உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 21 வயதான அதிரடி பேட்ஸ்மேனான சமீர் ரிஸ்வி உள்ளூர் போட்டிகளில் தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தியதால் கடந்த ஆண்டு சிஎஸ்கே அணிக்காக 8.4 கோடி என்கிற பெரிய தொகைக்கு வாங்கப்பட்டார். அந்த வகையில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 8 போட்டிகளில் விளையாடிய அவர் 51 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார்.
அவர் சொல்வதை நம்ப முடியவில்லை :
ஆனாலும் தான் அறிமுகமான போட்டியின் முதல் பந்திலே ரஷீத் கான் போன்ற மாபெரும் ஸ்பின்னரை எதிர்த்து முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்து அசர வைத்திருந்தார். இந்த சீசனில் அவருக்கு பெரிய அளவில் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு நிச்சயம் சிஎஸ்கே அணி அவரை தொடர்ச்சியாக ஏலத்தில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனாலும் ஐபிஎல் தொடரில் அவர் பெரிய அளவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாததால் அவரை எடுக்க வேண்டாம் என்று ரசிகர்கள் ஒருபுறம் பேசி வருகின்றனர். இந்நிலையில் நடைபெற்று வரும் உத்தர பிரதேச டி20 லீக்கில் பங்கேற்று விளையாடி வரும் அவர் இதுவரை 10 போட்டியில் விளையாடிய 366 ரன்கள் குவித்துள்ளார்.
பின் வரிசையில் களமிறங்கும் சமீர் ரிஸ்வி பேட்டிங்கில் அடித்து நொறுக்குவதால் அவர் நிச்சயம் எதிர்காலத்தில் சிஎஸ்கே அணிக்காக சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 21 வயது ஆன சமீர் ரிஸ்வியை நேரில் சந்தித்தது பேசியதாக கூறியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரரான பியூஷ் சாவ்லா கூறுகையில் :
நான் அண்மையில் சமீர் ரிஸ்வியை சந்தித்தேன். அப்போது அவரின் வயதை கேட்டேன் அவர் என்னிடம் 21 வயது என்று பதிலளித்தார். ஆனால் அவர் சொன்னதில் எனக்கு நம்பிக்கை இல்லை. எனக்கு தெரிந்தவரை அவரின் வயது 21 ஆக இருக்க வாய்ப்பே இல்லை என்று கூறியுள்ளார். இப்படி பியூஷ் சாவ்லா அவரின் வயது குறித்து சந்தேகத்தை கிளப்பியுள்ளது புதிய சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : அதுல கிங்கா இருந்துட்டா போதாது.. கோலி பதவியை விட்டுட்டு செய்றதை பாருங்க.. பாபருக்கு யூனிஸ் கான் அட்வைஸ்
ஏனெனில் இந்திய கிரிக்கெட் நிர்வாக விதிமுறையின்படி வயது மாற்றம் சர்ச்சையில் சிக்கும் வீரர்களுக்கு பெரிய தண்டனை வழங்கப்படும். இதன் காரணமாக சமீர் ரீஸ்வியின் மீதும் ஏதாவது சந்தேகம் எழுமோ? என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஒருவேளை அப்படி நிர்வாகம் சமீர் ரிஸ்விஇன் வயது சர்ச்சை குறித்து விளக்கம் கேட்டால் நிச்சயம் அதற்கு உண்டான ஆவணங்களை அவர் சமர்ப்பிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.