என்னுடைய டெஸ்ட் ரிட்டயர்மென்ட் எப்போது ? அஷ்வின் அளித்த சுவாரசிய பதில் – வியக்கவைக்கும் தகவல்

Ashwin-3
- Advertisement -

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹர்பஜன் சிங்கின் சாதனையை முறியடித்து 419 விக்கெட்டுகள் உடன் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். அவரின் கரியரில் இன்னும் சில ஆண்டுகள் மீதம் இருப்பதால் நிச்சயம் அணில் கும்ப்ளே-வின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு அவருக்கு உள்ளது என கிரிக்கெட் வல்லுனர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்.

ashwin 3

- Advertisement -

இந்நிலையில் கடந்த 2017-ஆம் ஆண்டு அஷ்வின் கொடுத்த ஒரு இன்டர்வியூ தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. அதன்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்போது ஓய்வு பெறுவேன் என்பது குறித்து கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே அஷ்வின் அறிவித்துவிட்டார்.

அதன்படி நான் ஓய்வு பெறுவது எப்போதெனில் : கும்ப்ளேவின் சாதனையை முறியடிப்பதற்கு முன்னர் 618 விக்கெட்டுகள் எடுக்கும்போது நான் ஓய்வு பெற்று விடுவேன் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் அணில் கும்ப்ளேவின் மிகப்பெரிய ரசிகன். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 619 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Ashwin

ஒருவேளை நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் 618 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் அதுவே எனக்கு போதுமானதாக இருக்கும். எனவே 618 விக்கெட்டுகளை எடுக்கும் அந்த போட்டியே எனது டெஸ்ட் கிரிக்கெட்டின் கடைசி போட்டியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். அவரின் இந்த சுவாரஸ்யமான பேட்டி தற்போது இணையத்தில் படுவேகமாக வைரலாகியுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : உண்மையா சொல்றேன். அஷ்வின் செய்த இந்த சாதனை மிகப்பெரியது – பாராட்டிய ராகுல் டிராவிட்

இன்னும் அஷ்வினுக்கு ஐந்து ஆறு ஆண்டுகாலம் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பு உள்ள நிலையில் அஷ்வின் கும்ப்ளேவின் சாதனையை முறியடிக்க விரும்பவில்லை என்றும் இந்திய அணி சார்பாக நான் அதிக விக்கெட்டுகள் குவித்தவர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் வந்தால் போதும் என்று பெருந்தன்மையுடன் கூறியிருப்பது தற்போது ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement