- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தற்போதைய இந்தியாவின் மிகச்சிறந்த வீரர் என்றால் அது இவர்மட்டும் தான் – தமிழக வீரர் அஷ்வின் பாராட்டு

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது நடைபெற உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது செப்டம்பர் 19-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்குகிறது. இந்த போட்டிக்காக ஆயத்தமாகும் வகையில் தற்போது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சினை மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவின் சிறந்த வீரர் :

இந்நிலையில் இந்த தொடரில் விளையாட இருக்கும் தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தியாவின் தற்போதைய தலைசிறந்த வீரர் யார்? என்பது குறித்த தனது கருத்தினை தெரிவித்துள்ளார். அப்படி அவர் கூறிய அந்த கருத்தில் :

- Advertisement -

ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரை தவிர்த்து பும்ரா தான் தற்போதைய இந்தியாவின் சிறந்த வீரராக விளங்குகிறார் என்று பதில் அளித்துள்ளார். எப்பொழுதுமே பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணியில் தற்போது ஒரு பந்துவீச்சாளர் ஆதிக்கம் செலுத்துவது மகிழ்ச்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில் கூறியதாவது : இந்தியாவில் எப்போதுமே பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் தான் அதிகமாக இருந்து வந்தது. ஆனால் தற்போது முதல் முறையாக ஒரு பவுலர் அந்த இடத்தை பிடித்திருக்கிறார் என்பதில் மிகவும் மகிழ்ச்சி. பும்ரா நமது சகாப்தத்தில் கிடைக்கும் ஒரு பவுலராக இருக்கிறார்.

- Advertisement -

பும்ராவை நாம் அதிகம் கொண்டாட வேண்டும். சென்னை மதுக்கள் எப்பொழுதுமே பவுலர்களை அதிகம் விரும்புவார்கள். அந்த வகையில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பே சென்னை வந்த அவரை ஒரு நிகழ்ச்சி ஒன்றில் விருந்தினராக அழைத்திருந்தார்கள். அந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்தை கொண்டாடியது போல் பும்ராவை ரசிகர்கள் கொண்டாடியிருந்தனர்.

இதையும் படிங்க : அவர் சொல்றது எனக்கு உண்மைன்னு தோணல.. சி.எஸ்.கே வீரர் குறித்து சந்தேகத்தை கிளப்பிய – பியூஷ் சாவ்லா

இப்படி ஒரு பவுலருக்கு மரியாதை கிடைக்கும் இடமாக எப்பொழுதுமே சென்னை ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். பும்ரா ஒரு சாம்பியன் வீரர் தற்போதைய இந்திய அணியின் மதிப்பு மிக்க வீரரும் அவர்தான் என அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -