உங்கள விட எங்களுக்கு ரொம்ப கஷ்டமா தான் இருக்கு. அதற்கு என்ன பண்றது – அஷ்வின் பகிர்ந்த வேதனை

Ashwin
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியானது சூப்பர் 12 சுற்றின் முடிவில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதி சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறிய வேளையில் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியிடம் படுமோசமான தோல்வியை சந்தித்து அந்த தொடரில் இருந்து வெளியேறியது. இப்படி தொடரின் ஆரம்பத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவிட்டு முக்கியமான அரையிறுதி போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்த இந்திய அணி குறித்து தற்போது பல்வேறு தரப்பிலும் இருந்து விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன.

அதேபோன்று கடந்த பல ஆண்டுகளாகவே ஐசிசி நடத்தும் கோப்பையை கைப்பற்ற முடியாமல் தவிக்கும் இந்திய அணி இம்முறையையும் தோல்வியை சந்தித்துள்ளதால் அடுத்த உலக கோப்பைக்கு தயாராகும் படி அணியில் பல்வேறு மாற்றங்களை செய்ய வேண்டும். இனி சீனியர் வீரர்கள் என்றெல்லாம் பார்க்கக்கூடாது என்று ஏகப்பட்ட கருத்துக்கள் சமூக வலைதளத்தில் இந்திய அணிக்கு எதிராக எழுந்துள்ளன.

- Advertisement -

இப்படி ஒரு சூழலில் இந்திய அணி இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் தோல்வி அடைந்த ஏமாற்றம் குறித்து தனது youtube சேனல் பக்கத்தில் பேசியுள்ள தமிழக கிரிக்கெட் வீரர் அஷ்வின் கூறுகையில் :

இந்திய அணி இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை என்பது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை தந்திருக்கும் அதனை நான் ஒப்புக்கொள்கிறேன். அதே வேளையில் ரசிகர்களாகிய நீங்கள் எந்த அளவிற்கு ஏமாற்றத்தை சந்தித்து சோகத்தில் இருக்கிறீர்களோ அதனை விட அணியில் விளையாடிய வீரர்களாகிய நாங்கள் 200-300 மடங்கு அதிக அளவு வேதனைப்பட்டு வருகிறோம்.

- Advertisement -

இந்த தோல்விக்காக நாங்கள் எந்த காரணத்தையும் கூற முடியாது. ஆனால் இதிலிருந்து நாம் முன்னேறி கடந்து செல்ல வேண்டும் அல்லவா? இந்த உலகக் கோப்பை தொடரானது ஒரு மோசமான தொடராக நாம் பார்க்க முடியாது.

இதையும் படிங்க : முக்கியமான தொடரில் எல்லாம் ஏன் இப்படி பண்றீங்க? ரோஹித்தை நேரடியாக தாக்கிய – அஜய் ஜடேஜா

ஏனெனில் இதுபோன்ற ஒரு பெரிய உலககோப்பை தொடரில் அரையிறுதி சுற்று மற்றும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவது என்பதே பெரிய சாதனைதான். அந்த வகையில் இந்திய அணி அரையிறுதி வரை முன்னேறியது நிச்சயம் பெரிய விடயம் தான் என இந்திய அணியின் தற்போதைய சூழ்நிலை குறித்து அஷ்வின் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement