முக்கியமான தொடரில் எல்லாம் ஏன் இப்படி பண்றீங்க? ரோஹித்தை நேரடியாக தாக்கிய – அஜய் ஜடேஜா

Ajay-Jadeja
- Advertisement -

இந்திய அணியின் முழுநேர கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகியதை அடுத்து இதுவரை ஆறு வீரர்கள் மாற்றி மாற்றி கேப்டன் பொறுப்பை பெற்று இந்திய அணியை வழி நடத்தி வருகின்றனர். முக்கியமான தொடர்களில் சீனியர் வீரர்கள் ஓய்வு எடுத்துக் கொள்வதும், அதேபோன்று கேப்டன் என்ற பொறுப்பை உணராமல் அவர்களும் அடிக்கடி காயத்தை காரணம் காட்டி வெளியேறுவதும் இந்திய அணியில் வாடிக்கையாகிவிட்டது.

IND vs ZIM Hardik Pandya Bhuvneswar Kumar Rohit Sharma

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடருக்கு அடுத்து தற்போது நியூசிலாந்து சென்றுள்ள இந்திய டி20 அணிக்கு ஹார்டிக் பாண்டியாவும், ஒருநாள் அணிக்கு தவானும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர். இப்படி நியூசிலாந்து போன்ற பெரிய அணியை எதிர்கொள்ளும் போது சீனியர் வீரர்களுக்கு ஓய்வு வழங்குவது சரிதானா என்று பல்வேறு தரப்பிலும் கேள்விகள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் இப்படி பெரிய தொடரில் சீனியர் வீரர்கள் எடுக்கும் ஓய்வு குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான அஜய் ஜடேஜா கூறுகையில் : எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் தங்கள் நாட்டுக்காக விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் உலகம் முழுவதும் உள்ள தொடர்களில் சென்று விளையாடலாம் அதில் எந்தவித சிக்கலும் இல்லை.

IND vs RSA MIller Rahul Rohit Suryakumar

ஆனால் நாட்டுக்காக விளையாடும் வாய்ப்பு இருந்தும் நீங்கள் அப்படி வேறு நாட்டுக்கு சென்று டி20 தொடரில் விளையாடினால் அது நிச்சயம் சிக்கலை கொடுக்கும். அதே போன்று வங்கதேசம், ஜிம்பாப்வே போன்ற சிறிய நாடுகளுக்கு எதிராக சீனியர் வீரர்கள் ஓய்வு எடுத்துக்கொண்டு பெரிய அணிகளுக்கு எதிராக மட்டுமே விளையாடும் கலாச்சாரம் மிகவும் தவறு.

- Advertisement -

ஏனெனில் தற்போது சிறிய அணிகள் கூட மிகச் சிறப்பாக விளையாட துவங்கிவிட்டனர். எனவே எந்த தொடராக இருந்தாலும் அணியில் உள்ள வீரர்கள் தொடர்ச்சியாக விளையாட வேண்டியது அவசியம். அப்போதுதான் அணியின் வலிமை பலப்படும். ஆனால் நீங்கள் சிறிய அணிக்கு எதிராக ஓய்வு எடுத்துக்கொண்டு பெரிய அணிகளுக்கு எதிராக விளையாடும் போது சொதப்பினால் அது அணிக்கு சறுக்களைத்தான் தரும்.

இதையும் படிங்க : அவர மாதிரி என்னால கனவுல கூட அடிக்க முடியாது – இந்திய வீரர் பற்றி நியூசிலாந்து அதிரடி நாயகன் கிளென் பிலிப்ஸ் வியப்பு

எனவே அணி வளர்ச்சியடைய எது தேவையோ அதனை செய்ய வேண்டும். இப்போதெல்லாம் கேப்டன்களே கூட முக்கியமான தொடர்களில் ஓய்வெடுத்துக் கொள்வது வாடிக்கையாகிவிட்டது என நேரடியாகவே ரோகித் சர்மாவை தாக்கி அஜய் ஜடேஜா பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement