அதுல கிங்கா இருந்துட்டா போதாது.. கோலி பதவியை விட்டுட்டு செய்றதை பாருங்க.. பாபருக்கு யூனிஸ் கான் அட்வைஸ்

Younis Khan
- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்சமயத்தில் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. குறிப்பாக சமீபத்திய ஐசிசி தொடர்களில் ஜிம்பாப்வே, அமெரிக்கா போன்ற கத்துக்குட்டிகளிடம் பாகிஸ்தான் பரிதாபமாக தோற்றது. அதன் உச்சமாக வங்கதேசத்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் முதல் முறையாக 2 – 0 (2) என்ற கணக்கில் பாகிஸ்தான் அவமானத் தோல்வியை சந்தித்தது.

பாகிஸ்தானின் இந்த தோல்விக்கு பாபர் அசாம் மிகவும் முக்கிய காரணமாக கருதப்படுகிறார். ஏனெனில் பாகிஸ்தான் பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் அவர் சமீபத்திய வருடங்களாகவே சுமாராக விளையாடி வருகிறார். இருப்பினும் அவரை சில கண்மூடித்தனமான பாகிஸ்தான் ரசிகர்கள் கிங் என்று விராட் கோலியுடன் ட்விட்டரில் ஒப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

- Advertisement -

செயலில் காட்டுங்க:

இந்நிலையில் பாபர் அசாம் சமூக வலைதளங்களை காட்டிலும் களத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று முன்னாள் கேப்டன் யூனிஸ் கான் அறிவுரை தெரிவித்துள்ளார். மேலும் விராட் கோலி கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்த பின் இந்தியாவுக்காக அபாரமாக விளையாடி வெற்றிகளை பெற்றுக் கொடுத்த வருவதாக அவர் பாராட்டியுள்ளார். எனவே அவரை பாபர் அசாம் பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கும் யூனிஸ் கான் இது பற்றி பேசியது பின்வருமாறு.

“அந்த சமயத்தில் பாபர் அசாம் சிறந்த வீரராக இருந்ததாலேயே அவரை கேப்டனாக நியமித்தோம். அந்த முடிவு எடுக்கப்பட்ட போது நானும் நிர்வாகத்தில் இருந்தேன். அணியின் சிறந்த வீரர் தான் கேப்டனாக இருக்க வேண்டும். இப்போதெல்லாம் நமது வீரர்கள் தங்களது செயல்பாடுகளை விட அதிகமாக பேசுகின்றனர். அப்படிப் பேசுபவர்கள் களத்தில் செயல்பாடுகளை வெளிப்படுத்தினால் முடிவுகள் வேறு மாதிரி இருந்திருக்கும்”

- Advertisement -

விராட் கோலியை பாருங்க:

“பாபர் மீது அதிகப்படியான எதிர்பார்ப்புகள் இருக்கிறது. வீரர்கள் சமூக வலைதளங்களை ஞானமாக பயன்படுத்த வேண்டும். அவர்களுடைய உண்மையான பதிலடிகள் களத்தில் பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய செயல்பாடுகளில் வரவேண்டும். பாபர் அசாம் தன்னுடைய ஃபிட்னஸ் மற்றும் நெறிமுறைகளில் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் இது போன்ற வாய்ப்புகள் எப்போதும் கிடைக்காது”

இதையும் படிங்க: % அட்டிடியூட் என்னா மனுஷன்ங்க.. சென்னையில் ரசிகருக்காக விராட் கோலி செய்த நெகிழ்ச்சியான செயல்

“தனது இளம் வயதில் நிறைய சாதித்துள்ள அவர் வருங்காலத்தில் என்ன சாதிக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். கேப்டன்ஷிப் என்பது சிறிய விஷயமாகும். உங்களின் சொந்த செயல்பாடுகள் தான் முக்கியம். விராட் கோலியை பாருங்கள். கேப்டன்ஷிப் பொறுப்பிலிருந்து வெளியே வந்த பின் அவர் உலக அளவில் சாதனைகளை உடைத்து வருகிறார். அது நாட்டுக்காக விளையாடுவதே மிகவும் முக்கியம் என்பதை காட்டுகிறது” என்று கூறினார்.

Advertisement