அவங்க இப்படி பண்ணுவாங்கனு எனக்கு 2 நாளுக்கு முன்னாடியே தெரியும். டெஸ்ட் பைனல் குறித்து பேசிய – ரவிச்சந்திரன் அஷ்வின்

Ashwin
- Advertisement -

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி மீண்டும் ஒருமுறை ஐசிசி கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. வரலாற்றில் இரண்டாவது முறையாக நடைபெற்று முடிந்த இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் மீண்டும் ஒருமுறை இந்திய அணி கோப்பையை தவற விட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு இந்த முக்கியமான இறுதி போட்டியில் தமிழக சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வினை சேர்க்காதது தவறு என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து இருந்தனர்.

IND vs AUS

- Advertisement -

அந்த வகையில் ஏற்கனவே பாண்டிங் : அஸ்வின் இல்லாமல் சென்றதனால் இந்திய அணி தவறு செய்து விட்டது என்று போட்டி துவங்கும் முன்னரே கூறியிருந்தார். ஏனெனில் இந்திய அணி முதல் இன்னிங்சை மட்டுமே மனதில் வைத்து அஸ்வினை எடுக்காமல் தவறு செய்து விட்டது. ஆனால் இரண்டாவது இன்னிங்சில் சுழற்பந்து வீச்சாளர் நிச்சயம் இந்திய அணிக்கு பெரிய பலமாக இருப்பார் என்று சுட்டிக்காட்டி இருந்தார். அதேபோன்று சச்சின் மற்றும் கவாஸ்கர் கூட உலகின் நம்பர் 1 வீரரை அணியில் சேர்க்காமல் இருந்தது தவறு என்று கூறியிருந்தனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தற்போது பேசியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் கூறுகையில் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் நான் பங்களிக்க வேண்டும் என்று ஆர்வமாக இருந்தேன். இறுதிப்போட்டியில் விளையாடி என்னுடைய முழு திறனையும் வெளிப்படுத்த வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருந்தேன். ஏனெனில் இந்த இடத்திற்கு வருவதற்கு என்னுடைய பங்களிப்பு பெரிதளவு இருந்தது என நம்புகிறேன்.

Ashwin

கடந்த 2021-ஆம் ஆண்டு கூட நான் இங்கிலாந்து மண்ணில் சிறப்பாக பந்துவீசி இருந்தேன். இருந்தாலும் அணியின் நலனுக்காக இந்த முடிவை எடுத்துள்ளார்கள். உண்மையிலேயே இங்கு பிரச்சனை என்னவென்றால் இது போன்ற ஆடுகளத்தில் ஒரு சுழற்பந்து வீச்சாளருக்கு நான்காவது இன்னிங்ஸில் மட்டும்தான் சாதகம் இருக்கும் என்பதனாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கலாம்.

- Advertisement -

நான் இந்த போட்டியில் பங்கேற்க முடியாமல் போனாலும் என்னுடைய அணி வெற்றிபெற வேண்டும் என்பதை மட்டுமே என்னுடைய எண்ணம் என்று அஸ்வின் கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : எல்லாவற்றையும் தாண்டி இறுதிப்போட்டியில் நான் பங்கேற்க மாட்டேன் என்பது 48 மணி நேரத்திற்கு முன்பதாகவே எனக்கு தெரியும். அப்போதே இந்திய அணி நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு சுழற்பந்து வீச்சாளராக ஜடேஜா உடன் செல்வதை முடிவு செய்து விட்டார்கள்.

இதையும் படிங்க : சிஎஸ்கே நிர்வாக அணியின் கேப்டனாக டு பிளேஸிஸ் அறிவிப்பு – மீண்டும் ஒன்று சேரும் மஞ்சள் படை, அணி வீரர்கள் இதோ

இருந்தாலும் என்னால் இந்த இறுதி போட்டியில் ஒரு வாய்ப்பை பெற முடியவில்லையே என்ற பெரிய ஏமாற்றம் இருந்தது. ஆனாலும் நான் என்னுடைய அணியின் வெற்றியில் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அதுவே என்னுடைய எண்ணம் என அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement