என்ன மாலா எறியுதாடி – கலாய்த்த மைக்கேல் வாகனுக்கு ஜாபர் கொடுத்த சிரிக்க வைக்கும் ஹல்க் பதிலடி இதோ

vaughan
- Advertisement -

உலகப் புகழ்பெற்ற ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் 2023ஆம் ஆண்டு இந்தியாவில் கோலாகலமாக நடைபெறும் நிலையில் அதற்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 23ஆம் தேதியன்று கேரள மாநிலம் கொச்சியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் தங்களது இறுதி வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில் ஐபிஎல் ஆரம்பிக்கப்பட்ட 2008 முதல் இப்போது வரை முதல் கோப்பையை முத்தமிட முடியாமல் திண்டாடி வரும் பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் இந்த வருடம் புதிய கேப்டனாக அறிவித்த மயங் அகர்வாலை சுமாராக செயல்பட்டதால் அதிரடியாக அணியிலிருந்து விடுவித்துள்ளது. அவருக்கு பதிலாக நட்சத்திர சீனியர் வீரர் ஷிகர் தவான் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதோடு நிற்காமல் ஏற்கனவே பயிற்சியாளர் பதவியிலிருந்து அனில் கும்ப்ளேவை நீக்கிய அந்த அணி நிர்வாகம் ட்ராவிஸ் பெயிலிஸை புதிய தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளது. மேலும் துணை பயிற்சிகளாக பிராட் ஹாடின் பந்து வீச்சு பயிற்சியாளராக சார்ல் லாங்க்வெட் ஆகியோரும் புதிதாக பஞ்சாப் அணியில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். அதை விட பேட்டிங் பயிற்சியாளராக நட்சத்திர முன்னாள் வீரர் வாஷிம் ஜாபர் மீண்டும் அந்த அணியில் நியமிக்கப்பட்டுள்ளார். வரலாற்றுச் சிறப்புமிக்க ரஞ்சி கோப்பையில் 10000 ரன்களை குவித்த முதல் வீரராக சாதனை படைத்த அவர் இந்தியாவுக்காகவும் சவாலான தென்னாப்பிரிக்க மண்ணில் சதமடித்து 31 டெஸ்ட் போட்டிகளில் 1994 ரன்களை குவித்து அசத்தினார்.

- Advertisement -

ஏறியுதா மாலா:
இருப்பினும் அதே காலகட்டத்தில் வீரேந்திர சேவாக், கௌதம் கம்பீர் போன்ற வீரர்கள் சவாலாக இருந்ததால் தொடர்ச்சியாக வாய்ப்பை இழந்த அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்று பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக இருந்த அவர் இந்த வருடம் அப்பதவியிலிருந்து வெளியேறிய நிலையில் மீண்டும் அதே பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த நிலையில் அவருக்கு ஒரு ரசிகர் வாழ்த்து தெரிவித்ததை கவனித்த முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் பயிற்சியாளராக வருவதற்கு ஒரு தகுதி இல்லையா என்பது போல் ட்விட்டரில் வழக்கம் போல கலாய்த்தார்.

அதாவது கடந்த 2007ஆம் ஆண்டு இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் ஒரு போட்டியில் மைக்கேல் வாகன் அவருடைய விக்கட்டை எடுத்துள்ளார். அப்படி பகுதி நேர பந்து வீச்சாளர்களின் பட்டியலில் கூட இடம் பெற முடியாத தம்மைப் போன்றவரிடம் அவுட்டான ஒருவர் இன்று பேட்டிங் பயிற்சியாளராகி விட்டார் என்ற வகையில் மைக்கேல் வாகன் கிண்டலடித்தார். சமீப காலங்களாகவே இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டிகளை மையப்படுத்தி இவர்கள் இருவரும் டாம் அண்ட் ஜெரி போல ஒருவரை ஒருவர் தங்களை இப்படி கலாய்ப்பதும் கிண்டலடிப்பதும் வழக்கமாகும். அதில் குறிப்பாக வேண்டுமென்றே மைக்கேல் வாகன் வம்பிழுக்கும் போதெல்லாம் திரும்பி பேசாத வகையில் சினிமா படங்களை வைத்து வாசிம் ஜாபர் நெத்தியடி பதிலை கொடுப்பது ரசிகர்களிடம் மிகவும் பிரபலமாகும்.

- Advertisement -

அந்த நிலையில் கொச்சைப்படுத்தும் வகையில் மீண்டும் கலாய்த்த மைக்கேல் வாகனனுக்கு அவர் என்ன பதிலடி கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அதற்கேற்றார் போலவே தற்போது பிரபல மார்வெல் ஹாலிவுட் திரைப்படங்களில் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்படும் முக்கிய படமான “தி ஹல்க்” திரைப்படத்தின் கதாபாத்திரம் பிரபல “பர்னோல்” எனப்படும் எரிச்சலை அடக்குவதற்காக பயன்படுத்தப்படும் மருந்தை மைக்கேல் வாகனுக்கு கொடுப்பது போல் வாசிம் ஜாஃபர் பதிலடி கொடுத்துள்ளார்.

அதாவது தமக்கு நல்ல பதவி கிடைத்த வயித்தெறிச்சலில் மைக்கேல் வாகன் இப்படி புலம்புவதாகவும் அதை அடக்குவதற்கு அந்த மருந்தை கொடுக்கும் தாம் எப்போதுமே ஹல்க் போன்ற பலமானவன் என்பதை வாசிம் ஜாஃபர் ஒரு புகைப்படத்தின் வாயிலாக நெத்தியடி பதிலாக கொடுத்திருக்கிறார். இதைப் பார்க்கும் தமிழக கிரிக்கெட் ரசிகர்களுக்கு வடிவேலு பாணியில் எறியுதடி மாலா என்ற நகைச்சுவை நினைவுக்கு வரும் என்றே கூறலாம்.

Advertisement