந்தும் வெஸ்ட் இண்டீஸ் அணி பெற்ற இப்படி ஒரு சறுக்கல் தற்போது அவர்களுக்கு ஒரு மோசமான தருணமாக மாறி உள்ளது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி இப்படி மோசமான தோல்வியை சந்தித்து டி20 தொடரில் இருந்து வெளியேறியது குறித்து பேசியுள்ள அந்த அணியின் முன்னாள் வீரரான சந்திரபால் கூறுகையில் :

வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரர்கள் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் சொந்த நாட்டு அணிக்காக விளையாடுவதில் ஆர்வம் காட்டவில்லை. அதனாலேயே சிறிய அணிகளுக்கு எதிராக கூட தோல்வியை சந்திக்கிறது. தற்போதுள்ள வீரர்கள் அனைவரும் பணத்திற்காகவே விளையாடி வருகின்றனர்.

INDvsWI

மேலும் வெளிநாட்டு டி20 லீக்குகளில் விளையாடுவதால் பணத்தோடு சேர்த்து பெருமையும் கிடைக்கிறது. அப்படி உலகெங்கிலும் விளையாடி பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தாலேயே அவர்கள் வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்காக விளையாட ஆர்வம் காட்டுவதில்லை. மற்ற நாடுகளுக்கு சென்று விளையாடினால் நம்மால் முடிந்தவரை சம்பாதிக்க முடியும்.

- Advertisement -

அதன் காரணமாகவே பணம் மற்றும் புகழ் ஆகியவற்றாலே அவர்கள் மகிழ்ச்சி அடைந்து சொந்த நாட்டிற்காக விளையாட மறுக்கின்றனர். இப்படி வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாட ஆர்வம் காட்டாததே வெஸ்ட் இண்டீஸ் அண பெற்ற இந்த சறுக்கலுக்கு காரணம் என சந்திரபால் கூறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : என்ன மாலா எறியுதாடி – கலாய்த்த மைக்கேல் வாகனுக்கு ஜாபர் கொடுத்த சிரிக்க வைக்கும் ஹல்க் பதிலடி இதோ

ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருக்கும் பல வீரர்கள் தற்போது வெளிநாட்டு தொடர்களிலேயே நாட்டம் காட்டி வரும் வேளையில் அதனை சரியாக கணித்து கூறியுள்ள சந்தர்பாலின் இந்த கருத்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement